பரிசுத்த வேதாகமம் யோபு அதிகாரம் 33 – Read Holy Bible Book Of Job Chapter 33 In Tamil With English Reference
1 - யோபே, என் நியாயங்களைக் கேளும்; என் வார்த்தைகளுக்கெல்லாம் செவிகொடும்.
English:- "But Now, Job, Listen To My Words; Pay Attention To Everything I Say.
2 - இதோ, என் வாயை இப்போது திறந்தேன்; என் வாயிலிருக்கிற என் நாவானது பேசும்.
English:- I Am About To Open My Mouth; My Words Are On The Tip Of My Tongue.
3 - என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும்; நான் அறிந்ததை என் உதடுகள் சுத்தமாய் வசனிக்கும்.
English:- My Words Come From An Upright Heart; My Lips Sincerely Speak What I Know.
4 - தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்; சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது.
English:- The Spirit Of God Has Made Me; The Breath Of The Almighty Gives Me Life.
5 - உம்மாலே கூடுமானால் எனக்கு மறுமொழி கொடும்; நீர் ஆயத்தப்பட்டு எனக்கு எதிராக நில்லும்.
English:- Answer Me Then, If You Can; Prepare Yourself And Confront Me.
6 - இதோ, உம்மைப்போல நானும் தேவனால் உண்டானவன்; நானும் மண்ணினால் உருவாக்கப்பட்டவன்.
English:- I Am Just Like You Before God; I Too Have Been Taken From Clay.
7 - இதோ, நீர் எனக்குப் பயப்பட்டுக் கலங்கத் தேவையில்லை; என் கை உம்மேல் பாரமாயிருக்கமாட்டாது.
English:- No Fear Of Me Should Alarm You, Nor Should My Hand Be Heavy Upon You.
8 - நான் காதாரக் கேட்க நீர் சொன்னதும், எனக்குக் கேள்வியான உம்முடைய வார்த்தைகளின் சத்தமும் என்னவென்றால்:
English:- "But You Have Said In My Hearing- I Heard The Very Words-
9 - நான் மீறுதல் இல்லாத சுத்தன், நான் குற்றமற்றவன், என்னில் அக்கிரமமில்லை.
English:- 'I Am Pure And Without Sin; I Am Clean And Free From Guilt.
10 - இதோ, என்னில் அவர் குற்றம்பிடிக்கப் பார்க்கிறார், என்னைத் தமக்குச் சத்துருவாக எண்ணிக்கொள்ளுகிறார்.
English:- Yet God Has Found Fault With Me; He Considers Me His Enemy.
11 - அவர் என் கால்களைத் தொழுவிலே மாட்டி, என் நடைகளையெல்லாம் காவல்படுத்துகிறார் என்று சொன்னீர்.
English:- He Fastens My Feet In Shackles; He Keeps Close Watch On All My Paths.'
12 - இதிலே நீர் நீதியுள்ளவர் அல்லவென்று உமக்குப் பிரதியுத்தரமாகச் சொல்லுகிறேன்; மனுஷனைப் பார்க்கிலும் தேவன் பெரியவராயிருக்கிறார்.
English:- "But I Tell You, In This You Are Not Right, For God Is Greater Than Man.
13 - அவர் தம்முடைய செயல்கள் எல்லாவற்றையுங்குறித்துக் காரணம் சொல்லவில்லையென்று நீர் அவரோடே ஏன் வழக்காடுகிறீர்?
English:- Why Do You Complain To Him That He Answers None Of Man's Words ?
14 - தேவன் ஒருவிசை சொல்லியிருக்கிற காரியத்தை இரண்டாம்விசை பார்த்துத் திருத்துகிறவரல்லவே.
English:- For God Does Speak-now One Way, Now Another- Though Man May Not Perceive It.
15 - கனநித்திரை மனுஷர்மேல் இறங்கி, அவர்கள் படுக்கையின்மேல் அயர்ந்திருக்கையில்,
English:- In A Dream, In A Vision Of The Night, When Deep Sleep Falls On Men As They Slumber In Their Beds,
16 - அவர் இராக்காலத்துத் தரிசனமான சொப்பனத்திலே மனுஷருடைய செவிக்குத் தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்தி, அதை அவர்களுக்கு வரும் தண்டனையினாலே முத்திரைபோட்டு,
English:- He May Speak In Their Ears And Terrify Them With Warnings,
17 - மனுஷன் தன்னுடைய செய்கையைவிட்டு நீங்கவும், மனுஷருடைய பெருமை அடங்கவும் செய்கிறார்.
English:- To Turn Man From Wrongdoing And Keep Him From Pride,
18 - இவ்விதமாய் அவன் ஆத்துமாவைப் படுகுழிக்கும், அவன் ஜீவனைப் பட்டய வெட்டுக்கும் தப்புவிக்கிறார்.
English:- To Preserve His Soul From The Pit, His Life From Perishing By The Sword.
19 - அவன் தன் படுக்கையிலே வாதையினாலும், தன் சகல எலும்புகளிலும் அகோரமான நோவினாலும் தண்டிக்கப்படுகிறான்.
English:- Or A Man May Be Chastened On A Bed Of Pain With Constant Distress In His Bones,
20 - அவன் ஜீவன் அப்பத்தையும், அவன் ஆத்துமா ருசிகரமான போஜனத்தையும் அரோசிக்கும்.
English:- So That His Very Being Finds Food Repulsive And His Soul Loathes The Choicest Meal.
21 - அவன் மாம்சம் காணப்படாதபடிக்கு அழிந்து, மூடப்பட்டிருந்த அவன் எலும்புகள் வெளிப்படுகிறது.
English:- His Flesh Wastes Away To Nothing, And His Bones, Once Hidden, Now Stick Out.
22 - அவன் ஆத்துமா பாதாளத்துக்கும், அவன் பிராணன் சாவுக்கும் சமீபிக்கிறது.
English:- His Soul Draws Near To The Pit, And His Life To The Messengers Of Death.
23 - ஆயிரத்தில் ஒருவராகிய சாமாசிபண்ணுகிற தூதனானவர் மனுஷனுக்குத் தம்முடைய நிதானத்தை அறிவிக்கும்படிக்கு, அவனுக்கு அநுசாரியாயிருந்தாரேயாகில்,
English:- "Yet If There Is An Angel On His Side As A Mediator, One Out Of A Thousand, To Tell A Man What Is Right For Him,
24 - அவர் அவனுக்கு இரங்கி, அவன் படுகுழியில் இறங்காதபடிக்கு: நீர் அவனை இரட்சியும்; மீட்கும் பொருளை நான் கண்டுபிடித்தேன் என்பார்.
English:- To Be Gracious To Him And Say, 'Spare Him From Going Down To The Pit ; I Have Found A Ransom For Him'-
25 - அப்பொழுது அவன் மாம்சம் வாலிபத்தில் இருந்ததைப்பார்க்கிலும் ஆரோக்கியமடையும்; தன் வாலவயது நாட்களுக்குத் திரும்புவான்.
English:- Then His Flesh Is Renewed Like A Child's; It Is Restored As In The Days Of His Youth.
26 - அவன் தேவனை நோக்கி விண்ணப்பம் பண்ணும்போது, அவன் அவருடைய சமுகத்தைக் கெம்பீரத்தோடே பார்க்கும்படி அவர் அவன்மேல் பிரியமாகி, அந்த மனுஷனுக்கு அவனுடைய நீதியின் பலனைக் கொடுப்பார்.
English:- He Prays To God And Finds Favor With Him, He Sees God's Face And Shouts For Joy; He Is Restored By God To His Righteous State.
27 - அவன் மனுஷரை நோக்கிப் பார்த்து: நான் பாவஞ்செய்து செம்மையானதைப் புரட்டினேன், அது எனக்குப் பிரயோஜனமாயிருக்கவில்லை.
English:- Then He Comes To Men And Says, 'I Sinned, And Perverted What Was Right, But I Did Not Get What I Deserved.
28 - என் ஆத்துமா படுகுழியில் இறங்காதபடி, அவர் அதை இரட்சிப்பார்; ஆகையால் என் பிராணன் வெளிச்சத்தைக் காணும் என்று சொல்லுவான்.
English:- He Redeemed My Soul From Going Down To The Pit, And I Will Live To Enjoy The Light.'
29 - இதோ, தேவன் மனுஷனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கு விலக்குகிறதற்கும், அவனை ஜீவனுள்ளோரின் வெளிச்சத்தினாலே பிரகாசிப்பிக்கிறதற்கும்,
English:- "God Does All These Things To A Man- Twice, Even Three Times-
30 - அவர் இவைகளையெல்லாம் அவனிடத்தில் பலமுறை நடப்பிக்கிறார்.
English:- To Turn Back His Soul From The Pit, That The Light Of Life May Shine On Him.
31 - யோபே, நீர் கவனித்து என் சொல்லைக் கேளும்; நான் பேசப்போகிறேன், நீர் மவுனமாயிரும்.
English:- "Pay Attention, Job, And Listen To Me; Be Silent, And I Will Speak.
32 - சொல்லத்தக்க நியாயங்கள் இருந்ததேயானால், எனக்கு மறுஉத்தரவு கொடும்; நீர் பேசும், உம்மை நீதிமானாகத் தீர்க்க எனக்கு ஆசையுண்டு.
English:- If You Have Anything To Say, Answer Me; Speak Up, For I Want You To Be Cleared.
33 - ஒன்றும் இல்லாதிருந்ததேயாகில் நீர் என் சொல்லைக் கேளும், மவுனமாயிரும், நான் உமக்கு ஞானத்தை உபதேசிப்பேன் என்றான்.
English:- But If Not, Then Listen To Me; Be Silent, And I Will Teach You Wisdom."