பரிசுத்த வேதாகமம் ஏசாயா அதிகாரம் 28 – Read Holy Bible Book Of Isaiah Chapter 28 In Tamil With English Reference
1 - எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடத்துக்கு ஐயோ, மதுபானத்தால் மயக்கமடைந்தவர்களின் செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பு வாடிப்போகும் புஷ்பமே!
English:- Woe To That Wreath, The Pride Of Ephraim's Drunkards, To The Fading Flower, His Glorious Beauty, Set On The Head Of A Fertile Valley- To That City, The Pride Of Those Laid Low By Wine!
2 - இதோ, திராணியும் வல்லமையுமுடைய ஒருவன் ஆண்டவரிடத்தில் இருக்கிறான்; அவன் கல்மழைப்போலவும், சங்காரப் புசல்போலவும், புரண்டுவருகிற பெருவெள்ளம்போலவும் வந்து, கையினாலே அதைத் தரையில் தள்ளிவிடுவான்.
English:- See, The Lord Has One Who Is Powerful And Strong. Like A Hailstorm And A Destructive Wind, Like A Driving Rain And A Flooding Downpour, He Will Throw It Forcefully To The Ground.
3 - எப்பிராயீமுடைய வெறியரின் கிரீடம் காலால் மிதித்துப்போடப்படும்.
English:- That Wreath, The Pride Of Ephraim's Drunkards, Will Be Trampled Underfoot.
4 - செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பாகிய வாடிய புஷ்பம், பருவகாலத்துக்குமுன் பழுத்ததும் காண்கிறவன் பார்த்து, அது தன் கையில் இருக்கும்போதே விழுங்குகிறதுமான முதல் கனியைப்போல இருக்கும்.
English:- That Fading Flower, His Glorious Beauty, Set On The Head Of A Fertile Valley, Will Be Like A Fig Ripe Before Harvest- As Soon As Someone Sees It And Takes It In His Hand, He Swallows It.
5 - அக்காலத்திலே சேனைகளின் கர்த்தர் தமது ஜனத்தில் மீதியானவர்களுக்கு மகிமையான கிரீடமாகவும், அலங்காரமான முடியாகவும்,
English:- In That Day The Lord Almighty Will Be A Glorious Crown, A Beautiful Wreath For The Remnant Of His People.
6 - நியாயம் விசாரிக்க உட்காருகிறவனுக்கு நியாயத்தின் ஆவியாகவும், யுத்தத்தை அதின் வாசல்மட்டும் திருப்புகிறவர்களின் பராக்கிரமமாகவும் இருப்பார்.
English:- He Will Be A Spirit Of Justice To Him Who Sits In Judgment, A Source Of Strength To Those Who Turn Back The Battle At The Gate.
7 - ஆனாலும் இவர்களும் திராட்சரசத்தால் மயங்கி, மதுபானத்தால் வழிதப்பிப்போகிறார்கள்; ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி, திராட்சரசத்தால் விழுங்கப்பட்டு, சாராயத்தினால் வழிதப்பி, தீர்க்கதரிசனத்தில் மோசம்போய், நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள்,
English:- And These Also Stagger From Wine And Reel From Beer: Priests And Prophets Stagger From Beer And Are Befuddled With Wine; They Reel From Beer, They Stagger When Seeing Visions, They Stumble When Rendering Decisions.
8 - போஜனபீடங்களெல்லாம் வாந்தியினாலும் அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை.
English:- All The Tables Are Covered With Vomit And There Is Not A Spot Without Filth.
9 - அவர் யாருக்கு அறிவைப் போதிப்பார்? யாருக்கு உபதேசத்தை உணர்த்துவார்? பால்மறந்தவர்களுக்கும், முலை மறக்கப்பண்ணப்பட்டவர்களுக்குமே.
English:- "Who Is It He Is Trying To Teach? To Whom Is He Explaining His Message? To Children Weaned From Their Milk, To Those Just Taken From The Breast?
10 - கற்பனையின்மேல் கற்பனையும், கற்பனையின்மேல் கற்பனையும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், பிரமாணத்தின்மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாம் என்கிறார்கள்.
English:- For It Is: Do And Do, Do And Do, Rule On Rule, Rule On Rule ; A Little Here, A Little There."
11 - பரியாச உதடுகளினாலும் அந்நியபாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார்.
English:- Very Well Then, With Foreign Lips And Strange Tongues God Will Speak To This People,
12 - இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப்பண்ணத்தக்க இளைப்பாறுதல்; இதுவே ஆறுதல் என்று அவர்களோடே அவர் சொன்னாலும் கேட்கமாட்டோம் என்கிறார்கள்.
English:- To Whom He Said, "This Is The Resting Place, Let The Weary Rest"; And, "This Is The Place Of Repose"- But They Would Not Listen.
13 - ஆதலால் அவர்கள் போய், பின்னிட்டு விழுந்து, நொறுங்கும்படிக்கும், சிக்குண்டு பிடிபடும்படிக்கும், கர்த்தருடைய வார்த்தை அவர்களுக்குக் கற்பனையின்மேல் கற்பனையும் கற்பனையின்மேல் கற்பனையும் பிரமாணத்தின்மேல் பிரமாணமும் பிரமாணத்தின்மேல் பிரமாணமும் இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமுமாக இருக்கும்.
English:- So Then, The Word Of The Lord To Them Will Become: Do And Do, Do And Do, Rule On Rule, Rule On Rule; A Little Here, A Little There- So That They Will Go And Fall Backward, Be Injured And Snared And Captured.
14 - ஆகையால் எருசலேமிலுள்ள இந்த ஜனத்தை ஆளுகிற நிந்தனைக்காரரே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
English:- Therefore Hear The Word Of The Lord , You Scoffers Who Rule This People In Jerusalem.
15 - நீங்கள்: மரணத்தோடே உடன்படிக்கையும் பாதாளத்தோடே ஒப்பந்தமும் பண்ணினோம்; வாதை பெருவெள்ளமாய்ப் புரண்டுவந்தாலும் எங்களை அணுகாது; நாங்கள் பொய்யை எங்களுக்கு அடைக்கலமாக்கி, மாயையின் மறைவிலே வந்து அடைந்தோமென்கிறீர்களே.
English:- You Boast, "We Have Entered Into A Covenant With Death, With The Grave We Have Made An Agreement. When An Overwhelming Scourge Sweeps By, It Cannot Touch Us, For We Have Made A Lie Our Refuge And Falsehood Our Hiding Place."
16 - ஆதலால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: இதோ, அஸ்திபாரமாக ஒரு கல்லை நான் சீயோனிலே வைக்கிறேன்; அது பரீட்சிக்கப்பட்டதும், விலையேறப்பெற்றதும், திட அஸ்திபாரமுள்ளதுமான மூலைக்கல்லாயிருக்கும்; விசுவாசிக்கிறவன் பதறான்.
English:- So This Is What The Sovereign Lord Says: "See, I Lay A Stone In Zion, A Tested Stone, A Precious Cornerstone For A Sure Foundation; The One Who Trusts Will Never Be Dismayed.
17 - நான் நியாயத்தை நூலும், நீதியைத் தூக்குநூலுமாக வைப்பேன்; பொய் என்னும் அடைக்கலத்தைக் கல்மழை அழித்துவிடும்; மறைவிடத்தை ஜலப்பிரவாகம் அடித்துக்கொண்டுபோகும்.
English:- I Will Make Justice The Measuring Line And Righteousness The Plumb Line; Hail Will Sweep Away Your Refuge, The Lie, And Water Will Overflow Your Hiding Place.
18 - நீங்கள் மரணத்தோடு செய்த உடன்படிக்கை விருதாவாகி, நீங்கள் பாதாளத்தோடு செய்த ஒப்பந்தம் நிற்காதேபோம்; வாதை புரண்டுவரும்போது அதின்கீழ் மிதிக்கப்படுவீர்கள்.
English:- Your Covenant With Death Will Be Annulled; Your Agreement With The Grave Will Not Stand. When The Overwhelming Scourge Sweeps By, You Will Be Beaten Down By It.
19 - அது புரண்டுவந்தமாத்திரத்தில் உங்களை அடித்துக்கொண்டுபோம்; அது நாள்தோறும் இரவும்பகலும் புரண்டுவரும்; அதைப்பற்றிப் பிறக்குஞ்செய்தியைக் கேட்பதும் சஞ்சலத்தை உண்டாக்கும்.
English:- As Often As It Comes It Will Carry You Away; Morning After Morning, By Day And By Night, It Will Sweep Through." The Understanding Of This Message Will Bring Sheer Terror.
20 - கால் நீட்டப் படுக்கையின் நீளம் போதாது; மூடிக்கொள்ளப் போர்வையின் அகலமும் போதாது.
English:- The Bed Is Too Short To Stretch Out On, The Blanket Too Narrow To Wrap Around You.
21 - கர்த்தர் தமது கிரியையாகிய அபூர்வமான கிரியையைச் செய்யவும், தமது வேலையாகிய அபூர்வமான வேலையை நிறைவேற்றவும், அவர் பெராத்சீம் மலையிலே எழும்பினதுபோல எழும்பி, கிபியோனின் பள்ளத்தாக்கில் கோபங்கொண்டதுபோல கோபங்கொள்வார்.
English:- The Lord Will Rise Up As He Did At Mount Perazim, He Will Rouse Himself As In The Valley Of Gibeon- To Do His Work, His Strange Work, And Perform His Task, His Alien Task.
22 - இப்பொழுதும் உங்கள் கட்டுகள் பலத்துப்போகாதபடிக்குப் பரியாசம்பண்ணாதிருங்கள்; தேசம் அனைத்தின்மேலும் நிர்ணயிக்கப்பட்ட சங்காரத்தின் செய்தியைச் சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவராலே கேள்விப்பட்டிருக்கிறேன்.
English:- Now Stop Your Mocking, Or Your Chains Will Become Heavier; The Lord, The Lord Almighty, Has Told Me Of The Destruction Decreed Against The Whole Land.
23 - செவிகொடுத்து என் சத்தத்தைக் கேளுங்கள்; நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள்.
English:- Listen And Hear My Voice; Pay Attention And Hear What I Say.
24 - உழுகிறவன் விதைக்கிறதற்காக நாள்தோறும் உழுகிறதுண்டோ? தன் நிலத்தைக் கொத்தி நாள்தோறும் பரம்படிக்கிறது உண்டோ?
English:- When A Farmer Plows For Planting, Does He Plow Continually? Does He Keep On Breaking Up And Harrowing The Soil?
25 - அவன் அதை மேலாக நிரவினபின்பு, அததற்கேற்ற இடத்தில் உளுந்தைத் தெளித்து, சீரகத்தைத் தூவி, முதல்தரமான கோதுமையையும் தெரிந்துகொண்ட வாற்கோதுமையையும் கம்பையும் விதைக்கிறான் அல்லவோ?
English:- When He Has Leveled The Surface, Does He Not Sow Caraway And Scatter Cummin? Does He Not Plant Wheat In Its Place, Barley In Its Plot, And Spelt In Its Field?
26 - அவனுடைய தேவன் அவனை நன்றாய்ப் போதித்து, அவனை உணர்த்துகிறார்.
English:- His God Instructs Him And Teaches Him The Right Way.
27 - உளுந்து தூலத்தாலே போரடிக்கப்படுகிறதில்லை; சீரகத்தின்மேல் வண்டிலின் உருளைச் சுற்ற விடப்படுகிறதுமில்லை; உளுந்து கோலினாலும் சீரகம் மிலாற்றினாலும் அடிக்கப்படும்.
English:- Caraway Is Not Threshed With A Sledge, Nor Is A Cartwheel Rolled Over Cummin; Caraway Is Beaten Out With A Rod, And Cummin With A Stick.
28 - அப்பத்துக்குத் தானியம் இடிக்கப்படும்; இடைவிடாமல் அவன் அதைப் போரடிக்கிறதில்லை; அவன் தன் வண்டிலின் உருளையால் அதை நசுக்குகிறதுமில்லை, தன் குதிரைகளால் அதை நொறுக்குகிறதுமில்லை.
English:- Grain Must Be Ground To Make Bread; So One Does Not Go On Threshing It Forever. Though He Drives The Wheels Of His Threshing Cart Over It, His Horses Do Not Grind It.
29 - இதுவும் சேனைகளின் கர்த்தராலே உண்டாகிறது; அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், செயலில் மகத்துவமானவர்.
English:- All This Also Comes From The Lord Almighty, Wonderful In Counsel And Magnificent In Wisdom.