பரிசுத்த வேதாகமம் ஏசாயா அதிகாரம் 10 – Read Holy Bible Book Of Isaiah Chapter 10 In Tamil With English Reference
1 - ஏழைகளை வழக்கிலே தோற்கப்பண்ணவும், என் ஜனத்தில் சிறுமையானவர்களின் நியாயத்தைப் புரட்டவும், விதவைகளைச் சூறையாடவும், திக்கற்ற பிள்ளைகளைக் கொள்ளையிடவும்,
English:- Woe To Those Who Make Unjust Laws, To Those Who Issue Oppressive Decrees,
2 - அநியாயமான தீர்ப்புகளைச் செய்கிறவர்களுக்கும், கொடுமையான கட்டளைகளை எழுதுகிறவர்களுக்கும் ஐயோ!
English:- To Deprive The Poor Of Their Rights And Withhold Justice From The Oppressed Of My People, Making Widows Their Prey And Robbing The Fatherless.
3 - விசாரிப்பின் நாளிலும், தூரத்திலிருந்து வரும் பாழ்க்கடிப்பின் நாளிலும் நீங்கள் என்னசெய்வீர்கள்? உதவிபெறும்படி யாரிடத்தில் ஓடுவீர்கள்? உங்கள் மகிமையை எங்கே வைத்து விடுவீர்கள்?
English:- What Will You Do On The Day Of Reckoning, When Disaster Comes From Afar? To Whom Will You Run For Help? Where Will You Leave Your Riches?
4 - கட்டுண்டவர்களின்கீழ் முடங்கினாலொழிய கொலைசெய்யப்பட்டவர்களுக்குள் விழுவார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் ஆறாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.
English:- Nothing Will Remain But To Cringe Among The Captives Or Fall Among The Slain. Yet For All This, His Anger Is Not Turned Away, His Hand Is Still Upraised.
5 - என் கோபத்தின் கோலாகிய அசீரியனுக்கு ஐயோ! அவன் கையிலிருக்கிறது என் சினத்தின் தண்டாயுதம்.
English:- "Woe To The Assyrian, The Rod Of My Anger, In Whose Hand Is The Club Of My Wrath!
6 - அவபக்தியான ஜனங்களுக்கு விரோதமாய் நான் அவனை அனுப்பி, எனக்குக் கோபமூட்டின ஜனத்தைக்கொள்ளையிடவும், சூறையாடவும், அதை வீதிகளின் சேற்றைப்போல் மிதித்துப்போடவும் அவனுக்குக் கட்டளைகொடுப்பேன்.
English:- I Send Him Against A Godless Nation, I Dispatch Him Against A People Who Anger Me, To Seize Loot And Snatch Plunder, And To Trample Them Down Like Mud In The Streets.
7 - அவனோ அப்படி எண்ணுகிறதுமில்லை, அவன் இருதயம் அப்படிப்பட்டதை நினைக்கிறதுமில்லை; அநேகம் ஜாதிகளை அழிக்கவும், சங்கரிக்கவுமே தன் மனதிலே நினைவுகொள்ளுகிறான்.
English:- But This Is Not What He Intends, This Is Not What He Has In Mind; His Purpose Is To Destroy, To Put An End To Many Nations.
8 - அவன்: என் பிரபுக்கள் அனைவரும் ராஜாக்களல்லவோ?
English:- 'Are Not My Commanders All Kings?' He Says.
9 - கல்னோ பட்டணம் கர்கேமிசைப்போலானதில்லையோ? ஆமாத் அர்பாத்தைப்போலானதில்லையோ? சமாரியா தமஸ்குவைப்போலானதில்லையோ?
English:- 'Has Not Calno Fared Like Carchemish? Is Not Hamath Like Arpad, And Samaria Like Damascus?
10 - எருசலேமையும் சமாரியாவையும் பார்க்கிலும் விசேஷித்த சிலைகளுள்ள விக்கிரக ராஜ்யங்களை என் கை கண்டுபிடித்திருக்க,
English:- As My Hand Seized The Kingdoms Of The Idols, Kingdoms Whose Images Excelled Those Of Jerusalem And Samaria-
11 - நான் சமாரியாவுக்கும், அதின் விக்கிரகங்களுக்கும் செய்ததுபோல், எருசலேமுக்கும் அதின் விக்கிரகங்களுக்கும் செய்யாமலிருப்பேனோ என்று சொல்லுகிறான்.
English:- Shall I Not Deal With Jerusalem And Her Images As I Dealt With Samaria And Her Idols?' "
12 - ஆதலால்: ஆண்டவர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் தமது செயலையெல்லாம் முடித்திருக்கும்போது, அசீரிய ராஜாவினுடைய பெருமையான நெஞ்சின் வினையையும், அவன் கண்களின் மேட்டிமையான பார்வையையும் நான் விசாரிப்பேன் என்கிறார்.
English:- When The Lord Has Finished All His Work Against Mount Zion And Jerusalem, He Will Say, "I Will Punish The King Of Assyria For The Willful Pride Of His Heart And The Haughty Look In His Eyes.
13 - அவன்: என் கையின் பெலத்தினாலும், என் ஞானத்தினாலும் இதைச்செய்தேன்; நான் புத்திமான், நான் ஜனங்களின் எல்லைகளை மாற்றி, அவர்கள் பண்டகசாலைகளைக் கொள்ளையிட்டு வல்லவனைப்போல் குடிகளைத் தாழ்த்தினேன்.
English:- For He Says: " 'By The Strength Of My Hand I Have Done This, And By My Wisdom, Because I Have Understanding. I Removed The Boundaries Of Nations, I Plundered Their Treasures; Like A Mighty One I Subdued Their Kings.
14 - ஒரு குருவிக்கூட்டைக் கண்டுபிடிக்கிறதுபோல என் கை ஜனங்களின் ஆஸ்தியைக் கண்டுபிடித்தது; விட்டுவிடப்பட்ட முட்டைகளை வாரிக்கொள்வதுபோல் பூமியையெல்லாம் நான் வாரிக்கொண்டேன்; ஒருவரும் செட்டையை அசைத்ததுமில்லை, வாயைத் திறந்ததுமில்லை, கீச்சென்று சத்தமிட்டதுமில்லை என்று சொல்லுகிறான்.
English:- As One Reaches Into A Nest, So My Hand Reached For The Wealth Of The Nations; As Men Gather Abandoned Eggs, So I Gathered All The Countries; Not One Flapped A Wing, Or Opened Its Mouth To Chirp.' "
15 - கோடரியானது தன்னால் வெட்டுகிறவனுக்கு விரோதமாய் மேன்மை பாராட்டலாமோ? வாளானது தன்னைக் கையாடுகிறவனுக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டலாமோ? பாராட்டினால், தடியானது தன்னைப் பிடித்தவனை மிரட்டினாற்போலவும், கோலானது நான் மரக்கட்டையல்லவென்று எழும்பினாற்போலவும் இருக்குமே.
English:- Does The Ax Raise Itself Above Him Who Swings It, Or The Saw Boast Against Him Who Uses It? As If A Rod Were To Wield Him Who Lifts It Up, Or A Club Brandish Him Who Is Not Wood!
16 - ஆகையால் சேனைகளின் ஆண்டவராகிய கர்த்தர், அவனைச்சேர்ந்த கொழுத்தவர்களுக்குள்ளே இளைப்பை அனுப்புவார்; பட்சிக்கும் அக்கினியைப்போலும் ஒரு அக்கினியை அவன் மகிமையின்கீழ் கொளுத்துவார்.
English:- Therefore, The Lord, The Lord Almighty, Will Send A Wasting Disease Upon His Sturdy Warriors; Under His Pomp A Fire Will Be Kindled Like A Blazing Flame.
17 - இஸ்ரவேலின் ஒளியானவர் அக்கினியும், அதின் பரிசுத்தர் அக்கினிஜுவாலையுமாகி, ஒரேநாளிலே அவனுடைய முட்செடிகளையும், நெரிஞ்சில்களையும் தகித்துப் பட்சித்து,
English:- The Light Of Israel Will Become A Fire, Their Holy One A Flame; In A Single Day It Will Burn And Consume His Thorns And His Briers.
18 - அவனுடைய வனத்தின் மகிமையையும், அவனுடைய பயிர்நிலத்தின் மகிமையையும், உள்ளும் புறம்புமாய் அழியப்பண்ணுவார்; கொடிபிடிக்கிறவன் களைத்து விழுவதுபோலாகும்.
English:- The Splendor Of His Forests And Fertile Fields It Will Completely Destroy, As When A Sick Man Wastes Away.
19 - காட்டில் அவனுக்கு மீதியான மரங்கள் கொஞ்சமாயிருக்கும், ஒரு சிறுபிள்ளை அவைகளை எண்ணி எழுதலாம்.
English:- And The Remaining Trees Of His Forests Will Be So Few That A Child Could Write Them Down.
20 - அக்காலத்திலே இஸ்ரவேலில் மீதியானவர்களும், யாக்கோபின் வம்சத்தில் தப்பினவர்களும், பின்னொருபோதும் தங்களை அடித்தவனைச் சார்ந்துகொள்ளாமல், இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கர்த்தரையே உண்மையாய்ச் சார்ந்துகொள்வார்கள்.
English:- In That Day The Remnant Of Israel, The Survivors Of The House Of Jacob, Will No Longer Rely On Him Who Struck Them Down But Will Truly Rely On The Lord , The Holy One Of Israel.
21 - மீதியாயிருப்பவர்கள், யாக்கோபில் மீதியாயிருப்பவர்களே, வல்லமையுள்ள தேவனிடத்தில் திரும்புவார்கள்.
English:- A Remnant Will Return, A Remnant Of Jacob Will Return To The Mighty God.
22 - இஸ்ரவேலே, உன் ஜனங்கள் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், அவர்களில் மீதியாயிருப்பவர்கள்மாத்திரம் திரும்புவார்கள்; தீர்மானிக்கப்பட்ட அழிவு நிறைந்த நீதியோடே புரண்டுவரும்.
English:- Though Your People, O Israel, Be Like The Sand By The Sea, Only A Remnant Will Return. Destruction Has Been Decreed, Overwhelming And Righteous.
23 - சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் தேசத்துக்குள்ளெங்கும் தீர்மானிக்கப்பட்ட அழிவை வரச்செய்வார்.
English:- The Lord, The Lord Almighty, Will Carry Out The Destruction Decreed Upon The Whole Land.
24 - ஆகையால் சீயோனில் வாசமாயிருக்கிற என் ஜனமே, அசீரியனுக்கு பயப்படாதே; அவன் உன்னைக்கோலால் அடித்து, எகிப்தியரைப்போல் தன் தண்டாயுதத்தை உன்மேல் ஓங்குவான்.
English:- Therefore, This Is What The Lord, The Lord Almighty, Says: "O My People Who Live In Zion, Do Not Be Afraid Of The Assyrians, Who Beat You With A Rod And Lift Up A Club Against You, As Egypt Did.
25 - ஆனாலும் இன்னும் கொஞ்சக்காலத்துக்குள்ளே என் உக்கிரமும், அவர்களைச் சங்கரிக்கப்போகிறதினால் என் கோபமும் தீர்ந்துபோம் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
English:- Very Soon My Anger Against You Will End And My Wrath Will Be Directed To Their Destruction."
26 - ஓரேப் கன்மலையண்டையிலே மீதியானியர் வெட்டுண்டதுபோல் சேனைகளின் கர்த்தர் அவன் மேல் ஒரு சவுக்கை எழும்பிவரப்பண்ணி, எகிப்திலே தமது கோலைக் கடலின்மேல் ஓங்கினதுபோல் அதை அவன்மேல் ஓங்குவார்.
English:- The Lord Almighty Will Lash Them With A Whip, As When He Struck Down Midian At The Rock Of Oreb; And He Will Raise His Staff Over The Waters, As He Did In Egypt.
27 - அந்நாளில் உன் தோளினின்று அவன் சுமையும், உன் கழுத்தினின்று அவன் துக்கமும் நீக்கப்படும்; அபிஷேகத்தின் நுகம் முறிந்துபோம்.
English:- In That Day Their Burden Will Be Lifted From Your Shoulders, Their Yoke From Your Neck; The Yoke Will Be Broken Because You Have Grown So Fat.
28 - அவன் ஆயாத்துக்கு வந்து, மிக்ரோனைக் கடந்து, மிக்மாசிலே தன் ரஸ்துக்களை வைத்திருக்கிறான்.
English:- They Enter Aiath; They Pass Through Migron; They Store Supplies At Micmash.
29 - கனவாயைத் தாண்டி, கேபாவிலே பாளயமிறங்குகிறார்கள்; ராமா அதிர்கிறது; சவுலின் ஊராகிய கிபியா ஓடிப்போகிறது.
English:- They Go Over The Pass, And Say, "We Will Camp Overnight At Geba." Ramah Trembles; Gibeah Of Saul Flees.
30 - காலிம் குமாரத்தியே, உரத்தசத்தமாய்க் கூப்பிடு; ஏழை ஆன தோத்தே, லாயீஷ் ஊர்மட்டும் எட்டசத்தமிட்டுக் கூப்பிடு.
English:- Cry Out, O Daughter Of Gallim! Listen, O Laishah! Poor Anathoth!
31 - மத்மேனா வலசைவாங்கிப்போம், கேபிமின் குடிகள் தப்பிஓடக் கூட்டங்கூடுகிறார்கள்.
English:- Madmenah Is In Flight; The People Of Gebim Take Cover.
32 - இனி ஒருநாள் நோபிலே தங்கி, சீயோன் குமாரத்தியின் பர்வதத்துக்கும், எருசலேமின் மேட்டுக்கும் விரோதமாய்க் கைநீட்டி மிரட்டுவான்.
English:- This Day They Will Halt At Nob; They Will Shake Their Fist At The Mount Of The Daughter Of Zion, At The Hill Of Jerusalem.
33 - இதோ, சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் தோப்புகளைப் பயங்கரமாய் வெட்டுவார்; ஓங்கி வளர்ந்தவைகள் வெட்டுண்டு மேட்டிமையானவைகள் தாழ்த்தப்படும்.
English:- See, The Lord, The Lord Almighty, Will Lop Off The Boughs With Great Power. The Lofty Trees Will Be Felled, The Tall Ones Will Be Brought Low.
34 - அவர் காட்டின் அடர்த்தியைக் கோடரியினால் வெட்டிப்போடுவார்; மகத்துவமானவராலே லீபனோன் விழும்.
English:- He Will Cut Down The Forest Thickets With An Ax; Lebanon Will Fall Before The Mighty One.