பரிசுத்த வேதாகமம் யோபு அதிகாரம் 12 – Read Holy Bible Book Of Job Chapter 12 In Tamil With English Reference
2 - ஆம், நீங்களே ஞானமுள்ள ஜனங்கள்; உங்களுடனே ஞானம் சாகும்.
English:- "Doubtless You Are The People, And Wisdom Will Die With You!
3 - உங்களைப்போல எனக்கும் புத்தியுண்டு; உங்களிலும் நான் தாழ்ந்தவன் அல்ல; இப்படிப்பட்டவைகளை அறியாதவன் யார்?
English:- But I Have A Mind As Well As You; I Am Not Inferior To You. Who Does Not Know All These Things?
4 - என் சிநேகிதரால் நான் நிந்திக்கப்பட்டு, தேவனை நோக்கிப் பிரார்த்திப்பேன்; அவர் எனக்கு மறு உத்தரவு அருளுவார்; உத்தமனாகிய நீதிமான் பரியாசம்பண்ணப்படுகிறான்.
English:- "I Have Become A Laughingstock To My Friends, Though I Called Upon God And He Answered- A Mere Laughingstock, Though Righteous And Blameless!
5 - ஆபத்துக்குள்ளானவன் சுகமாயிருக்கிறவனுடைய நினைவில் இகழ்ச்சியடைகிறான்; காலிடறினவர்களுக்கு இது நேரிடும்.
English:- Men At Ease Have Contempt For Misfortune As The Fate Of Those Whose Feet Are Slipping.
6 - கள்ளருடைய கூடாரங்களில் செல்வமுண்டு; தேவனைக் கோபப்படுத்துகிறவர்களுக்குச் சாங்கோபாங்கமுண்டு; அவர்கள் கையிலே தேவன் கொண்டுவந்து கொடுக்கிறார்.
English:- The Tents Of Marauders Are Undisturbed, And Those Who Provoke God Are Secure- Those Who Carry Their God In Their Hands.
7 - இப்போதும் நீ மிருகங்களைக் கேட்டுப்பார், அவைகள் உனக்குப் போதிக்கும்; ஆகாயத்துப் பறவைகளைக் கேள். அவைகள் உனக்கு அறிவிக்கும்.
English:- "But Ask The Animals, And They Will Teach You, Or The Birds Of The Air, And They Will Tell You;
8 - அல்லது பூமியை விசாரித்துக் கேள், அது உனக்கு உபதேசிக்கும்; சமுத்திரத்தின் மச்சங்களைக் கேள், அவைகள் உனக்கு விவரிக்கும்.
English:- Or Speak To The Earth, And It Will Teach You, Or Let The Fish Of The Sea Inform You.
9 - கர்த்தருடைய கரம் இதைச் செய்ததென்று இவைகளெல்லாவற்றினாலும் அறியாதவன் யார்?
English:- Which Of All These Does Not Know That The Hand Of The Lord Has Done This?
10 - சகல பிராணிகளின் ஜீவனும், மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் அவர் கையிலிருக்கிறது.
English:- In His Hand Is The Life Of Every Creature And The Breath Of All Mankind.
11 - வாயானது போஜனத்தை ருசிபார்க்கிறதுபோல, செவியானது வார்த்தைகளைச் சோதித்துப்பார்க்கிறதல்லவா?
English:- Does Not The Ear Test Words As The Tongue Tastes Food?
12 - முதியோரிடத்தில் ஞானமும் வயதுசென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே.
English:- Is Not Wisdom Found Among The Aged? Does Not Long Life Bring Understanding?
13 - அவரிடத்தில் ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும்? அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு.
English:- "To God Belong Wisdom And Power; Counsel And Understanding Are His.
14 - இதோ, அவர் இடித்தால் கட்டமுடியாது; அவர் மனுஷனை அடைத்தால் விடுவிக்கமுடியாது.
English:- What He Tears Down Cannot Be Rebuilt; The Man He Imprisons Cannot Be Released.
15 - இதோ, அவர் தண்ணீர்களை அடக்கினால் எல்லாம் உலர்ந்துபோம்; அவர் அவைகளை வரவிட்டால், பூமியைக் கீழதுமேலதாக்கும்.
English:- If He Holds Back The Waters, There Is Drought; If He Lets Them Loose, They Devastate The Land.
16 - அவரிடத்தில் பெலனும் ஞானமுமுண்டு; மோசம்போகிறவனும் மோசம்போக்குகிறவனும், அவர் கையின் கீழிருக்கிறார்கள்.
English:- To Him Belong Strength And Victory; Both Deceived And Deceiver Are His.
17 - அவர் ஆலோசனைக்காரரைச் சிறைபிடித்து, நியாயாதிபதிகளை மதிமயக்குகிறார்.
English:- He Leads Counselors Away Stripped And Makes Fools Of Judges.
18 - அவர் ராஜாக்களுடைய கட்டுகளை அவிழ்த்து, அவர்கள் இடுப்புகளைக் கச்சைகட்டுகிறார்.
English:- He Takes Off The Shackles Put On By Kings And Ties A Loincloth Around Their Waist.
19 - அவர் மந்திரிகளைச் சிறைபிடித்துக்கொண்டுபோய், பெலவான்களைக் கவிழ்த்துப்போடுகிறார்.
English:- He Leads Priests Away Stripped And Overthrows Men Long Established.
20 - அவர் நம்பிக்கையுள்ளவர்களுடைய வாக்கை விலக்கி, முதிர்வயதுள்ளவர்களின் ஆலோசனையை வாங்கிப்போடுகிறார்.
English:- He Silences The Lips Of Trusted Advisers And Takes Away The Discernment Of Elders.
21 - அவர் பிரபுக்களின்மேல் இகழ்ச்சி வரப்பண்ணுகிறார்; பலவான்களின் கச்சையைத் தளர்ந்துபோகப்பண்ணுகிறார்.
English:- He Pours Contempt On Nobles And Disarms The Mighty.
22 - அவர் அந்தகாரத்திலிருக்கிற ஆழங்களை வெளியரங்கமாக்கி, மரண இருளை வெளிச்சத்தில் கொண்டுவருகிறார்.
English:- He Reveals The Deep Things Of Darkness And Brings Deep Shadows Into The Light.
23 - அவர் ஜாதிகளைப் பெருகவும் அழியவும் பண்ணுகிறார்; அவர் ஜாதிகளைப் பரவவும் குறுகவும் பண்ணுகிறார்.
English:- He Makes Nations Great, And Destroys Them; He Enlarges Nations, And Disperses Them.
24 - அவர் பூமியிலுள்ள ஜனத்தினுடைய அதிபதிகளின் நெஞ்சை அகற்றிப்போட்டு, அவர்களை வழியில்லாத அந்தரத்திலே அலையப்பண்ணுகிறார்.
English:- He Deprives The Leaders Of The Earth Of Their Reason; He Sends Them Wandering Through A Trackless Waste.
25 - அவர்கள் வெளிச்சமற்ற இருளிலே தடவித்திரிகிறார்கள்; வெறித்தவர்களைப்போல அவர்களைத் தடுமாறித்திரியப்பண்ணுகிறார்.
English:- They Grope In Darkness With No Light; He Makes Them Stagger Like Drunkards.