பரிசுத்த வேதாகமம் யோபு அதிகாரம் 22 – Read Holy Bible Book Of Job Chapter 22 In Tamil With English Reference
2 - ஒரு மனுஷன் விவேகியாயிருந்து, தனக்குத்தான் பிரயோஜனமாயிருக்கிறதினால் தேவனுக்குப் பிரயோஜனமாயிருப்பானோ?
English:- "Can A Man Be Of Benefit To God? Can Even A Wise Man Benefit Him?
3 - நீர் நீதிமானாயிருப்பதினால் சர்வவல்லவருக்கு நன்மையுண்டாகுமோ? நீர் உம்முடைய வழிகளை உத்தமமாக்குகிறது அவருக்கு ஆதாயமாயிருக்குமோ?
English:- What Pleasure Would It Give The Almighty If You Were Righteous? What Would He Gain If Your Ways Were Blameless?
4 - அவர் உமக்குப் பயந்து உம்மோடே வழக்காடி, உம்மோடே நியாயத்துக்கு வருவாரோ?
English:- "Is It For Your Piety That He Rebukes You And Brings Charges Against You?
5 - உம்முடைய பொல்லாப்பு பெரியதும், உம்முடைய அக்கிரமங்கள் முடிவில்லாதவைகளுமாய் இருக்கிறதல்லவோ?
English:- Is Not Your Wickedness Great? Are Not Your Sins Endless?
6 - முகாந்தரமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகுவாங்கி, ஏழைகளின் வஸ்திரங்களைப் பறித்துக்கொண்டீர்.
English:- You Demanded Security From Your Brothers For No Reason; You Stripped Men Of Their Clothing, Leaving Them Naked.
7 - விடாய்த்தவனுக்குத் தாகத்துக்குத் தண்ணீர் கொடாமலும், பசித்தவனுக்குப் போஜனம் கொடாமலும் போனீர்.
English:- You Gave No Water To The Weary And You Withheld Food From The Hungry,
8 - பலவானுக்கே தேசத்தில் இடமுண்டாயிற்று; கனவான் அதில் குடியேறினான்.
English:- Though You Were A Powerful Man, Owning Land- An Honored Man, Living On It.
9 - விதவைகளை வெறுமையாய் அனுப்பிவிட்டீர்; தாய்தகப்பன் இல்லாதவர்களின் புயங்கள் முறிக்கப்பட்டது.
English:- And You Sent Widows Away Empty-handed And Broke The Strength Of The Fatherless.
10 - ஆகையால் கண்ணிகள் உம்மைச் சூழ்ந்திருக்கிறது; அசுப்பிலே உமக்கு வந்த பயங்கரம் உம்மைக் கலங்கப்பண்ணுகிறது.
English:- That Is Why Snares Are All Around You, Why Sudden Peril Terrifies You,
11 - நீர் பார்க்கக்கூடாதபடிக்கு இருள் வந்தது, ஜலப்பிரவாகம் உம்மை மூடுகிறது.
English:- Why It Is So Dark You Cannot See, And Why A Flood Of Water Covers You.
12 - தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ? நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது.
English:- "Is Not God In The Heights Of Heaven? And See How Lofty Are The Highest Stars!
13 - நீர்: தேவன் எப்படி அறிவார், அந்தகாரத்துக்கு அப்புறத்திலிருக்கிறவர் நியாயம் விசாரிக்கக்கூடுமோ?
English:- Yet You Say, 'What Does God Know? Does He Judge Through Such Darkness?
14 - அவர் பாராதபடிக்கு மேகங்கள் அவருக்கு மறைவாயிருக்கிறது; பரமண்டலங்களின் சக்கரத்திலே அவர் உலாவுகிறார் என்று சொல்லுகிறீர்.
English:- Thick Clouds Veil Him, So He Does Not See Us As He Goes About In The Vaulted Heavens.'
15 - அக்கிரம மாந்தர் பூர்வத்தில் நடந்த மார்க்கத்தைக் கவனித்துப் பார்த்தீரோ?
English:- Will You Keep To The Old Path That Evil Men Have Trod?
16 - காலம் வருமுன்னே அவர்கள் வாடிப்போனார்கள்; அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது.
English:- They Were Carried Off Before Their Time, Their Foundations Washed Away By A Flood.
17 - தேவன் அவர்கள் வீடுகளை நன்மையால் நிரப்பியிருந்தாலும், அவர்கள் அவரை நோக்கி: எங்களைவிட்டு விலகும், சர்வவல்லவராலே எங்களுக்கு என்ன ஆகும் என்றார்கள்.
English:- They Said To God, 'Leave Us Alone! What Can The Almighty Do To Us?'
18 - ஆகையால் துன்மார்க்கரின் ஆலோசனை எனக்குத் தூரமாயிருப்பதாக.
English:- Yet It Was He Who Filled Their Houses With Good Things, So I Stand Aloof From The Counsel Of The Wicked.
19 - எங்கள் நிலைமை நிர்மூலமாகாமல், அவர்களுக்கு மீதியானதையோ அக்கினி பட்சித்ததென்பதை நீதிமான்கள் கண்டு சந்தோஷப்படுகிறார்கள்.
English:- "The Righteous See Their Ruin And Rejoice; The Innocent Mock Them, Saying,
20 - குற்றமில்லாதவன் அவர்களைப் பார்த்து நகைக்கிறான்.
English:- 'Surely Our Foes Are Destroyed, And Fire Devours Their Wealth.'
21 - நீர் அவரோடே பழகி சமாதானமாயிரும்; அதினால் உமக்கு நன்மை வரும்.
English:- "Submit To God And Be At Peace With Him; In This Way Prosperity Will Come To You.
22 - அவர் வாயினின்று பிறந்த வேதப்பிரமாணத்தை ஏற்றுக்கொண்டு, அவர் வார்த்தைகளை உம்முடைய இருதயத்தில் வைத்துக்கொள்ளவேண்டுகிறேன்.
English:- Accept Instruction From His Mouth And Lay Up His Words In Your Heart.
23 - நீர் சர்வவல்லவரிடத்தில் மனந்திரும்பினால், திரும்பக் கட்டப்படுவீர்; அக்கிரமத்தை உமது கூடாரத்துக்குத் தூரமாக்குவீர்.
English:- If You Return To The Almighty, You Will Be Restored: If You Remove Wickedness Far From Your Tent
24 - அப்பொழுது தூளைப்போல் பொன்னையும், ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் சேர்த்து வைப்பீர்.
English:- And Assign Your Nuggets To The Dust, Your Gold Of Ophir To The Rocks In The Ravines,
25 - அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும், உமக்குச் சொக்க வெள்ளியுமாயிருப்பார்.
English:- Then The Almighty Will Be Your Gold, The Choicest Silver For You.
26 - அப்பொழுது சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர்.
English:- Surely Then You Will Find Delight In The Almighty And Will Lift Up Your Face To God.
27 - நீர் அவரை நோக்கி விண்ணப்பம்பண்ண, அவர் உமக்குச் செவிகொடுப்பார்; அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர்.
English:- You Will Pray To Him, And He Will Hear You, And You Will Fulfill Your Vows.
28 - நீர் ஒரு காரியத்தை நிருணயம்பண்ணினால், அது உமக்கு நிலைவரப்படும்; உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும்.
English:- What You Decide On Will Be Done, And Light Will Shine On Your Ways.
29 - மனுஷர் ஒடுக்கப்படும்போது திடப்படக்கடவர்கள் என்று நீர் சொல்ல, தாழ்ந்தோர் ரட்சிக்கப்படுவார்கள்.
English:- When Men Are Brought Low And You Say, 'Lift Them Up!' Then He Will Save The Downcast.
30 - குற்றமற்றிராதவனையுங்கூடத் தப்புவிப்பார்; உம்முடைய கைகளின் சுத்தத்தினிமித்தம் அவன் தப்பிப்போவான் என்றான்.
English:- He Will Deliver Even One Who Is Not Innocent, Who Will Be Delivered Through The Cleanness Of Your Hands."