பரிசுத்த வேதாகமம் ஏசாயா அதிகாரம் 58 – Read Holy Bible Book Of Isaiah Chapter 58 In Tamil With English Reference
1 - சத்தமிட்டுக் கூப்பிடு; அடக்கிக்கொள்ளாதே; எக்காளத்தைப்போல உன் சத்தத்தை உயர்த்தி, என் ஜனத்துக்கு அவர்கள் மீறுதலையும், யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் பாவங்களையும் தெரிவி.
English:- "Shout It Aloud, Do Not Hold Back. Raise Your Voice Like A Trumpet. Declare To My People Their Rebellion And To The House Of Jacob Their Sins.
2 - தங்கள் தேவனுடைய நியாயத்தைவிட்டு விலகாமல் நீதியைச் செய்துவருகிற ஜாதியாரைப்போல் அவர்கள் நாடோறும் என்னைத் தேடி, என் வழிகளை அறிய விரும்புகிறார்கள்; நீதி நியாயங்களை என்னிடத்தில் விசாரித்து தேவனிடத்தில் சேர விரும்புகிறார்கள்.
English:- For Day After Day They Seek Me Out; They Seem Eager To Know My Ways, As If They Were A Nation That Does What Is Right And Has Not Forsaken The Commands Of Its God. They Ask Me For Just Decisions And Seem Eager For God To Come Near Them.
3 - நாங்கள் உபவாசம்பண்ணும்போது நீர் நோக்காமலிருக்கிறதென்ன? நாங்கள் எங்கள் ஆத்துமாக்களை ஒடுக்கும்போது நீர் அதை அறியாமலிருக்கிறதென்ன என்கிறார்கள்; இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் இச்சையின்படி நடந்து, உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாய்ச் செய்கிறீர்கள்.
English:- 'Why Have We Fasted,' They Say, 'And You Have Not Seen It? Why Have We Humbled Ourselves, And You Have Not Noticed?' "Yet On The Day Of Your Fasting, You Do As You Please And Exploit All Your Workers.
4 - இதோ, வழக்குக்கும் வாதுக்கும் துஷ்டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள்; நீங்கள் உங்கள் கூக்குரலை உயரத்திலே கேட்கப்பண்ணும்படியாய், இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் உபவாசியாதிருங்கள்
English:- Your Fasting Ends In Quarreling And Strife, And In Striking Each Other With Wicked Fists. You Cannot Fast As You Do Today And Expect Your Voice To Be Heard On High.
5 - மனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்குகிறதும், தலைவணங்கி நாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக்கொள்ளுகிறதும், எனக்குப் பிரியமான உபவாச நாளாயிருக்குமோ இதையா உபவாசமென்றும் கர்த்தருக்குப் பிரியமான நாளென்றும் சொல்லுவாய்?
English:- Is This The Kind Of Fast I Have Chosen, Only A Day For A Man To Humble Himself? Is It Only For Bowing One's Head Like A Reed And For Lying On Sackcloth And Ashes? Is That What You Call A Fast, A Day Acceptable To The Lord ?
6 - அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்க்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கிவிடுகிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப்போடுகிறதும்,
English:- "Is Not This The Kind Of Fasting I Have Chosen: To Loose The Chains Of Injustice And Untie The Cords Of The Yoke, To Set The Oppressed Free And Break Every Yoke?
7 - பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்துகொடுக்கிறதும், துரத்துண்ட சிறுமையானவர்களை வீட்டிலே சேர்த்துக்கொள்ளுகிறதும், வஸ்திரமில்லாதவனைக்கண்டால் அவனுக்கு வஸ்திரங் கொடுக்கிறதும், உன் மாம்சமானவனுக்கு உன்னை ஒளிக்காமலிருக்கிறதும் அல்லவோ எனக்கு உகந்த உபவாசம்.
English:- Is It Not To Share Your Food With The Hungry And To Provide The Poor Wanderer With Shelter- When You See The Naked, To Clothe Him, And Not To Turn Away From Your Own Flesh And Blood?
8 - அப்பொழுது விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்; கர்த்தருடைய மகிமை உன்னைப் பின்னாலே காக்கும்.
English:- Then Your Light Will Break Forth Like The Dawn, And Your Healing Will Quickly Appear; Then Your Righteousness Will Go Before You, And The Glory Of The Lord Will Be Your Rear Guard.
9 - அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார். நுகத்தடியையும் விரல் நீட்டுதலையும், நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி,
English:- Then You Will Call, And The Lord Will Answer; You Will Cry For Help, And He Will Say: Here Am I. "If You Do Away With The Yoke Of Oppression, With The Pointing Finger And Malicious Talk,
10 - பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப்போலாகும்.
English:- And If You Spend Yourselves In Behalf Of The Hungry And Satisfy The Needs Of The Oppressed, Then Your Light Will Rise In The Darkness, And Your Night Will Become Like The Noonday.
11 - கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.
English:- The Lord Will Guide You Always; He Will Satisfy Your Needs In A Sun-scorched Land And Will Strengthen Your Frame. You Will Be Like A Well-watered Garden, Like A Spring Whose Waters Never Fail.
12 - உன்னிடத்திலிருந்து தோன்றினவர்கள் பூர்வமுதல் பாழாய்க் கிடந்த ஸ்தலங்களைக் கட்டுவார்கள்; தலைமுறை தலைமுறையாக இருக்கும் அஸ்திபாரங்கள்மேல் நீ கட்டுவாய்; திறப்பானதை அடைக்கிறவன் என்றும், குடியிருக்கும்படி பாதைகளைத் திருத்துகிறவன் என்றும் நீ பெயர் பெறுவாய்.
English:- Your People Will Rebuild The Ancient Ruins And Will Raise Up The Age-old Foundations; You Will Be Called Repairer Of Broken Walls, Restorer Of Streets With Dwellings.
13 - என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன்வழிகளின்படி, நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்,
English:- "If You Keep Your Feet From Breaking The Sabbath And From Doing As You Please On My Holy Day, If You Call The Sabbath A Delight And The Lord 'S Holy Day Honorable, And If You Honor It By Not Going Your Own Way And Not Doing As You Please Or Speaking Idle Words,
14 - அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய், பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்டி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று.
English:- Then You Will Find Your Joy In The Lord , And I Will Cause You To Ride On The Heights Of The Land And To Feast On The Inheritance Of Your Father Jacob." The Mouth Of The Lord Has Spoken.