பரிசுத்த வேதாகமம் ஓசியா அதிகாரம் 14 – Read Holy Bible Book Of Hosea Chapter 14 In Tamil With English Reference
1 - இஸ்ரவேலே, உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய்.
English:- Return, O Israel, To The Lord Your God. Your Sins Have Been Your Downfall!
2 - வார்த்தைகளைக்கொண்டு கர்த்தரிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாய் அங்கீகரித்தருளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் காளைகளைச் செலுத்துவோம்.
English:- Take Words With You And Return To The Lord . Say To Him: "Forgive All Our Sins And Receive Us Graciously, That We May Offer The Fruit Of Our Lips.
3 - அசீரியா எங்களை இரட்சிப்பதில்லை; நாங்கள் குதிரைகளின்மேல் ஏறமாட்டோம்; எங்கள் கைகளின் கிரியையைப்பார்த்து: நீங்கள் எங்கள் தேவர்களென்று இனிச் சொல்லமாட்டோம்; திக்கற்றவன் உம்மிடத்தில் இரக்கம்பெறுகிறான் என்று சொல்லுங்கள்.
English:- Assyria Cannot Save Us; We Will Not Mount War-horses. We Will Never Again Say 'Our Gods' To What Our Own Hands Have Made, For In You The Fatherless Find Compassion."
4 - நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்; என் கோபம் அவர்களைவிட்டு நீங்கிற்று.
English:- "I Will Heal Their Waywardness And Love Them Freely, For My Anger Has Turned Away From Them.
5 - நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போலிருப்பேன்; அவன் லீலிப் புஷ்பத்தைப்போல் மலருவான்; லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான்.
English:- I Will Be Like The Dew To Israel; He Will Blossom Like A Lily. Like A Cedar Of Lebanon He Will Send Down His Roots;
6 - அவன் கிளைகள் ஓங்கிப் படரும், அவன் அலங்காரம் ஒலிவமரத்தினுடைய அலங்காரத்தைப்போலவும், அவனுடைய வாசனை லீபனோனுடைய வாசனையைப்போலவும் இருக்கும்.
English:- His Young Shoots Will Grow. His Splendor Will Be Like An Olive Tree, His Fragrance Like A Cedar Of Lebanon.
7 - அவன் நிழலில் குடியிருக்கிறவர்கள் திரும்புவார்கள்; தானிய விளைச்சலைப்போலச் செழித்து, திராட்சச்செடிகளைப்போலப் படருவார்கள்; அவன் வாசனை லீபனோனுடைய திராட்சரசத்தின் வாசனையைப்போல இருக்கும்.
English:- Men Will Dwell Again In His Shade. He Will Flourish Like The Grain. He Will Blossom Like A Vine, And His Fame Will Be Like The Wine From Lebanon.
8 - இனி எனக்கும் விக்கிரகங்களுக்கும் என்ன என்று எப்பிராயீம் சொல்லுவான்; நான் அவனுக்குச் செவிகொடுத்து, அவன்மேல் நோக்கமாயிருந்தேன்; நான் பச்சையான தேவதாரு விருட்சம்போலிருக்கிறேன்; என்னாலே உன் கனியுண்டாயிற்று என்று எப்பிராயீம் சொல்லுவான்.
English:- O Ephraim, What More Have I To Do With Idols? I Will Answer Him And Care For Him. I Am Like A Green Pine Tree; Your Fruitfulness Comes From Me."
9 - இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? இவைகளைக் கிரகிக்கத்தக்க புத்தியுள்ளவன் யார்? கர்த்தருடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள்; பாதகரோவென்றால் அவைகளில் இடறிவிழுவார்கள்.
English:- Who Is Wise? He Will Realize These Things. Who Is Discerning? He Will Understand Them. The Ways Of The Lord Are Right; The Righteous Walk In Them, But The Rebellious Stumble In Them.