பரிசுத்த வேதாகமம் எரேமியா அதிகாரம் 34 – Read Holy Bible Book Of Jeremiah Chapter 34 In Tamil With English Reference
1 - பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும், அவனுடைய சர்வசேனையும், அவன் ஆளுகைக்குட்பட்ட பூமியின் சகல ராஜ்யங்களும், சகல ஜனங்களும் எருசலேமுக்கும் அதைச் சேர்ந்த சகல பட்டணங்களுக்கும் விரோதமாக யுத்தம்பண்ணுகையில் எரேமியாவுக்குக் கர்த்தரால் உண்டான வார்த்தை:
English:- While Nebuchadnezzar King Of Babylon And All His Army And All The Kingdoms And Peoples In The Empire He Ruled Were Fighting Against Jerusalem And All Its Surrounding Towns, This Word Came To Jeremiah From The Lord :
2 - இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நீ போய், யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவினிடத்தில் பேசி, அவனுக்குச் சொல்லவேண்டியது: இதோ, நான் இந்த நகரத்தைப் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் இதை அக்கினியால் சுட்டெரிப்பான்.
English:- "This Is What The Lord , The God Of Israel, Says: Go To Zedekiah King Of Judah And Tell Him, 'This Is What The Lord Says: I Am About To Hand This City Over To The King Of Babylon, And He Will Burn It Down.
3 - நீ அவன் கைக்குத் தப்பிப்போகாமல், நிச்சயமாய்ப் பிடிபட்டு, அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாய்; உன் கண்கள் பாபிலோன் ராஜாவின் கண்களைக் காணும்; அவன் வாய் உன் வாயோடே பேசும்; நீ பாபிலோனுக்குப் போவாய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
English:- You Will Not Escape From His Grasp But Will Surely Be Captured And Handed Over To Him. You Will See The King Of Babylon With Your Own Eyes, And He Will Speak With You Face To Face. And You Will Go To Babylon.
4 - ஆகிலும் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவே, கர்த்தருடைய வார்த்தையைக் கேள்; உன்னைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ பட்டயத்தாலே சாவதில்லை.
English:- " 'Yet Hear The Promise Of The Lord , O Zedekiah King Of Judah. This Is What The Lord Says Concerning You: You Will Not Die By The Sword;
5 - சமாதானத்தோடே சாவாய்; உனக்கு முன்னிருந்த ராஜாக்களாகிய உன் பிதாக்களினிமித்தம் கந்தவர்க்கங்களைக் கொளுத்தினதுபோல உன்னிமித்தமும் கொளுத்தி, ஐயோ! ஆண்டவனே, என்று சொல்லி, உனக்காகப் புலம்புவார்கள்; இது நான் சொன்ன வார்த்தையென்று கர்த்தர் உரைத்தார் என்று சொல் என்றார்.
English:- You Will Die Peacefully. As People Made A Funeral Fire In Honor Of Your Fathers, The Former Kings Who Preceded You, So They Will Make A Fire In Your Honor And Lament, "Alas, O Master!" I Myself Make This Promise, Declares The Lord .' "
6 - இந்த வார்த்தைகளையெல்லாம் தீர்க்கதரிசியாகிய எரேமியா எருசலேமிலே யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவினிடத்தில் சொன்னான்.
English:- Then Jeremiah The Prophet Told All This To Zedekiah King Of Judah, In Jerusalem,
7 - அப்பொழுது பாபிலோன் ராஜாவின் சேனைகள் எருசலேமுக்கு விரோதமாகவும் மீந்த பட்டணங்களாகிய லாகீசுக்கும், அசெக்காவுக்கும் விரோதமாகவும் யுத்தம்பண்ணிக்கொண்டிருந்தது; யூதாவின் அரணிப்பான பட்டணங்களில் இவைகளே மீந்திருந்தவைகள்.
English:- While The Army Of The King Of Babylon Was Fighting Against Jerusalem And The Other Cities Of Judah That Were Still Holding Out-lachish And Azekah. These Were The Only Fortified Cities Left In Judah.
8 - ஒருவனும் யூதஜாதியானாகிய தன் சகோதரனை அடிமைகொள்ளாதபடிக்கு, அவனவன் எபிரெயனாகிய தன் வேலைக்காரனையும், எபிரெய ஸ்திரீயாகிய தன் வேலைக்காரியையும் சுயாதீனராக அனுப்பிவிடவேண்டுமென்று அவர்களுக்கு விடுதலையைக் கூறும்படி,
English:- The Word Came To Jeremiah From The Lord After King Zedekiah Had Made A Covenant With All The People In Jerusalem To Proclaim Freedom For The Slaves.
9 - ராஜாவாகிய சிதேக்கியா எருசலேமில் இருக்கிற எல்லா ஜனத்தோடும் உடன்படிக்கை பண்ணினபின்பு, எரேமியாவுக்குக் கர்த்தரால் வார்த்தை உண்டாயிற்று.
English:- Everyone Was To Free His Hebrew Slaves, Both Male And Female; No One Was To Hold A Fellow Jew In Bondage.
10 - ஒவ்வொருவனும் தன் வேலைக்காரனையும் தன் வேலைக்காரியையும் இனி அடிமை கொள்ளாதபடிக்கு, சுயாதீனராக அனுப்பிவிடவேண்டுமென்று உடன்படிக்கைக்கு உட்பட்ட எல்லாப் பிரபுக்களும் எல்லா ஜனங்களும் கேட்டபோது, செவிகொடுத்து அவர்களை அனுப்பிவிட்டார்கள்.
English:- So All The Officials And People Who Entered Into This Covenant Agreed That They Would Free Their Male And Female Slaves And No Longer Hold Them In Bondage. They Agreed, And Set Them Free.
11 - ஆனாலும் அதற்குப்பின்பு அவர்கள் மாறாட்டம்பண்ணி, தாங்கள் சுயாதீனராக அனுப்பிவிட்ட வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் மறுபடியும் அழைப்பித்து, அவர்களை வேலைக்காரரும் வேலைக்காரிகளுமாயிருக்கும்படி, அடிமைப்படுத்திக்கொண்டார்கள்.
English:- But Afterward They Changed Their Minds And Took Back The Slaves They Had Freed And Enslaved Them Again.
12 - ஆதலால், கர்த்தராலே எரேமியாவுக்கு வார்த்தையுண்டாகி, அவர்:
English:- Then The Word Of The Lord Came To Jeremiah:
13 - இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அவனவன் தனக்கு விற்கப்பட்ட எபிரெயனாகிய தன் சகோதரனை முடிவிலே நீங்கள் ஏழாம் வருஷத்திலே அனுப்பிவிடவேண்டும் என்றும், அவன் உனக்கு ஆறுவருஷம் அடிமையாயிருந்தபின்பு, அவனை உன்னிடத்தில் வைக்காமல் சுயாதீனனாக அனுப்பிவிடவேண்டும் என்றும்,
English:- "This Is What The Lord , The God Of Israel, Says: I Made A Covenant With Your Forefathers When I Brought Them Out Of Egypt, Out Of The Land Of Slavery. I Said,
14 - நான் உங்கள் பிதாக்களை அடிமை வீடாகிய எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நாளிலே அவர்களோடே உடன்படிக்கைபண்ணினேன்; ஆனாலும் உங்கள் பிதாக்கள் என் சொல்லைக் கேளாமலும், தங்கள் செவியைச் சாயாமலும் போனார்கள்.
English:- 'Every Seventh Year Each Of You Must Free Any Fellow Hebrew Who Has Sold Himself To You. After He Has Served You Six Years, You Must Let Him Go Free.' Your Fathers, However, Did Not Listen To Me Or Pay Attention To Me.
15 - நீங்களோ, இந்நாளிலே மனந்திரும்பி, அவனவன் தன் அயலானுக்கு விடுதலையைக் கூறின விஷயத்திலே என் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, என் நாமம் தரிக்கப்பட்ட ஆலயத்திலே இதற்காக என் முகத்துக்குமுன் உடன்படிக்கைபண்ணியிருந்தீர்கள்.
English:- Recently You Repented And Did What Is Right In My Sight: Each Of You Proclaimed Freedom To His Countrymen. You Even Made A Covenant Before Me In The House That Bears My Name.
16 - ஆனாலும் நீங்கள் மாறாட்டம்பண்ணி, என் நாமத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கி, நீங்கள் அவனவன் விடுதலையாகவும் சுயாதீனனாகவும் அனுப்பிவிட்ட தன் வேலைக்காரனையும் வேலைக்காரியையும் திரும்ப அழைத்து வந்து, அவர்களை உங்களுக்கு வேலைக்காரரும் வேலைக்காரிகளுமாயிருக்கும்படி அடிமைப்படுத்தினீர்கள்.
English:- But Now You Have Turned Around And Profaned My Name; Each Of You Has Taken Back The Male And Female Slaves You Had Set Free To Go Where They Wished. You Have Forced Them To Become Your Slaves Again.
17 - ஆகையால் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் அவனவன் தன் சகோதரனுக்கும் அவனவன் தன் அயலானுக்கும் விடுதலையைக் கூறினவிஷயத்தில் என் சொல்லைக் கேளாமற்போனீர்களே; இதோ நான் உங்களைப் பட்டயத்துக்கும், கொள்ளைநோய்க்கும், பஞ்சத்துக்கும் ஒப்புக்கொடுக்கிற விடுதலையை உங்களுக்குக் கூறுகிறேன்; பூமியின் ராஜ்யங்களிலெல்லாம் அலைகிறதற்கும் உங்களை ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
English:- "Therefore, This Is What The Lord Says: You Have Not Obeyed Me; You Have Not Proclaimed Freedom For Your Fellow Countrymen. So I Now Proclaim 'Freedom' For You, Declares The Lord -'Freedom' To Fall By The Sword, Plague And Famine. I Will Make You Abhorrent To All The Kingdoms Of The Earth.
18 - என் முகத்துக்குமுன் பண்ணின உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றாமல், என் உடன்படிக்கையை மீறின மனுஷரை நான் துண்டங்களின் நடுவாகக் கடந்துபோகும்படி அவர்களை இரண்டாகத் துண்டித்த கன்றுக்குட்டியைப்போல் ஆக்குவேன்.
English:- The Men Who Have Violated My Covenant And Have Not Fulfilled The Terms Of The Covenant They Made Before Me, I Will Treat Like The Calf They Cut In Two And Then Walked Between Its Pieces.
19 - கன்றுக்குட்டியின் துண்டுகளின் நடுவே கடந்துபோன யூதாவின் பிரபுக்களையும், எருசலேமின் பிரபுக்களையும், பிரதானிகளையும், ஆசாரியர்களையும், தேசத்தின் சகல ஜனங்களையும் அப்படிச் செய்து,
English:- The Leaders Of Judah And Jerusalem, The Court Officials, The Priests And All The People Of The Land Who Walked Between The Pieces Of The Calf,
20 - நான் அவர்களை அவர்கள் சத்துருக்களின் கையிலும், அவர்கள் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்; அவர்களுடைய பிரேதம் ஆகாயத்தின் பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.
English:- I Will Hand Over To Their Enemies Who Seek Their Lives. Their Dead Bodies Will Become Food For The Birds Of The Air And The Beasts Of The Earth.
21 - யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும் அவனுடைய பிரபுக்களையும் அவர்கள் சத்துருக்களின் கையிலும் அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும், உங்களை விட்டுப் பேர்ந்துபோன பாபிலோன் ராஜாவினுடைய சேனைகளின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்.
English:- "I Will Hand Zedekiah King Of Judah And His Officials Over To Their Enemies Who Seek Their Lives, To The Army Of The King Of Babylon, Which Has Withdrawn From You.
22 - இதோ, நான் கட்டளைகொடுத்து, அவர்களை இந்த நகரத்துக்குத் திரும்பப்பண்ணுவேன்; அவர்கள் அதற்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, அதை அக்கினியால் சுட்டெரிப்பார்கள்; யூதாவின் பட்டணங்களையும், ஒருவரும் அவைகளில் குடியிராதபடிப் பாழாய்ப்போகப்பண்ணுவேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
English:- I Am Going To Give The Order, Declares The Lord , And I Will Bring Them Back To This City. They Will Fight Against It, Take It And Burn It Down. And I Will Lay Waste The Towns Of Judah So No One Can Live There."