பரிசுத்த வேதாகமம் ஏசாயா அதிகாரம் 27 – Read Holy Bible Book Of Isaiah Chapter 27 In Tamil With English Reference
1 - அக்காலத்திலே கர்த்தர் லிவியாதான் என்னும் நீண்ட பாம்பை, லிவியாதான் என்னும் கோணலான சர்ப்பத்தையே, கடிதும் பெரிதும் பலத்ததுமான தமது பட்டயத்தால் தண்டிப்பார்; சமுத்திரத்தில் இருக்கிற வலுசர்ப்பத்தைக் கொன்றுபோடுவார்.
English:- In That Day, The Lord Will Punish With His Sword, His Fierce, Great And Powerful Sword, Leviathan The Gliding Serpent, Leviathan The Coiling Serpent; He Will Slay The Monster Of The Sea.
2 - அக்காலத்திலே நல்ல திராட்சரசத்தைத் தரும் திராட்சத்தோட்டமுண்டாயிருக்கும்; அதைக்குறித்துப் பாடுங்கள்.
English:- In That Day- "Sing About A Fruitful Vineyard:
3 - கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன்.
English:- I, The Lord , Watch Over It; I Water It Continually. I Guard It Day And Night So That No One May Harm It.
4 - உக்கிரம் என்னிடத்தில் இல்லை; முட்செடியையும் நெரிஞ்சிலையும் எனக்கு விரோதமாய் யுத்தத்தில் கொண்டுவருகிறவன் யார்? நான் அவைகள்மேல் வந்து, அவைகளை ஏகமாய்க் கொளுத்திவிடுவேன்;
English:- I Am Not Angry. If Only There Were Briers And Thorns Confronting Me! I Would March Against Them In Battle; I Would Set Them All On Fire.
5 - இல்லாவிட்டால் அவன் என்பெலனைப் பற்றிக்கொண்டு என்னோடே ஒப்புரவாகட்டும், அவன் என்னோடே ஒப்புரவாவான்.
English:- Or Else Let Them Come To Me For Refuge; Let Them Make Peace With Me, Yes, Let Them Make Peace With Me."
6 - யாக்கோபு வேர்பற்றி, இஸ்ரவேல் பூத்துக்காய்த்து உலகத்தைப் பலனால் நிரப்பும் நாட்கள் வரும்.
English:- In Days To Come Jacob Will Take Root, Israel Will Bud And Blossom And Fill All The World With Fruit.
7 - அவர் அவனை அடித்தவர்களை அடித்ததுபோல இவனை அடிக்கிறாரோ? அவர்கள் கொல்லப்படும் கொலையாய் இவன் கொல்லப்படுகிறானோ?
English:- Has The Lord Struck Her As He Struck Down Those Who Struck Her? Has She Been Killed As Those Were Killed Who Killed Her?
8 - தேவரீர் ஜனத்தைத் துரத்திவிடுகையில் மட்டாய் அதனோடே வழக்காடுகிறீர்; கொண்டல்காற்றடிக்கிற நாளிலே அவர் தம்முடைய கடுங்காற்றினால் அதை விலக்கிவிடுகிறார்.
English:- By Warfare And Exile You Contend With Her- With His Fierce Blast He Drives Her Out, As On A Day The East Wind Blows.
9 - ஆகையால், அதினால் யாக்கோபின் அக்கிரமம் நிக்கிரம்பண்ணப்படும்; தோப்புவிக்கிரகங்களும் சிலைகளும் இனி நிற்காதபடி அவர்கள் பலிபீடங்களின் கல்லுகளையெல்லாம் நொறுக்கப்பட்ட சுண்ணாம்பு கல்லுகளாக்கிவிடும்போது, அவர்களுடைய பாவத்தை அவர் அகற்றுவாரென்பதே அதினால் உண்டாகும் பலன்.
English:- By This, Then, Will Jacob's Guilt Be Atoned For, And This Will Be The Full Fruitage Of The Removal Of His Sin: When He Makes All The Altar Stones To Be Like Chalk Stones Crushed To Pieces, No Asherah Poles Or Incense Altars Will Be Left Standing.
10 - அரணான நகரம் அவாந்தரையாகும், அந்த வாசஸ்தலம் தள்ளுண்டு வனாந்தரத்தைப்போல விட்டுவிடப்பட்டதாயிருக்கும்; கன்றுக்குட்டிகள் அங்கே மேய்ந்து, அங்கே படுத்துக்கொண்டு, அதின் தழைகளைத் தின்னும்.
English:- The Fortified City Stands Desolate, An Abandoned Settlement, Forsaken Like The Desert; There The Calves Graze, There They Lie Down; They Strip Its Branches Bare.
11 - அதின் கொப்புகள் உலரும்போது ஒடிந்துபோம்; ஸ்திரீகள் வந்து அவைகளைக் கொளுத்திவிடுவார்கள்; அது உணர்வுள்ள ஜனமல்ல; ஆகையால் அதை உண்டாக்கினவர் அதற்கு இரங்காமலும் அதை உருவாக்கினவர் அதற்குக் கிருபைசெய்யாமலும் இருப்பார்.
English:- When Its Twigs Are Dry, They Are Broken Off And Women Come And Make Fires With Them. For This Is A People Without Understanding; So Their Maker Has No Compassion On Them, And Their Creator Shows Them No Favor.
12 - அக்காலத்திலே, கர்த்தர் ஆற்றங்கரையின் விளைவுதொடங்கி எகிப்தின் நதிமட்டும் போரடிப்பார்; இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் ஒவ்வொருவராய்ச் சேர்க்கப்படுவீர்கள்.
English:- In That Day The Lord Will Thresh From The Flowing Euphrates To The Wadi Of Egypt, And You, O Israelites, Will Be Gathered Up One By One.
13 - அக்காலத்திலே பெரிய எக்காளம் ஊதப்படும்; அப்பொழுது அசீரியாதேசத்திலே சிதறடிக்கப்பட்டவர்களும், எகிப்துதேசத்திலே துரத்திவிடப்பட்டவர்களும் வந்து, எருசலேமிலுள்ள பரிசுத்த பர்வதத்திலே கர்த்தரைப் பணிந்துகொள்ளுவார்கள்.
English:- And In That Day A Great Trumpet Will Sound. Those Who Were Perishing In Assyria And Those Who Were Exiled In Egypt Will Come And Worship The Lord On The Holy Mountain In Jerusalem.