பரிசுத்த வேதாகமம் எரேமியா அதிகாரம் 45 – Read Holy Bible Book Of Jeremiah Chapter 45 In Tamil With English Reference
1 - யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாலாம் வருஷத்திலே நேரியாவின் குமாரனாகிய பாருக் இந்த வசனங்களை எரேமியாவின் வாய் சொல்ல ஒரு புஸ்தகத்தில் எழுதுகையில், எரேமியா தீர்க்கதரிசி அவனிடத்தில் பேசி,
English:- This Is What Jeremiah The Prophet Told Baruch Son Of Neriah In The Fourth Year Of Jehoiakim Son Of Josiah King Of Judah, After Baruch Had Written On A Scroll The Words Jeremiah Was Then Dictating:
2 - பாருக்கே, உன்னைக்குறித்து இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்,
English:- "This Is What The Lord , The God Of Israel, Says To You, Baruch:
3 - நீ: இப்பொழுது எனக்கு ஐயோ! கர்த்தர் என் நோவைச் சஞ்சலத்தால் வர்த்திக்கப்பண்ணினார், என் தவிப்பினால் இளைத்தேன், இளைப்பாறுதலைக் காணாதேபோனேன் என்று சொன்னாய் என்கிறார்.
English:- You Said, 'Woe To Me! The Lord Has Added Sorrow To My Pain; I Am Worn Out With Groaning And Find No Rest.' "
4 - இதோ, நான் கட்டினதையே நான் இடிக்கிறேன்; நான் நாட்டினதையே நான் பிடுங்குகிறேன்; இந்த முழுத்தேசத்துக்கும் இப்படியே நடக்கும்.
English:- The Lord Said, "Say This To Him: 'This Is What The Lord Says: I Will Overthrow What I Have Built And Uproot What I Have Planted, Throughout The Land.
5 - நீ உனக்குப் பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ? தேடாதே; இதோ, மாம்சமான யாவர்மேலும் தீங்கை வரப்பண்ணுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆனாலும், நீ போகும் சகல ஸ்தலங்களிலும் உன் பிராணனை உனக்குக் கிடைக்கும் கொள்ளைப்பொருளாகத் தருகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று அவனுடனே சொல் என்றார்.
English:- Should You Then Seek Great Things For Yourself? Seek Them Not. For I Will Bring Disaster On All People, Declares The Lord , But Wherever You Go I Will Let You Escape With Your Life.' "