பரிசுத்த வேதாகமம் யோபு அதிகாரம் 9 – Read Holy Bible Book Of Job Chapter 9 In Tamil With English Reference
2 - ஆம், காரியம் இப்படியிருக்கிறது என்று அறிவேன்; தேவனுக்கு முன்பாக மனுஷன் நீதிமானாயிருப்பதெப்படி?
English:- "Indeed, I Know That This Is True. But How Can A Mortal Be Righteous Before God?
3 - அவர் அவனோடே வழக்காடச் சித்தமாயிருந்தால், ஆயிரத்தில் ஒன்றுக்காகிலும் அவருக்கு உத்தரவு சொல்லமாட்டானே.
English:- Though One Wished To Dispute With Him, He Could Not Answer Him One Time Out Of A Thousand.
4 - அவர் இருதயத்தில் ஞானமுள்ளவர், பெலத்தில் பராக்கிரமமுள்ளவர்; அவருக்கு விரோதமாகத் தன்னைக் கடினப்படுத்தி வாழ்ந்தவன் யார்?
English:- His Wisdom Is Profound, His Power Is Vast. Who Has Resisted Him And Come Out Unscathed?
5 - அவர் பர்வதங்களைச் சடிதியாய்ப் பேர்க்கிறார்; தம்முடைய கோபத்தில் அவைகளைப் புரட்டிப்போடுகிறார்.
English:- He Moves Mountains Without Their Knowing It And Overturns Them In His Anger.
6 - பூமியின் தூண்கள் அதிரத்தக்கதாய் அதை அதின் ஸ்தானத்தினின்று அசையப்பண்ணுகிறார்.
English:- He Shakes The Earth From Its Place And Makes Its Pillars Tremble.
7 - அவர் சூரியனுக்குக் கட்டளையிட அது உதிக்காதிருக்கும்; அவர் நட்சத்திரங்களை மறைத்துப்போடுகிறார்.
English:- He Speaks To The Sun And It Does Not Shine; He Seals Off The Light Of The Stars.
8 - அவர் ஒருவரே வானங்களை விரித்து, சமுத்திர அலைகளின்மேல் நடக்கிறவர்.
English:- He Alone Stretches Out The Heavens And Treads On The Waves Of The Sea.
9 - அவர் துருவச்சக்கர நட்சத்திரங்களையும், மிருகசீரிஷத்தையும், அறுமீனையும், தட்சண மண்டலங்களையும் உண்டாக்கினவர்.
English:- He Is The Maker Of The Bear And Orion, The Pleiades And The Constellations Of The South.
10 - ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
English:- He Performs Wonders That Cannot Be Fathomed, Miracles That Cannot Be Counted.
11 - இதோ, அவர் என் அருகில் போகிறார், நான் அவரைக் காணேன்; அவர் கடந்துபோகிறார், நான் அவரை அறியேன்.
English:- When He Passes Me, I Cannot See Him; When He Goes By, I Cannot Perceive Him.
12 - இதோ, அவர் பறித்துக்கொண்டுபோகிறார், அவரை மறிப்பவன் யார்? நீர் என்ன செய்கிறீர் என்று அவரைக் கேட்பவன் யார்?
English:- If He Snatches Away, Who Can Stop Him? Who Can Say To Him, 'What Are You Doing?'
13 - தேவன் தம்முடைய கோபத்தைத் திருப்பமாட்டார்; ஒருவருக்கொருவர் துணை நிற்கிற அகங்காரிகள் அவருக்கு அடங்கவேண்டும்.
English:- God Does Not Restrain His Anger; Even The Cohorts Of Rahab Cowered At His Feet.
14 - இப்படியிருக்க, அவருக்கு மறுமொழி கொடுக்கவும், அவரோடே வழக்காடும் வார்த்தைகளைத் தெரிந்துகொள்ளவும் நான் எம்மாத்திரம்?
English:- "How Then Can I Dispute With Him? How Can I Find Words To Argue With Him?
15 - நான் நீதிமானாயிருந்தாலும் அவரோடே வழக்காடாமல், என் நியாயாதிபதியினிடத்தில் இரக்கத்துக்குக் கெஞ்சுவேன்.
English:- Though I Were Innocent, I Could Not Answer Him; I Could Only Plead With My Judge For Mercy.
16 - நான் கெஞ்ச, அவர் எனக்கு உத்தரவு அருளினாலும், அவர் என் விண்ணப்பத்துக்குச் செவிகொடுத்தார் என்று நம்பேன்.
English:- Even If I Summoned Him And He Responded, I Do Not Believe He Would Give Me A Hearing.
17 - அவர் புசலினால் என்னை முறிக்கிறார்; முகாந்தரமில்லாமல் அநேகம் காயங்களை எனக்கு உண்டாக்குகிறார்.
English:- He Would Crush Me With A Storm And Multiply My Wounds For No Reason.
18 - நான் மூச்சுவிட எனக்கு இடங்கொடாமல், கசப்பினால் என்னை நிரப்புகிறார்.
English:- He Would Not Let Me Regain My Breath But Would Overwhelm Me With Misery.
19 - பெலத்தைப் பார்த்தால், அவரே பெலத்தவர்; நியாயத்தைப் பார்த்தால், என் பட்சத்தில் சாட்சி சொல்லுகிறவன் யார்?
English:- If It Is A Matter Of Strength, He Is Mighty! And If It Is A Matter Of Justice, Who Will Summon Him ?
20 - நான் என்னை நீதிமானாக்கினாலும் என் வாயே என்னைக் குற்றவாளியாக்கும்; நான் உத்தமன் என்று சொன்னாலும், நான் மாறுபாடானவன் என்று அது சாட்சிகொடுக்கும்.
English:- Even If I Were Innocent, My Mouth Would Condemn Me; If I Were Blameless, It Would Pronounce Me Guilty.
21 - நான் உத்தமனென்றாலும் என் உள்ளத்தை நான் அறியேன்; என் ஜீவனை அரோசிப்பேன்.
English:- "Although I Am Blameless, I Have No Concern For Myself; I Despise My Own Life.
22 - ஒரு காரியம் உண்டு, அதைச் சொல்லுகிறேன்; சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் அவர் அழிக்கிறார்.
English:- It Is All The Same; That Is Why I Say, 'He Destroys Both The Blameless And The Wicked.'
23 - சவுக்கானது அசுப்பிலே வாதித்துக் கொல்லும்போது, அவர் குற்றமில்லாதவர்களின் சோதனையைப்பார்த்து நகைக்கிறார்.
English:- When A Scourge Brings Sudden Death, He Mocks The Despair Of The Innocent.
24 - உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கிறது; அதிலிருக்கிற நியாயாதிபதிகளின் முகத்தை மூடிப்போடுகிறார்; அவர் இதைச் செய்கிறதில்லையென்றால், பின்னை யார் இதைச் செய்கிறார்.
English:- When A Land Falls Into The Hands Of The Wicked, He Blindfolds Its Judges. If It Is Not He, Then Who Is It?
25 - என் நாட்கள் அஞ்சற்காரர் ஓட்டத்திலும் தீவிரமாயிருக்கிறது; அவைகள் நன்மையைக் காணாமல் பறந்துபோம்.
English:- "My Days Are Swifter Than A Runner; They Fly Away Without A Glimpse Of Joy.
26 - அவைகள் வேகமாய் ஓடுகிற கப்பல்களைப்போலவும், இரையின்மேல் பாய்கிற கழுகைப்போலவும் கடந்துபோகிறது.
English:- They Skim Past Like Boats Of Papyrus, Like Eagles Swooping Down On Their Prey.
27 - என் அங்கலாய்ப்பை நான் மறந்து, என் முகத்தின் துக்கத்தை மாற்றி, திடன்கொள்வேன் என்று சொன்னால்,
English:- If I Say, 'I Will Forget My Complaint, I Will Change My Expression, And Smile,'
28 - என் வருத்தங்களைப்பற்றி பயமாயிருக்கிறேன்; என்னைக் குற்றமில்லாதவனாக எண்ணமாட்டீர் என்று அறிவேன்.
English:- I Still Dread All My Sufferings, For I Know You Will Not Hold Me Innocent.
29 - நான் பொல்லாதவனாயிருந்தால், விருதாவாய்ப் போராடவேண்டியது என்ன?
English:- Since I Am Already Found Guilty, Why Should I Struggle In Vain?
30 - நான் உறைந்த மழைத் தண்ணீரில் முழுகி, என் கைகளைச் சவுக்காரத்தினால் சுத்தம்பண்ணினாலும்,
English:- Even If I Washed Myself With Soap And My Hands With Washing Soda,
31 - நீர் என்னைச் சேற்றுப்பள்ளத்திலே அமிழ்த்துவீர். அப்பொழுது என் வஸ்திரமே என்னை அருவருக்கும்.
English:- You Would Plunge Me Into A Slime Pit So That Even My Clothes Would Detest Me.
32 - நான் அவருக்குப் பிரதியுத்தரம் சொல்லுகிறதற்கும், நாங்கள் கூடி நியாயத்திற்கு வருகிறதற்கும், அவர் என்னைப்போல மனுஷன் அல்லவே.
English:- "He Is Not A Man Like Me That I Might Answer Him, That We Might Confront Each Other In Court.
33 - எங்கள் இருவர்மேலும் தன் கையை வைக்கத்தக்க மத்தியஸ்தன் எங்களுக்குள் இல்லையே.
English:- If Only There Were Someone To Arbitrate Between Us, To Lay His Hand Upon Us Both,
34 - அவர் தமது மிலாற்றை என்னைவிட்டு அகற்றுவாராக; அவருடைய பயங்கரம் என்னைக் கலங்கப்பண்ணாதிருப்பதாக.
English:- Someone To Remove God's Rod From Me, So That His Terror Would Frighten Me No More.
35 - அப்பொழுது நான் அவருக்கு பயப்படாமல் பேசுவேன்; இப்பொழுதோ அப்படிச் செய்ய இடமில்லை.
English:- Then I Would Speak Up Without Fear Of Him, But As It Now Stands With Me, I Cannot.