பரிசுத்த வேதாகமம் எரேமியா அதிகாரம் 9 – Read Holy Bible Book Of Jeremiah Chapter 9 In Tamil With English Reference
1 - ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் ஜனமாகிய குமாரத்தி கொலையுண்ணக் கொடுத்தவர்கள் நிமித்தம் நான் இரவும்பகலும் அழுவேன்.
English:- Oh, That My Head Were A Spring Of Water And My Eyes A Fountain Of Tears! I Would Weep Day And Night For The Slain Of My People.
2 - ஆ, வனாந்தரத்தில் வழிப்போக்கரின் தாபரம் எனக்கு இருந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் என் ஜனத்தைவிட்டு, அவர்களிடத்தில் இராதபடிக்குப் போய்விடுவேன்; அவர்களெல்லாரும் விபசாரரும் துரோகிகளின் கூட்டமுமாயிருக்கிறார்கள்.
English:- Oh, That I Had In The Desert A Lodging Place For Travelers, So That I Might Leave My People And Go Away From Them; For They Are All Adulterers, A Crowd Of Unfaithful People.
3 - அவர்கள் பொய்யைப் பிரயோகிக்கத் தங்கள் நாவாகிய வில்லை வளைக்கிறார்கள்; அவர்கள் இந்தத் தேசத்திலே பலத்துக்கொள்வது சத்தியத்துக்காக அல்ல; பொல்லாப்பிலிருந்து பொல்லாப்புக்கு நடந்தேறுகிறார்கள்; என்னையோ அறியாதிருக்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
English:- "They Make Ready Their Tongue Like A Bow, To Shoot Lies; It Is Not By Truth That They Triumph In The Land. They Go From One Sin To Another; They Do Not Acknowledge Me," Declares The Lord .
4 - நீங்கள் அவனவன் தன் தன் சிநேகிதனுக்கு எச்சரிக்கையாயிருங்கள், எந்தச் சகோதரனையும் நம்பாதிருங்கள்; எந்தச் சகோதரனும் மோசம்பண்ணுகிறான், எந்தச் சிநேகிதனும் தூற்றித்திரிகிறான்.
English:- "Beware Of Your Friends; Do Not Trust Your Brothers. For Every Brother Is A Deceiver, And Every Friend A Slanderer.
5 - அவர்கள் மெய்யைப் பேசாமல் ஒவ்வொருவரும் தமக்கடுத்தவனை ஏய்க்கிறார்கள்; பொய்யைப்பேசத் தங்கள் நாவைப் பழக்குகிறார்கள், அக்கிரமஞ்செய்ய உழைக்கிறார்கள்.
English:- Friend Deceives Friend, And No One Speaks The Truth. They Have Taught Their Tongues To Lie; They Weary Themselves With Sinning.
6 - கபடத்தின் நடுவிலே குடியிருக்கிறாய்; கபடத்தினிமித்தம் அவர்கள் என்னை அறியமாட்டோமென்கிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
English:- You Live In The Midst Of Deception; In Their Deceit They Refuse To Acknowledge Me," Declares The Lord .
7 - ஆகையால், இதோ, நான் அவர்களை உருக்கி, அவர்களைப் புடமிடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; என் ஜனமாகிய குமாரத்தியை வேறெந்தப்பிரகாரமாக நடத்துவேன்?
English:- Therefore This Is What The Lord Almighty Says: "See, I Will Refine And Test Them, For What Else Can I Do Because Of The Sin Of My People?
8 - அவர்கள் நாவு கூர்மையாக்கப்பட்ட அம்பு, அது கபடம் பேசுகிறது; அவனவன் தன் தன் அயலானோடே தன் தன் வாயினாலே சமாதானமாய்ப் பேசுகிறான், ஆனாலும் தன் உள்ளத்திலே அவனுக்குப்பதிவிடை வைக்கிறான்.
English:- Their Tongue Is A Deadly Arrow; It Speaks With Deceit. With His Mouth Each Speaks Cordially To His Neighbor, But In His Heart He Sets A Trap For Him.
9 - இவைகளினிமித்தம் அவர்களை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
English:- Should I Not Punish Them For This?" Declares The Lord . "Should I Not Avenge Myself On Such A Nation As This?"
10 - மலைகளுக்காக அழுது துக்கங்கொண்டாடுவேன்; வனாந்தரத் தாபரங்களுக்காகப் புலம்புவேன்; ஒருவனும் அவைகளைக் கடந்துபோகாதவண்ணமாக அவைகள் பாழாக்கப்பட்டுக் கிடக்கின்றன; ஆடுமாடுகளின் சத்தம் கேட்கப்படுகிறதுமில்லை; ஆகாசத்துப் பறவைகளும் மிருகஜீவன்களும் எல்லாம் ஓடிச் சிதறிப்போயின.
English:- I Will Weep And Wail For The Mountains And Take Up A Lament Concerning The Desert Pastures. They Are Desolate And Untraveled, And The Lowing Of Cattle Is Not Heard. The Birds Of The Air Have Fled And The Animals Are Gone.
11 - நான் எருசலேமை மண்மேடுகளும் வலுசர்ப்பங்களின் தாபரமுமாக்குவேன்; யூதாவின் பட்டணங்களையும் குடியில்லாதபடி பாழாக்கிப்போடுவேன்.
English:- "I Will Make Jerusalem A Heap Of Ruins, A Haunt Of Jackals; And I Will Lay Waste The Towns Of Judah So No One Can Live There."
12 - இதை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? தேசம் அழிந்து, ஒருவனும் கடந்துபோகாதபடி அது பாழாக்கப்படுகிற முகாந்தரமென்னவென்று கர்த்தருடைய வாய் தன்னுடனே சொல்லுகிறதைக்கேட்டு அறிவிக்கத்தக்கவன் யார்?
English:- What Man Is Wise Enough To Understand This? Who Has Been Instructed By The Lord And Can Explain It? Why Has The Land Been Ruined And Laid Waste Like A Desert That No One Can Cross?
13 - நான் அவரவருக்கு விதித்த என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் விட்டு, என் சொல்லைக் கேளாமலும், அதின்படி நடவாமலும்,
English:- The Lord Said, "It Is Because They Have Forsaken My Law, Which I Set Before Them; They Have Not Obeyed Me Or Followed My Law.
14 - தங்களுடைய இருதயத்தின் கடினத்தையும், தங்கள் பிதாக்கள் தங்களுக்குக் கற்றுக்கொடுத்தபடி பாகால்களையும் பின்தொடர்ந்தார்களே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
English:- Instead, They Have Followed The Stubbornness Of Their Hearts; They Have Followed The Baals, As Their Fathers Taught Them."
15 - ஆதலால், இதோ, நான் இந்த ஜனத்துக்குப் புசிக்க எட்டியையும், குடிக்கப் பிச்சுக்கலந்த தண்ணீரையும் கொடுத்து,
English:- Therefore, This Is What The Lord Almighty, The God Of Israel, Says: "See, I Will Make This People Eat Bitter Food And Drink Poisoned Water.
16 - அவர்களும், அவர்கள் பிதாக்களும் அறியாத புறஜாதிகளுக்குள்ளே அவர்களைச் சிதறடித்து, பட்டயம் அவர்களை நிர்மூலமாக்குமட்டும் அதை அவர்களுக்குப்பின்னாக அனுப்புவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
English:- I Will Scatter Them Among Nations That Neither They Nor Their Fathers Have Known, And I Will Pursue Them With The Sword Until I Have Destroyed Them."
17 - நீங்கள் யோசனைபண்ணி, புலம்பற்காரிகளை வரவழைத்து, அதிலே பழகின ஸ்திரீகளைக் கூப்பிடுங்களென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
English:- This Is What The Lord Almighty Says: "Consider Now! Call For The Wailing Women To Come; Send For The Most Skillful Of Them.
18 - அவர்கள் சீக்கிரமாய் வந்து, நம்முடைய கண்கள் கண்ணீராய்ச் சொரியத்தக்கதாகவும், நம்முடைய இமைகள் தண்ணீராய் ஓடத்தக்கதாகவும், ஒப்பாரிசொல்லக்கடவர்கள்.
English:- Let Them Come Quickly And Wail Over Us Till Our Eyes Overflow With Tears And Water Streams From Our Eyelids.
19 - எத்தனையாய்ப் பாழாக்கப்பட்டோம்! மிகவும் கலங்கியிருக்கிறோம்; நாங்கள் தேசத்தை விட்டுப்போகிறோம், எங்கள் வாசஸ்தலங்களை அவர்கள் கவிழ்த்துப்போட்டார்கள் என்று சீயோனிலிருந்து உண்டாகிற புலம்பலின் சத்தம் கேட்கப்படும்.
English:- The Sound Of Wailing Is Heard From Zion: 'How Ruined We Are! How Great Is Our Shame! We Must Leave Our Land Because Our Houses Are In Ruins.' "
20 - ஆதலால் ஸ்திரீகளே, கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; உங்கள் செவி அவருடைய வாயின் வசனத்தை ஏற்றுக்கொள்ளட்டும்; நீங்கள் உங்கள் குமாரத்திகளுக்கு ஒப்பாரியையும், அவளவள் தன்தன் தோழிக்குப் புலம்பலையும் கற்றுக்கொடுங்கள்.
English:- Now, O Women, Hear The Word Of The Lord ; Open Your Ears To The Words Of His Mouth. Teach Your Daughters How To Wail; Teach One Another A Lament.
21 - வீதியிலிருக்கிற குழந்தைகளையும், தெருக்களிலிருக்கிற இளைஞரையும் சங்காரம்பண்ணச் சாவு நம்முடைய பலகணிகளிலேறி, நம்முடைய அரமனைகளில் பிரவேசித்தது.
English:- Death Has Climbed In Through Our Windows And Has Entered Our Fortresses; It Has Cut Off The Children From The Streets And The Young Men From The Public Squares.
22 - மனுஷரின் சவங்கள் வயல்வெளியின்மேல் எருவைப்போலவும், அறுக்கிறவனுக்குப் பின்னாலே ஒருவனும் வாரிக்கொள்ளாதிருக்கிற அரியைப்போலவும் கிடக்கும் என்று கர்த்தர் உரைத்தார் என்று சொல்.
English:- Say, "This Is What The Lord Declares: " 'The Dead Bodies Of Men Will Lie Like Refuse On The Open Field, Like Cut Grain Behind The Reaper, With No One To Gather Them.' "
23 - ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்;
English:- This Is What The Lord Says: "Let Not The Wise Man Boast Of His Wisdom Or The Strong Man Boast Of His Strength Or The Rich Man Boast Of His Riches,
24 - மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
English:- But Let Him Who Boasts Boast About This: That He Understands And Knows Me, That I Am The Lord , Who Exercises Kindness, Justice And Righteousness On Earth, For In These I Delight," Declares The Lord .
25 - இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது விருத்தசேதனமில்லாதவர்களோடுங்கூட விருத்தசேதனமுள்ள யாவரையும்,
English:- "The Days Are Coming," Declares The Lord , "When I Will Punish All Who Are Circumcised Only In The Flesh-
26 - எகிப்தையும், யூதாவையும், ஏதோமையும், அம்மோன் புத்திரரையும், மோவாபையும், கடைசி எல்லைகளிலுள்ள வனாந்தரக்குடிகளான யாவரையும் தண்டிப்பேன்; புறஜாதியார் அனைவரும் விருத்தசேதனமில்லாதவர்கள்; ஆனாலும் இஸ்ரவேல் வம்சத்தார் அனைவரும் இருதயத்திலே விருத்தசேதனமில்லாதவர்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.
English:- Egypt, Judah, Edom, Ammon, Moab And All Who Live In The Desert In Distant Places. For All These Nations Are Really Uncircumcised, And Even The Whole House Of Israel Is Uncircumcised In Heart."