பரிசுத்த வேதாகமம் ஏசாயா அதிகாரம் 35 – Read Holy Bible Book Of Isaiah Chapter 35 In Tamil With English Reference
1 - வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும்.
English:- Glad; The Wilderness Will Rejoice And Blossom. Like The Crocus,
2 - அது மிகுதியாய்ச் செழித்து பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையையும் கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்; அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள்.
English:- It Will Burst Into Bloom; It Will Rejoice Greatly And Shout For Joy. The Glory Of Lebanon Will Be Given To It, The Splendor Of Carmel And Sharon; They Will See The Glory Of The Lord , The Splendor Of Our God.
3 - தளர்ந்த கைகளைத் திடப்படுத்தி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள்.
English:- Strengthen The Feeble Hands, Steady The Knees That Give Way;
4 - மனம் பதறுகிறவர்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாதிருங்கள், திடன்கொள்ளுங்கள்; இதோ, உங்கள் தேவன் நீதியைச் சரிக்கட்டவும், உங்கள் தேவன் பதிலளிக்கவும் வருவார்; அவர் வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்.
English:- Say To Those With Fearful Hearts, "Be Strong, Do Not Fear; Your God Will Come, He Will Come With Vengeance; With Divine Retribution He Will Come To Save You."
5 - அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம்.
English:- Then Will The Eyes Of The Blind Be Opened And The Ears Of The Deaf Unstopped.
6 - அப்பொழுது முடவன் மானைப்போல் குதிப்பான்; ஊமையன் நாவும் கெம்பீரிக்கும்; வனாந்தரத்திலே தண்ணீர்களும், கடுவெளியிலே ஆறுகளும் பாய்ந்தோடும்.
English:- Then Will The Lame Leap Like A Deer, And The Mute Tongue Shout For Joy. Water Will Gush Forth In The Wilderness And Streams In The Desert.
7 - வெட்டாந்தரை தண்ணீர்த்தடாகமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும், வலுசர்ப்பங்கள் தாபரித்துக் கிடந்த இடங்களிலே புல்லும் கொறுக்கையும் நாணலும் உண்டாகும்.
English:- The Burning Sand Will Become A Pool, The Thirsty Ground Bubbling Springs. In The Haunts Where Jackals Once Lay, Grass And Reeds And Papyrus Will Grow.
8 - அங்கே பெரும்பாதையான வழியும் இருக்கும்; அது பரிசுத்த வழி என்னப்படும்; தீட்டுள்ளவன் அதிலே நடந்துவருவதில்லை; அந்த வழியில் நடக்கிறவர்கள் பேதையாயிருந்தாலும் திசைகெட்டுப் போவதில்லை.
English:- And A Highway Will Be There; It Will Be Called The Way Of Holiness. The Unclean Will Not Journey On It; It Will Be For Those Who Walk In That Way; Wicked Fools Will Not Go About On It.
9 - அங்கே சிங்கம் இருப்பதில்லை; துஷ்டமிருகம் அங்கே போவதுமில்லை, அங்கே காணப்படவுமாட்டாது; மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள்.
English:- No Lion Will Be There, Nor Will Any Ferocious Beast Get Up On It; They Will Not Be Found There. But Only The Redeemed Will Walk There,
10 - கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி, ஆனந்தக்களிப்புடன் பாடி, சீயோனுக்கு வருவார்கள்; நித்திய மகிழ்ச்சி அவர்கள் தலையின்மேலிருக்கும்; சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடைவார்கள்; சஞ்சலமும் தவிப்பும் ஓடிப்போம்.
English:- And The Ransomed Of The Lord Will Return. They Will Enter Zion With Singing; Everlasting Joy Will Crown Their Heads. Gladness And Joy Will Overtake Them, And Sorrow And Sighing Will Flee Away.