பரிசுத்த வேதாகமம் ஏசாயா அதிகாரம் 40 – Read Holy Bible Book Of Isaiah Chapter 40 In Tamil With English Reference
2 - எருசலேமுடன் பட்சமாய்ப்பேசி, அதின் போர்முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும், அது தன் சகல பாவங்களினிமித்தமும் கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது என்றும், அதற்குக் கூறுங்கள் என்று உங்கள் தேவன் சொல்லுகிறார்.
English:- Speak Tenderly To Jerusalem, And Proclaim To Her That Her Hard Service Has Been Completed, That Her Sin Has Been Paid For, That She Has Received From The Lord 'S Hand Double For All Her Sins.
3 - கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்,
English:- A Voice Of One Calling: "In The Desert Prepare The Way For The Lord ; Make Straight In The Wilderness A Highway For Our God.
4 - பள்ளமெல்லம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்றும்.
English:- Every Valley Shall Be Raised Up, Every Mountain And Hill Made Low; The Rough Ground Shall Become Level, The Rugged Places A Plain.
5 - கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று.
English:- And The Glory Of The Lord Will Be Revealed, And All Mankind Together Will See It. For The Mouth Of The Lord Has Spoken."
6 - பின்னும் கூப்பிட்டுச் சொல்லென்று ஒரு சத்தம் உண்டாயிற்று; என்னத்தைக் கூப்பிட்டுச் சொல்வேனென்றேன். அதற்கு: மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது.
English:- A Voice Says, "Cry Out." And I Said, "What Shall I Cry?" "All Men Are Like Grass, And All Their Glory Is Like The Flowers Of The Field.
7 - கர்த்தரின் ஆவி அதின்மேல் ஊதும்போது, புல் உலர்ந்து, பூ உதிரும்; ஜனமே புல்.
English:- The Grass Withers And The Flowers Fall, Because The Breath Of The Lord Blows On Them. Surely The People Are Grass.
8 - புல் உலர்ந்து பூ உதிரும்; நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும் என்பதையே சொல்லென்று உரைத்தது.
English:- The Grass Withers And The Flowers Fall, But The Word Of Our God Stands Forever."
9 - சீயோன் என்னும் சுவிசேஷகியே, நீ உயர்ந்த பர்வதத்தில் ஏறு; எருசலேம் என்னும் சுவிசேஷகியே, நீ உரத்தசத்தமிட்டுக் கூப்பிடு, பயப்படாமல் சத்தமிட்டு, யூதா பட்டணங்களை நோக்கி: இதோ, உங்கள் தேவனென்று கூறு.
English:- You Who Bring Good Tidings To Zion, Go Up On A High Mountain. You Who Bring Good Tidings To Jerusalem, Lift Up Your Voice With A Shout, Lift It Up, Do Not Be Afraid; Say To The Towns Of Judah, "Here Is Your God!"
10 - இதோ, கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார்; அவர் தமது புயத்தினால் அரசாளுவார்; இதோ, அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது; அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாகச் செல்லுகிறது.
English:- See, The Sovereign Lord Comes With Power, And His Arm Rules For Him. See, His Reward Is With Him, And His Recompense Accompanies Him.
11 - மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.
English:- He Tends His Flock Like A Shepherd: He Gathers The Lambs In His Arms And Carries Them Close To His Heart; He Gently Leads Those That Have Young.
12 - தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி, பர்வதங்களைத் துலாக்கோலாலும், மலைகளைத் தராசாலும் நிறுத்தவர் யார்?
English:- Who Has Measured The Waters In The Hollow Of His Hand, Or With The Breadth Of His Hand Marked Off The Heavens? Who Has Held The Dust Of The Earth In A Basket, Or Weighed The Mountains On The Scales And The Hills In A Balance?
13 - கர்த்தருடைய ஆவியை அளவிட்டு, அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் யார்?
English:- Who Has Understood The Mind Of The Lord , Or Instructed Him As His Counselor?
14 - தமக்கு அறிவை உணர்த்தவும், தம்மை நியாயவழியிலே உபதேசிக்கவும் தமக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுக்கவும், தமக்கு விவேகத்தின்வழியை அறிவிக்கவும், அவர் யாரோடே ஆலோசனைபண்ணினார்?
English:- Whom Did The Lord Consult To Enlighten Him, And Who Taught Him The Right Way? Who Was It That Taught Him Knowledge Or Showed Him The Path Of Understanding?
15 - இதோ, ஜாதிகள் ஏற்றச்சாலில் தொங்கும் துளிபோலவும், தராசிலே படியும் தூசிபோலவும் எண்ணப்படுகிறார்கள்; இதோ, தீவுகளை ஒரு அணுவைப்போல் தூக்குகிறார்.
English:- Surely The Nations Are Like A Drop In A Bucket; They Are Regarded As Dust On The Scales; He Weighs The Islands As Though They Were Fine Dust.
16 - லீபனோன் எரிக்கும் விறகுக்குப் போதாது; அதிலுள்ள மிருகஜீவன்கள் தகனபலிக்கும் போதாது.
English:- Lebanon Is Not Sufficient For Altar Fires, Nor Its Animals Enough For Burnt Offerings.
17 - சகல ஜாதிகளும் அவருக்கு முன்பாக ஒன்றுமில்லை, அவர்கள் சூனியத்தில் சூனியமாகவும், மாயையாகவும் எண்ணப்படுகிறார்கள்.
English:- Before Him All The Nations Are As Nothing; They Are Regarded By Him As Worthless And Less Than Nothing.
18 - இப்படியிருக்க, தேவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எந்தச் சாயலை அவருக்கு ஒப்பிடுவீர்கள்?
English:- To Whom, Then, Will You Compare God? What Image Will You Compare Him To?
19 - கன்னான் ஒரு சுரூபத்தை வார்க்கிறான், தட்டான் பொன்தகட்டால் அதை மூடி, அதற்கு வெள்ளிச்சங்கிலிகளைப் பொருந்தவைக்கிறான்.
English:- As For An Idol, A Craftsman Casts It, And A Goldsmith Overlays It With Gold And Fashions Silver Chains For It.
20 - அதற்குக் கொடுக்க வகையில்லாதவன் உளுத்துப்போகாத மரத்தைத்தெரிந்துகொண்டு, அசையாத ஒருசுரூபத்தைச் செய்யும்படி நிபுணனான ஒரு தச்சனைத் தேடுகிறான்.
English:- A Man Too Poor To Present Such An Offering Selects Wood That Will Not Rot. He Looks For A Skilled Craftsman To Set Up An Idol That Will Not Topple.
21 - நீங்கள் அறியீர்களா? நீங்கள் கேள்விப்படவில்லையா? ஆதிமுதல் உங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லையா? பூமி அஸ்திபாரப்பட்டதுமுதல் உணராதிருக்கிறீர்களா?
English:- Do You Not Know? Have You Not Heard? Has It Not Been Told You From The Beginning? Have You Not Understood Since The Earth Was Founded?
22 - அவர் பூமி உருண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார்.
English:- He Sits Enthroned Above The Circle Of The Earth, And Its People Are Like Grasshoppers. He Stretches Out The Heavens Like A Canopy, And Spreads Them Out Like A Tent To Live In.
23 - அவர் பிரபுக்களை மாயையாக்கி, பூமியின் நியாயாதிபதிகளை அவாந்தரமாக்குகிறார்.
English:- He Brings Princes To Naught And Reduces The Rulers Of This World To Nothing.
24 - அவர்கள் திரும்ப நாட்டப்படுவதுமில்லை, விதைக்கப்படுவதுமில்லை; அவர்களுடைய அடிமரம் திரும்பப் பூமியிலே வேர்விடுவதுமில்லை; அவர்கள்மேல் அவர் ஊதவே பட்டுப்போவார்கள்; பெருங்காற்று அவர்களை ஒரு துரும்பைப்போல் அடித்துக்கொண்டுபோம்.
English:- No Sooner Are They Planted, No Sooner Are They Sown, No Sooner Do They Take Root In The Ground, Than He Blows On Them And They Wither, And A Whirlwind Sweeps Them Away Like Chaff.
25 - இப்படியிருக்க, என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை நிகராக்குவீர்கள்? என்று பரிசுத்தர் சொல்லுகிறார்.
English:- "To Whom Will You Compare Me? Or Who Is My Equal?" Says The Holy One.
26 - உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும் அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.
English:- Lift Your Eyes And Look To The Heavens: Who Created All These? He Who Brings Out The Starry Host One By One, And Calls Them Each By Name. Because Of His Great Power And Mighty Strength, Not One Of Them Is Missing.
27 - யாக்கோபே, இஸ்ரவேலே: என் வழி கர்த்தருக்கு மறைவாயிற்று என்றும், என் நியாயம் என் தேவனிடத்தில் எட்டாமல் போகிறது என்றும் நீ சொல்வானேன்?
English:- Why Do You Say, O Jacob, And Complain, O Israel, "My Way Is Hidden From The Lord ; My Cause Is Disregarded By My God"?
28 - பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதிதேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆராய்ந்து முடியாதது.
English:- Do You Not Know? Have You Not Heard? The Lord Is The Everlasting God, The Creator Of The Ends Of The Earth. He Will Not Grow Tired Or Weary, And His Understanding No One Can Fathom.
29 - சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.
English:- He Gives Strength To The Weary And Increases The Power Of The Weak.
30 - இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள்.
English:- Even Youths Grow Tired And Weary, And Young Men Stumble And Fall;
31 - கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
English:- But Those Who Hope In The Lord Will Renew Their Strength. They Will Soar On Wings Like Eagles; They Will Run And Not Grow Weary, They Will Walk And Not Be Faint.