பரிசுத்த வேதாகமம் ஏசாயா அதிகாரம் 21 – Read Holy Bible Book Of Isaiah Chapter 21 In Tamil With English Reference
1 - கடல் வனாந்தரத்தின் பாரம். சுழல்காற்று தென்திசையிலிருந்து எழும்பிக் கடந்துவருகிறதுபோல, பயங்கரமான தேசமாகிய வனாந்தரத்திலிருந்து அது வருகிறது.
English:- An Oracle Concerning The Desert By The Sea: Like Whirlwinds Sweeping Through The Southland, An Invader Comes From The Desert, From A Land Of Terror.
2 - கொடிய தரிசனம் எனக்குத் தெரிவிக்கப்பட்டது; துரோகி துரோகம்பண்ணி பாழாக்கிறவன் பாழாக்கிக்கொண்டே இருக்கிறான்; ஏலாமே எழும்பு; மேதியாவே முற்றிக்கைபோடு; அதினாலே உண்டான தவிப்பையெல்லாம் ஒழியப்பண்ணினேன்.
English:- A Dire Vision Has Been Shown To Me: The Traitor Betrays, The Looter Takes Loot. Elam, Attack! Media, Lay Siege! I Will Bring To An End All The Groaning She Caused.
3 - ஆகையால், என் இடுப்பு மகா வேதனையால் நிறைந்திருக்கிறது; பிள்ளைபெறுகிறவளின் வேதனைகளுக்கு ஒத்த வேதனைகள் என்னைப் பிடித்தது; கேட்டதினால் உளைவுகொண்டு, கண்டதினால் கலங்கினேன்.
English:- At This My Body Is Racked With Pain, Pangs Seize Me, Like Those Of A Woman In Labor; I Am Staggered By What I Hear, I Am Bewildered By What I See.
4 - என் இருதயம் திகைத்தது; திகில் என்னைத் திடுக்கிடப்பண்ணிற்று; எனக்கு இன்பந்தந்த இரவு பயங்கரமாயிற்று.
English:- My Heart Falters, Fear Makes Me Tremble; The Twilight I Longed For Has Become A Horror To Me.
5 - பந்தியை ஆயத்தப்படுத்துங்கள், ஜாமக்காரரை வையுங்கள், புசியுங்கள் குடியுங்கள்; பிரபுக்களே, எழுந்து பரிசைகளுக்கு எண்ணெய் பூசுங்கள்.
English:- They Set The Tables, They Spread The Rugs, They Eat, They Drink! Get Up, You Officers, Oil The Shields!
6 - ஆண்டவர் என்னை நோக்கி: நீ போய், காண்பதைத் தெரிவிக்கும்படி ஜாமக்காரனை வை என்றார்.
English:- This Is What The Lord Says To Me: "Go, Post A Lookout And Have Him Report What He Sees.
7 - அவன் ஒரு இரதத்தையும், ஜோடு ஜோடான குதிரைவீரரையும், ஜோடு ஜோடாகக் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஏறிவருகிறவர்களையும் கண்டு, மிகுந்த கவனமாய்க் கவனித்துக்கொண்டே இருந்து:
English:- When He Sees Chariots With Teams Of Horses, Riders On Donkeys Or Riders On Camels, Let Him Be Alert, Fully Alert."
8 - ஆண்டவரே, நான் பகல்முழுதும் என் காவலிலே நின்று, இராமுழுதும் நான் என் காவலிடத்திலே தரித்திருக்கிறேன் என்று சிங்கத்தைப்போல் சத்தமிட்டுக் கூப்பிடுகிறான்.
English:- And The Lookout Shouted, "Day After Day, My Lord, I Stand On The Watchtower; Every Night I Stay At My Post.
9 - இதோ, ஒரு ஜோடு குதிரை பூண்ட இரதத்தின்மேல் ஏறியிருக்கிற ஒரு மனுஷன் வருகிறான்; பாபிலோன் விழுந்தது, விழுந்தது; அதின் விக்கிரகதேவர்களையெல்லாம் தரையோடே மோதி உடைத்தார் என்று பிரதியுத்தரம் சொல்லுகிறான்.
English:- Look, Here Comes A Man In A Chariot With A Team Of Horses. And He Gives Back The Answer: 'Babylon Has Fallen, Has Fallen! All The Images Of Its Gods Lie Shattered On The Ground!' "
10 - என் போரடிப்பின் தானியமே, களத்தின் கோதுமையே, இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தரால் நான் கேள்விப்பட்டதை உங்களுக்கு அறிவித்தேன்.
English:- O My People, Crushed On The Threshing Floor, I Tell You What I Have Heard From The Lord Almighty, From The God Of Israel.
11 - தூமாவின் பாரம். சேயீரிலிருந்து என்னை நோக்கி: ஜாமக்காரனே, இரவு எவ்வளவு சென்றது? என்று கூப்பிட்டுக் கேட்க;
English:- An Oracle Concerning Dumah : Someone Calls To Me From Seir, "Watchman, What Is Left Of The Night? Watchman, What Is Left Of The Night?"
12 - அதற்கு ஜாமக்காரன்: விடியற்காலம் வருகிறது இராக்காலமும் வருகிறது; நீங்கள் கேட்க மனதானால் திரும்பிவந்து கேளுங்கள் என்று சொல்லுகிறான்.
English:- The Watchman Replies, "Morning Is Coming, But Also The Night. If You Would Ask, Then Ask; And Come Back Yet Again."
13 - அரபியாவின் பாரம். திதானியராகிய பயணக்கூட்டங்களே, நீங்கள் அரபியாவின் காடுகளில் இராத்தங்குவீர்கள்.
English:- An Oracle Concerning Arabia: You Caravans Of Dedanites, Who Camp In The Thickets Of Arabia,
14 - தேமாதேசத்தின் குடிகளே, நீங்கள் தாகமாயிருக்கிறவர்களுக்குத் தண்ணீர் கொண்டுபோய், தப்பி ஓடுகிறவர்களுக்கு அப்பங்கொடுக்க எதிர்கொண்டுபோங்கள்.
English:- Bring Water For The Thirsty; You Who Live In Tema, Bring Food For The Fugitives.
15 - அவர்கள், பட்டயங்களுக்கும், உருவின கட்கத்துக்கும் நாணேற்றின வில்லுக்கும், யுத்தத்தின் கொடுமைக்கும் தப்பி ஓடுகிறார்கள்.
English:- They Flee From The Sword, From The Drawn Sword, From The Bent Bow And From The Heat Of Battle.
16 - ஆண்டவர் என்னை நோக்கி: ஒரு கூலிக்காரனுடைய வருஷங்களுக்கொத்த ஒரே வருஷத்திலே கேதாருடைய மகிமையெல்லாம் அற்றுப்போம்.
English:- This Is What The Lord Says To Me: "Within One Year, As A Servant Bound By Contract Would Count It, All The Pomp Of Kedar Will Come To An End.
17 - கேதார் புத்திரராகிய பராக்கிரம வில்வீரரின் தொகையில் மீதியானவர்கள் கொஞ்சப்பேராயிருப்பார்கள் என்றார்; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதை உரைத்தார்.
English:- The Survivors Of The Bowmen, The Warriors Of Kedar, Will Be Few." The Lord , The God Of Israel, Has Spoken.