பரிசுத்த வேதாகமம் எரேமியா அதிகாரம் 46 – Read Holy Bible Book Of Jeremiah Chapter 46 In Tamil With English Reference
1 - புறஜாதிகளுக்கு விரோதமாய் எரேமியா தீர்க்கதரிசிக்கு உண்டான கர்த்தருடைய வசனம்:
English:- This Is The Word Of The Lord That Came To Jeremiah The Prophet Concerning The Nations:
2 - எகிப்தைக்குறித்தும், ஐப்பிராத்து நதியண்டையில் கர்கேமிசிலே இருந்ததும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாலாம் வருஷத்திலே முறிய அடித்ததுமான பார்வோன்நேகோ என்னப்பட்ட எகிப்து ராஜாவின் ராணுவத்தைக்குறித்தும் அவர் சொல்லுகிறது என்னவென்றால்:
English:- Concerning Egypt: This Is The Message Against The Army Of Pharaoh Neco King Of Egypt, Which Was Defeated At Carchemish On The Euphrates River By Nebuchadnezzar King Of Babylon In The Fourth Year Of Jehoiakim Son Of Josiah King Of Judah:
3 - கேடகங்களையும் பரிசைகளையும் ஆயத்தம்பண்ணி, யுத்தத்துக்கு வாருங்கள்.
English:- "Prepare Your Shields, Both Large And Small, And March Out For Battle!
4 - குதிரைவீரரே, குதிரைகளின் மேல் சேணங்களை வைத்து ஏறி, தலைச்சீராயை அணிந்துகொண்டு நில்லுங்கள்; ஈட்டிகளைத் துலக்கி, கவசங்களைத் தரித்துக்கொள்ளுங்கள்.
English:- Harness The Horses, Mount The Steeds! Take Your Positions With Helmets On! Polish Your Spears, Put On Your Armor!
5 - அவர்கள் கலங்கி, பின்வாங்குகிறதை நான் காண்கிறதென்ன? சுற்றிலுமுண்டான பயங்கரத்தினிமித்தம் அவர்களுடைய பராக்கிரமசாலிகள் முறியுண்டு, திரும்பிப்பாராமல் ஓட்டமாய் ஓடிப்போகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
English:- What Do I See? They Are Terrified, They Are Retreating, Their Warriors Are Defeated. They Flee In Haste Without Looking Back, And There Is Terror On Every Side," Declares The Lord .
6 - வேகமாய் ஓடுகிறவன் ஓடிப்போகவேண்டாம்; பராக்கிரமசாலி தப்பிப்போகவேண்டாம்; வடக்கே ஐப்பிராத்து நதியண்டையிலே அவர்கள் இடறிவிழுவார்கள்.
English:- "The Swift Cannot Flee Nor The Strong Escape. In The North By The River Euphrates They Stumble And Fall.
7 - பிரவாகம்போல் புரண்டுவருகிற இவன் யார்? அலைகள் மோதியடிக்கிற நதிகள்போல் எழும்பிவருகிற இவன் யார்?
English:- "Who Is This That Rises Like The Nile, Like Rivers Of Surging Waters?
8 - எகிப்தியனே பிரவாகத்தைப் போல் புரண்டுவருகிறான், அவனே அலைகள் மோதியடிக்கிற நதிகள்போல எழும்பிவருகிறான்; நான் போய், தேசத்தை மூடி, நகரத்தையும் அதில் குடியிருக்கிறவர்களையும் அழிப்பேன் என்றான்.
English:- Egypt Rises Like The Nile, Like Rivers Of Surging Waters. She Says, 'I Will Rise And Cover The Earth; I Will Destroy Cities And Their People.'
9 - குதிரைகளே, போய் ஏறுங்கள்; இரதங்களே, கடகட என்று ஓடுங்கள்; பராக்கிரமசாலிகளும், கேடகம் பிடிக்கிற எத்தியோப்பியரும், பூத்தியரும், வில்லைப்பிடித்து நாணேற்றுகிற லீதியரும் புறப்படக்கடவர்கள்.
English:- Charge, O Horses! Drive Furiously, O Charioteers! March On, O Warriors- Men Of Cush And Put Who Carry Shields, Men Of Lydia Who Draw The Bow.
10 - ஆனாலும், இது சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரின் நாளும், அவர் தம்முடைய சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிற நாளுமாயிருக்கிறது; ஆகையால், பட்டயம் பட்சித்து, அவர்களுடைய இரத்தத்தால் திருப்தியாகி வெறித்திருக்கும்; வடதேசத்தில் ஐப்பிராத்து நதியண்டையிலே சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவருக்கு ஒரு யாகமும் உண்டு.
English:- But That Day Belongs To The Lord, The Lord Almighty- A Day Of Vengeance, For Vengeance On His Foes. The Sword Will Devour Till It Is Satisfied, Till It Has Quenched Its Thirst With Blood. For The Lord, The Lord Almighty, Will Offer Sacrifice In The Land Of The North By The River Euphrates.
11 - எகிப்தின் குமாரத்தியாகிய கன்னிகையே, நீ கீலேயாத்துக்குப் போய், பிசின் தைலம் வாங்கு; திரளான அவிழ்தங்களை நீ கூட்டுகிறது விருதா, உனக்கு ஆரோக்கியமுண்டாகாது.
English:- "Go Up To Gilead And Get Balm, O Virgin Daughter Of Egypt. But You Multiply Remedies In Vain; There Is No Healing For You.
12 - ஜாதிகள் உன் இலச்சையைக் கேள்விப்பட்டார்கள்; உன் கூக்குரலால் தேசம் நிறைந்தது; பராக்கிரமசாலியின்மேல் பராக்கிரமசாலி இடறி, இருவரும் ஏகமாய் விழுந்தார்கள் என்றார்.
English:- The Nations Will Hear Of Your Shame; Your Cries Will Fill The Earth. One Warrior Will Stumble Over Another; Both Will Fall Down Together."
13 - எகிப்துதேசத்தை அழிக்கப் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத் நேச்சார் வருவானென்பதைக்குறித்து, எரேமியா தீர்க்கதரிசியினிடத்தில் கர்த்தர் சொன்ன வசனம்:
English:- This Is The Message The Lord Spoke To Jeremiah The Prophet About The Coming Of Nebuchadnezzar King Of Babylon To Attack Egypt:
14 - ஆயத்தப்பட்டு நில், பட்டயம் உன்னைச் சுற்றிலும் உண்டானதைப் பட்சித்துபோடுகிறதென்று சொல்லி, எகிப்திலே அறிவித்து, மிக்தோலிலே கூறி, நோப்பிலும் தக்பானேசிலும் பிரசித்தம்பண்ணுங்கள்.
English:- "Announce This In Egypt, And Proclaim It In Migdol; Proclaim It Also In Memphis And Tahpanhes: 'Take Your Positions And Get Ready, For The Sword Devours Those Around You.'
15 - உன் வீரர் வாரிக்கொள்ளப்படுகிறதென்ன? கர்த்தர் அவர்களைத் தள்ளினதால் அவர்கள் நிலைநிற்கவில்லை.
English:- Why Will Your Warriors Be Laid Low? They Cannot Stand, For The Lord Will Push Them Down.
16 - அநேகரை இடறப்பண்ணுகிறார்; அவனவன் தனக்கடுத்தவன்மேல் விழுகிறான்; அவர்கள்: எழுந்திருங்கள், கொல்லுகிற பட்டயத்துக்குத் தப்ப நமது ஜனத்தண்டைக்கும், நாம் பிறந்த தேசத்துக்கும் திரும்பிப்போவோம் என்கிறார்கள்.
English:- They Will Stumble Repeatedly; They Will Fall Over Each Other. They Will Say, 'Get Up, Let Us Go Back To Our Own People And Our Native Lands, Away From The Sword Of The Oppressor.'
17 - எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் பாழாக்கப்பட்டான்; அவனுக்குக் குறித்த காலம் முடிந்ததென்று அங்கே சத்தமிட்டுச் சொல்லுகிறார்கள்.
English:- There They Will Exclaim, 'Pharaoh King Of Egypt Is Only A Loud Noise; He Has Missed His Opportunity.'
18 - பர்வதங்களில் தாபோரும் சமுத்திரத்தின் அருகே கர்மேலும் இருக்கிற நிச்சயம்போல் அவன் வருவானென்று சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ள ராஜா தம்முடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறார்.
English:- "As Surely As I Live," Declares The King, Whose Name Is The Lord Almighty, "One Will Come Who Is Like Tabor Among The Mountains, Like Carmel By The Sea.
19 - எகிப்துதேசவாசியாகிய குமாரத்தியே, சிறையிருப்புக்குப் போகும் பிரயாண சாமான்களை ஆயத்தப்படுத்து, நோப் பாழாகும்; அது குடியில்லாமல் சுட்டெரிக்கப்பட்டுக் கிடக்கும்.
English:- Pack Your Belongings For Exile, You Who Live In Egypt, For Memphis Will Be Laid Waste And Lie In Ruins Without Inhabitant.
20 - எகிப்து மகா நேர்த்தியான கடாரி, அடிக்கிறவன் வடக்கேயிருந்து வருகிறான்.
English:- "Egypt Is A Beautiful Heifer, But A Gadfly Is Coming Against Her From The North.
21 - அதின் நடுவில் இருக்கிற அதின் கூலிப்படைகள் கொழுத்த காளைகள் போலிருக்கிறார்கள்; இவர்களும் நிற்காமல், திரும்பிக்கொண்டு ஏகமாய் ஓடிப்போவார்கள்; அவர்கள் விசாரிக்கப்படுகிற அவர்களுடைய ஆபத்துநாள் அவர்கள் மேல் வந்தது.
English:- The Mercenaries In Her Ranks Are Like Fattened Calves. They Too Will Turn And Flee Together, They Will Not Stand Their Ground, For The Day Of Disaster Is Coming Upon Them, The Time For Them To Be Punished.
22 - அவன் பாம்பைபோல சீறிவருவான், இராணுவபலத்தோடே நடந்து, காடுவெட்டிகளைப்போல் கோடரிகளோடு அதின்மேல் வருவார்கள்.
English:- Egypt Will Hiss Like A Fleeing Serpent As The Enemy Advances In Force; They Will Come Against Her With Axes, Like Men Who Cut Down Trees.
23 - எண்ணப்படாத மரங்களாயிருந்தாலும் அந்தக் காட்டை வெட்டுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் வெட்டுக்கிளிகளைப் பார்க்கிலும் அதிகமானவர்கள், அவர்களுக்குத் தொகையில்லை.
English:- They Will Chop Down Her Forest," Declares The Lord , "Dense Though It Be. They Are More Numerous Than Locusts, They Cannot Be Counted.
24 - எகிப்தின் குமாரத்தி கலங்குவாள்; வடதிசை ஜனத்தின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவாள்.
English:- The Daughter Of Egypt Will Be Put To Shame, Handed Over To The People Of The North."
25 - இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்; இதோ, நான் நோ என்னும் பட்டணத்திலுள்ள திரளான ஜனங்களையும், பார்வோனையும், எகிப்தையும், அதின் தேவர்களையும், அதின் ராஜாக்களையும், பார்வோனையும், அவனை நம்பியிருக்கிறவர்களையும் விசாரித்து,
English:- The Lord Almighty, The God Of Israel, Says: "I Am About To Bring Punishment On Amon God Of Thebes, On Pharaoh, On Egypt And Her Gods And Her Kings, And On Those Who Rely On Pharaoh.
26 - அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும், பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின் கையிலும், அவனுடைய சேவகரின் கையிலும், அவர்களை ஒப்புக்கொடுப்பேன்; அதற்குப்பின்பு அது பூர்வகாலத்தில் இருந்ததுபோல் குடியேற்றப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
English:- I Will Hand Them Over To Those Who Seek Their Lives, To Nebuchadnezzar King Of Babylon And His Officers. Later, However, Egypt Will Be Inhabited As In Times Past," Declares The Lord .
27 - என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, நீ கலங்காதே; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியை அவர்கள் சிறையிருப்பின் தேசத்திலுமிருந்து விடுவித்து இரட்சிப்பேன்; அப்பொழுது யாக்கோபு திரும்பிவந்து, அமைதியோடும் சாங்கோபாங்கத்தோடும் இருப்பான்; அவனைத் தத்தளிக்கப்பண்ணுவார் இல்லை.
English:- "Do Not Fear, O Jacob My Servant; Do Not Be Dismayed, O Israel. I Will Surely Save You Out Of A Distant Place, Your Descendants From The Land Of Their Exile. Jacob Will Again Have Peace And Security, And No One Will Make Him Afraid.
28 - என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உன்னுடனே இருக்கிறேன்; உன்னைத் துரத்திவிட்ட எல்லா ஜாதிகளையும் நான் நிர்மூலமாக்குவேன்; உன்னையோ நான் நிர்மூலமாக்காமல், உன்னை மட்டாய் தண்டிப்பேன்; ஆனாலும் உன்னை நான் குற்றமில்லாமல் நீங்கலாக விடுவதில்லையென்கிறார்.
English:- Do Not Fear, O Jacob My Servant, For I Am With You," Declares The Lord . "Though I Completely Destroy All The Nations Among Which I Scatter You, I Will Not Completely Destroy You. I Will Discipline You But Only With Justice; I Will Not Let You Go Entirely Unpunished."