பரிசுத்த வேதாகமம் ஏசாயா அதிகாரம் 62 – Read Holy Bible Book Of Isaiah Chapter 62 In Tamil With English Reference
1 - சீயோனினிமித்தமும் எருசலேமினிமித்தமும் நான் மவுனமாயிராமலும், அதின் நீதி பிரகாசத்தைப்போலவும், அதின் இரட்சிப்பு எரிகிற தீவட்டியைப்போலவும் வெளிப்படுமட்டும் அமராமலும் இருப்பேன்.
English:- For Zion's Sake I Will Not Keep Silent, For Jerusalem's Sake I Will Not Remain Quiet, Till Her Righteousness Shines Out Like The Dawn, Her Salvation Like A Blazing Torch.
2 - ஜாதிகள் உன் நீதியையும், சகல ராஜாக்களும் உன் மகிமையையும் காண்பார்கள்; கர்த்தருடைய வாய் சொல்லும் புது நாமத்தால் நீ அழைக்கப்படுவாய்.
English:- The Nations Will See Your Righteousness, And All Kings Your Glory; You Will Be Called By A New Name That The Mouth Of The Lord Will Bestow.
3 - நீ கர்த்தருடைய கையில் அலங்காரமான கிரீடமும், உன் தேவனுடைய கரத்தில் ராஜமுடியுமாயிருப்பாய்.
English:- You Will Be A Crown Of Splendor In The Lord 'S Hand, A Royal Diadem In The Hand Of Your God.
4 - நீ இனிக் கைவிடப்பட்டவள் என்னப்படாமலும், உன் தேசம் இனிப் பாழான தேசமென்னப்படாமலும், நீ எப்சிபா என்றும், உன் தேசம் பியூலா என்றும் சொல்லப்படும்; கர்த்தர் உன்மேல் பிரியமாயிருக்கிறார்; உன் தேசம் வாழ்க்கைப்படும்.
English:- No Longer Will They Call You Deserted, Or Name Your Land Desolate. But You Will Be Called Hephzibah, And Your Land Beulah ; For The Lord Will Take Delight In You, And Your Land Will Be Married.
5 - வாலிபன் கன்னிகையை விவாகம்பண்ணுவதுபோல, உன் மக்கள் உன்னை விவாகம்பண்ணுவார்கள்; மணவாளன் மணவாட்டியின்மேல் மகிழ்ச்சியாயிருப்பதுபோல, உன் தேவன் உன்மேல் மகிழ்ச்சியாயிருப்பார்.
English:- As A Young Man Marries A Maiden, So Will Your Sons Marry You; As A Bridegroom Rejoices Over His Bride, So Will Your God Rejoice Over You.
6 - எருசலேமே, உன் மதில்களின்மேல் பகல்முழுதும், இராமுழுதும் ஒருக்காலும் மவுனமாயிராத ஜாமக்காரரைக் கட்டளையிடுகிறேன். கர்த்தரைப் பிரஸ்தாபம்பண்ணுகிறவர்களே, நீங்கள் அமரிக்கையாயிருக்கலாகாது.
English:- I Have Posted Watchmen On Your Walls, O Jerusalem; They Will Never Be Silent Day Or Night. You Who Call On The Lord , Give Yourselves No Rest,
7 - அவர் எருசலேமை ஸ்திரப்படுத்தி, பூமியிலே அதைப் புகழ்ச்சியாக்கும்வரைக்கும் அவரை அமர்ந்திருக்கவிடாதிருங்கள்.
English:- And Give Him No Rest Till He Establishes Jerusalem And Makes Her The Praise Of The Earth.
8 - இனி நான் உன் தானியத்தை உன் சத்துருக்களுக்கு ஆகாரமாகக்கொடேன்; உன் பிரயாசத்தினாலாகிய உன் திராட்சரசத்தை அந்நிய புத்திரர் குடிப்பதுமில்லையென்று கர்த்தர் தமது வலதுகரத்தின்மேலும் தமது வல்லமையுள்ள புயத்தின்மேலும் ஆணையிட்டார்.
English:- The Lord Has Sworn By His Right Hand And By His Mighty Arm: "Never Again Will I Give Your Grain As Food For Your Enemies, And Never Again Will Foreigners Drink The New Wine For Which You Have Toiled;
9 - அதைச் சேர்த்தவர்களே அதைப் புசித்துக் கர்த்தரைத் துதிப்பார்கள்; அதைக் கூட்டிவைத்தவர்களே என் பரிசுத்த ஸ்தலத்தின் பிராகாரங்களில் அதைக் குடிப்பார்கள்.
English:- But Those Who Harvest It Will Eat It And Praise The Lord , And Those Who Gather The Grapes Will Drink It In The Courts Of My Sanctuary."
10 - வாசல்கள் வழியாய்ப் பிரவேசியுங்கள், பிரவேசியுங்கள்; ஜனத்துக்கு வழியைச் செவ்வைப்படுத்துங்கள், பாதையை உயர்த்துங்கள், உயர்த்துங்கள்; அதிலுள்ள கற்களைப் பொறுக்கிப்போடுங்கள்; ஜனங்களுக்காகக் கொடியை ஏற்றுங்கள்.
English:- Pass Through, Pass Through The Gates! Prepare The Way For The People. Build Up, Build Up The Highway! Remove The Stones. Raise A Banner For The Nations.
11 - நீங்கள் சீயோன் குமாரத்தியை நோக்கி: இதோ உன் இரட்சிப்பு வருகிறது, இதோ, அவர் அருளும் பலன் அவரோடும், அவர் செய்யும் பிரதிபலன் அவர் முன்பாகவும் வருகிறது என்று சொல்லுங்கள் என்று, கர்த்தர் பூமியின் கடையாந்தரம் வரைக்கும் கூறுகிறார்.
English:- The Lord Has Made Proclamation To The Ends Of The Earth: "Say To The Daughter Of Zion, 'See, Your Savior Comes! See, His Reward Is With Him, And His Recompense Accompanies Him.' "
12 - அவர்களைப் பரிசுத்த ஜனமென்றும், கர்த்தரால் மீட்கப்பட்டவர்களென்றும் சொல்லுவார்கள்; நீ தேடிக்கொள்ளப்பட்டதென்றும், கைவிடப்படாத நகரமென்றும் பெயர்பெறுவாய்.
English:- They Will Be Called The Holy People, The Redeemed Of The Lord ; And You Will Be Called Sought After, The City No Longer Deserted.