பரிசுத்த வேதாகமம் யோபு அதிகாரம் 20 – Read Holy Bible Book Of Job Chapter 20 In Tamil With English Reference
2 - இதற்காக மறு உத்தரவுகொடுக்க சிந்தனைகள் என்னை ஏவுகிறபடியால் நான் தீவிரித்துச் சொல்லுகிறேன்.
English:- "My Troubled Thoughts Prompt Me To Answer Because I Am Greatly Disturbed.
3 - நிந்தித்தேன் என்று நான் கடிந்துகொள்ளப்பட்டதைக் கேட்டேன்; ஆனாலும் உணர்வினால் என் ஆவி பிரதியுத்தரம் சொல்ல என்னை ஏவுகிறது.
English:- I Hear A Rebuke That Dishonors Me, And My Understanding Inspires Me To Reply.
4 - துன்மார்க்கனின் கெம்பீரம் குறுகினது என்பதையும், மாயக்காரனின் சந்தோஷம் ஒரு நிமிஷம்மாத்திரம் நிற்கும் என்பதையும்,
English:- "Surely You Know How It Has Been From Of Old, Ever Since Man Was Placed On The Earth,
5 - அவர் மனுஷனைப் பூமியில் வைத்த ஆதிகாலமுதல் இப்படியிருக்கிறது என்பதையும் நீர் அறியீரோ?
English:- That The Mirth Of The Wicked Is Brief, The Joy Of The Godless Lasts But A Moment.
6 - அவனுடைய மேன்மை வானபரியந்தம் உயர்ந்தாலும், அவனுடைய தலை மேகங்கள்மட்டும் எட்டினாலும்,
English:- Though His Pride Reaches To The Heavens And His Head Touches The Clouds,
7 - அவன் தன் மலத்தைப்போல என்றைக்கும் அழிந்துபோவான்; அவனைக் கண்டவர்கள், அவன் எங்கே? என்பார்கள்.
English:- He Will Perish Forever, Like His Own Dung; Those Who Have Seen Him Will Say, 'Where Is He?'
8 - அவன் ஒரு சொப்பனத்தைப்போல் பறந்துபோய்க் காணப்படாதவனாவான்; இரவில் தோன்றும் தரிசனத்தைப்போல் பறக்கடிக்கப்படுவான்.
English:- Like A Dream He Flies Away, No More To Be Found, Banished Like A Vision Of The Night.
9 - அவனைப் பார்த்த கண் இனி அவனைப் பார்ப்பதில்லை; அவன் இருந்த ஸ்தலம் இனி அவனைக் காண்பதில்லை.
English:- The Eye That Saw Him Will Not See Him Again; His Place Will Look On Him No More.
10 - அவன் பிள்ளைகள் எளிமையானவர்களின் சகாயத்தைத் தேடுவார்கள்; அவன் பறித்ததை அவன் கைகள் திரும்பக் கொடுக்கவேண்டியதாகும்.
English:- His Children Must Make Amends To The Poor; His Own Hands Must Give Back His Wealth.
11 - அவன் எலும்புகள் அவனுடைய வாலவயதின் பாவங்களினால் நிறைந்திருந்து, அவனோடேகூட மண்ணிலே படுத்துக்கொள்ளும்.
English:- The Youthful Vigor That Fills His Bones Will Lie With Him In The Dust.
12 - பொல்லாப்பு அவன் வாயிலே இனிமையாயிருப்பதால், அவன் அதைத் தன் நாவின்கீழ் அடக்கி,
English:- "Though Evil Is Sweet In His Mouth And He Hides It Under His Tongue,
13 - அதை விடாமல் பதனம்பண்ணி, தன் வாய்க்குள்ளே வைத்துக்கொண்டிருந்தாலும்,
English:- Though He Cannot Bear To Let It Go And Keeps It In His Mouth,
14 - அவன் போஜனம் அவன் குடல்களில் மாறி, அவனுக்குள் விரியன்பாம்புகளின் பிச்சாய்ப்போகும்.
English:- Yet His Food Will Turn Sour In His Stomach; It Will Become The Venom Of Serpents Within Him.
15 - அவன் விழுங்கின ஆஸ்தியைக் கக்குவான்; தேவன் அதை அவன் வயிற்றிலிருந்து வெளியே தள்ளிவிடுவார்.
English:- He Will Spit Out The Riches He Swallowed; God Will Make His Stomach Vomit Them Up.
16 - அவன் விரியன்பாம்புகளின் விஷத்தை உறிஞ்சுவான்; விரியனின் நாக்கு அவனைக் கொல்லும்.
English:- He Will Suck The Poison Of Serpents; The Fangs Of An Adder Will Kill Him.
17 - தேனும் நெய்யும் ஓடும் வாய்க்கால்களையும் ஆறுகளையும் அவன் காண்பதில்லை.
English:- He Will Not Enjoy The Streams, The Rivers Flowing With Honey And Cream.
18 - தான் பிரயாசப்பட்டுத் தேடினதை அவன் விழுங்காமல் திரும்பக்கொடுப்பான்; அவன் திரும்பக்கொடுக்கிறது அவன் ஆஸ்திக்குச் சரியாயிருக்கும்; அவன் களிகூராதிருப்பான்.
English:- What He Toiled For He Must Give Back Uneaten; He Will Not Enjoy The Profit From His Trading.
19 - அவன் ஒடுக்கி, ஏழைகளைக் கைவிட்டு, தான் கட்டாத வீட்டைப் பறித்தபடியினாலும்,
English:- For He Has Oppressed The Poor And Left Them Destitute; He Has Seized Houses He Did Not Build.
20 - தன் வயிறு திருப்தியற்றிருந்தபடியினாலும், அவன் இச்சித்த காரியங்களில் அவனுக்கு ஒன்றும் இருப்பதில்லை.
English:- "Surely He Will Have No Respite From His Craving; He Cannot Save Himself By His Treasure.
21 - அவன் போஜனத்தில் ஒன்றும் மீதியாவதில்லை; ஆகையால் அவன் ஆஸ்தி நிலைநிற்பதில்லை.
English:- Nothing Is Left For Him To Devour; His Prosperity Will Not Endure.
22 - அவன் வேண்டுமென்கிற பரிபூரணம் அவனுக்கு வந்தபின், அவனுக்கு வியாகுலம் உண்டாகும்; சிறுமைப்படுகிற ஒவ்வொருவருடைய கையும் அவன்மேல் வரும்.
English:- In The Midst Of His Plenty, Distress Will Overtake Him; The Full Force Of Misery Will Come Upon Him.
23 - தன் வயிற்றை நிரப்பத்தக்கது இன்னும் அவனுக்கு இருந்தாலும், அவர் அவன்மேல் தமது கோபத்தின் உக்கிரத்தை வரவிட்டு, அவன் போஜனம்பண்ணுகையில், அதை அவன்மேல் சொரியப்பண்ணுவார்.
English:- When He Has Filled His Belly, God Will Vent His Burning Anger Against Him And Rain Down His Blows Upon Him.
24 - இருப்பு ஆயுதத்துக்கு அவன் தப்பியோடினாலும் உருக்குவில் அவனை உருவ எய்யும்.
English:- Though He Flees From An Iron Weapon, A Bronze-tipped Arrow Pierces Him.
25 - உருவின பட்டயம் அவன் சரீரத்தையும், மின்னுகிற அம்பு அவன் பிச்சையும் உருவிப்போகும்; பயங்கரங்கள் அவன்மேல் வரும்.
English:- He Pulls It Out Of His Back, The Gleaming Point Out Of His Liver. Terrors Will Come Over Him;
26 - அவன் ஒளிக்கும் இடங்களில் காரிருள் அடங்கியிருக்கும்; அவியாத அக்கினி அவனைப் பட்சிக்கும்; அவன் கூடாரத்தில் மீதியாயிருக்கிறவன் தீங்கு அநுபவிப்பான்.
English:- Total Darkness Lies In Wait For His Treasures. A Fire Unfanned Will Consume Him And Devour What Is Left In His Tent.
27 - வானங்கள் அவன் அக்கிரமத்தை வெளிப்படுத்தி, பூமி அவனுக்கு விரோதமாக எழும்பும்.
English:- The Heavens Will Expose His Guilt; The Earth Will Rise Up Against Him.
28 - அவன் வீட்டின் சம்பத்துப் போய்விடும்; அவருடைய கோபத்தின் நாளிலே அவைகள் கரைந்துபோகும்.
English:- A Flood Will Carry Off His House, Rushing Waters On The Day Of God's Wrath.
29 - இதுவே தேவனால் துன்மார்க்கனுக்குக் கிடைக்கும் பங்கும், அவன் செய்கைக்கு தேவனால் அவனுக்குவரும் சுதந்தரமுமாம் என்றான்.
English:- Such Is The Fate God Allots The Wicked, The Heritage Appointed For Them By God."