பரிசுத்த வேதாகமம் ஏசாயா அதிகாரம் 34 – Read Holy Bible Book Of Isaiah Chapter 34 In Tamil With English Reference
1 - ஜாதிகளே, கேட்கிறதற்குக் கிட்டிவாருங்கள்; ஜனங்களே கவனியுங்கள்; பூமியும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதில் உற்பத்தியான யாவும் கேட்கக்கடவது.
English:- Come Near, You Nations, And Listen; Pay Attention, You Peoples! Let The Earth Hear, And All That Is In It, The World, And All That Comes Out Of It!
2 - சகல ஜாதிகளின்மேலும் கர்த்தருடைய கடுங்கோபமும், அவர்களுடைய சகல சேனைகளின்மேலும் அவருடைய உக்கிரமும் மூளுகிறது; அவர்களைச் சங்காரத்துக்கு நியமித்து, கொலைக்கு ஒப்புக்கொடுக்கிறார்.
English:- The Lord Is Angry With All Nations; His Wrath Is Upon All Their Armies. He Will Totally Destroy Them, He Will Give Them Over To Slaughter.
3 - அவர்களிலே கொலைசெய்யப்பட்டவர்கள் வெளியே எறியுண்டுகிடப்பார்கள்; அவர்களுடைய பிரேதங்கள் நாற்றமெடுக்கும்; அவர்களுடைய இரத்தத்தினாலே மலைகளும் கரைந்துபோம்.
English:- Their Slain Will Be Thrown Out, Their Dead Bodies Will Send Up A Stench; The Mountains Will Be Soaked With Their Blood.
4 - வானத்தின் சர்வசேனையும் கரைந்து, வானங்கள் புஸ்தகச்சுருளைப்போல் சுருட்டப்பட்டு, அவைகளின் சர்வசேனையும் திராட்சச்செடியின் இலைகள் உதிருகிறதுபோலவும், அத்திமரத்தின் காய்கள் உதிருகிறதுபோலவும் உதிர்ந்து விழும்.
English:- All The Stars Of The Heavens Will Be Dissolved And The Sky Rolled Up Like A Scroll; All The Starry Host Will Fall Like Withered Leaves From The Vine, Like Shriveled Figs From The Fig Tree.
5 - வானங்களில் என் பட்டயம் வெறிகொண்டது; இதோ ஏதோமின்மேலும், நான் சங்காரத்துக்கு நியமித்த ஜனத்தின் மேலும், அது நியாயஞ்செய்ய இறங்கும்.
English:- My Sword Has Drunk Its Fill In The Heavens; See, It Descends In Judgment On Edom, The People I Have Totally Destroyed.
6 - போஸ்றாவிலே கர்த்தருக்கு ஒரு யாகமும், ஏதோம் தேசத்திலே மகாசங்காரமும் உண்டு; கர்த்தருடைய பட்டயம் இரத்தத்தால் திருப்தியாகி, நிணத்தினால் பூரிக்கின்றது; ஆட்டுக்குட்டிகள் கடாக்களுடைய இரத்தத்தினாலும், ஆட்டுக்கடாக்களுடைய குண்டிக்காய்களின் கொழுப்பினாலும் திருப்தியாகும்.
English:- The Sword Of The Lord Is Bathed In Blood, It Is Covered With Fat- The Blood Of Lambs And Goats, Fat From The Kidneys Of Rams. For The Lord Has A Sacrifice In Bozrah And A Great Slaughter In Edom.
7 - அவைகளோடே காண்டாமிருகங்களும், ரிஷபங்களோடே காளைகளும் வந்து மடியும், அவர்கள் தேசம் இரத்தவெறிகொண்டு அவர்கள் மண் நிணத்தினால் கொழுத்துப்போம்.
English:- And The Wild Oxen Will Fall With Them, The Bull Calves And The Great Bulls. Their Land Will Be Drenched With Blood, And The Dust Will Be Soaked With Fat.
8 - அது கர்த்தர் பழிவாங்கும் நாள், சீயோனுடைய வழக்கினிமித்தம் பதிலளிக்கும் வருஷம்.
English:- For The Lord Has A Day Of Vengeance, A Year Of Retribution, To Uphold Zion's Cause.
9 - அதின் ஆறுகள் பிசினாகவும், அதின் மண் கந்தகமாகவும் மாறி, அதின் நிலம் எரிகிற கீலாய்ப்போம்.
English:- Edom's Streams Will Be Turned Into Pitch, Her Dust Into Burning Sulfur; Her Land Will Become Blazing Pitch!
10 - இரவும் பகலும் அது அவியாது; அதின் புகை என்றென்றைக்கும் எழும்பும்; தலைமுறை தலைமுறையாக அது பாழாயிருக்கும், சதாகாலம் சதாகாலமாக அதை ஒருவரும் கடந்துபோவதில்லை.
English:- It Will Not Be Quenched Night And Day; Its Smoke Will Rise Forever. From Generation To Generation It Will Lie Desolate; No One Will Ever Pass Through It Again.
11 - நாரையும் முள்ளம்பன்றியும் அதைச் சுதந்தரிக்கும், ஆந்தையும் காக்கையும் அதிலே குடியிருக்கும்; அதின்மேல் வெட்டவெளியின் நூலையும், வெறுமையின் தூக்கையும் பிடிப்பார்.
English:- The Desert Owl And Screech Owl Will Possess It; The Great Owl And The Raven Will Nest There. God Will Stretch Out Over Edom The Measuring Line Of Chaos And The Plumb Line Of Desolation.
12 - ராஜ்யபாரம்பண்ணின அதின் மேன்மக்களை அழைத்தால், அங்கே அவர்களில் ஒருவரும் இரார்கள்; அதின் பிரபுக்கள் அனைவரும் இல்லாமற்போவார்கள்.
English:- Her Nobles Will Have Nothing There To Be Called A Kingdom, All Her Princes Will Vanish Away.
13 - அதின் அரமனைகளில் முட்செடிகளும், அதின் கோட்டைகளில் காஞ்சொறிகளும் முட்பூண்டுகளும் முளைக்கும்; அது வலுசர்ப்பங்களின் தாபரமும், கோட்டான்களின் மாளிகையுமாயிருக்கும்.
English:- Thorns Will Overrun Her Citadels, Nettles And Brambles Her Strongholds. She Will Become A Haunt For Jackals, A Home For Owls.
14 - அங்கே காட்டுமிருகங்களும் ஓரிகளும் ஒன்றையொன்று சந்தித்து காட்டாட்டைக் காட்டாடு கூப்பிடும்; அங்கே சாக்குருவிகளும் தங்கி, இளைப்பாறும் இடத்தைக் கண்டடையும்.
English:- Desert Creatures Will Meet With Hyenas, And Wild Goats Will Bleat To Each Other; There The Night Creatures Will Also Repose And Find For Themselves Places Of Rest.
15 - அங்கே வல்லூறும் கூடுகட்டி, முட்டையிட்டு, குஞ்சுபொரித்து, அவைகளைத் தன் நிழலிலே கூட்டிக்கொள்ளும்; அங்கே கூளிகளும் ஜோடுஜோடாகச் சேரும்.
English:- The Owl Will Nest There And Lay Eggs, She Will Hatch Them, And Care For Her Young Under The Shadow Of Her Wings; There Also The Falcons Will Gather, Each With Its Mate.
16 - கர்த்தருடைய புஸ்தகத்திலேதேடி வாசியுங்கள்; இவைகளில் ஒன்றும் குறையாது; இவைகளில் ஒன்றும் ஜோடில்லாதிராது; அவருடைய வாய் இதைச் சொல்லிற்று; அவருடைய ஆவி அவைகளைச் சேர்க்கும்.
English:- Look In The Scroll Of The Lord And Read: None Of These Will Be Missing, Not One Will Lack Her Mate. For It Is His Mouth That Has Given The Order, And His Spirit Will Gather Them Together.
17 - அவரே அவைகளுக்குச் சீட்டுப்போட்டார்; அவருடைய கையே அதை அவைகளுக்கு அளவுநூலால் பகிர்ந்து கொடுத்தது; அவைகள் என்றைக்கும் அதைச் சுதந்தரித்துத் தலைமுறை தலைமுறையாக அதிலே சஞ்சரிக்கும்.
English:- He Allots Their Portions; His Hand Distributes Them By Measure. They Will Possess It Forever And Dwell There From Generation To Generation.