பரிசுத்த வேதாகமம் யோவான் அதிகாரம் 5 – Read Holy Bible Book Of John Chapter 5 In Tamil With English Reference
1 - இவைகளுக்குப்பின்பு யூதருடைய பண்டிகை ஒன்று வந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போனார்.
English:- Some Time Later, Jesus Went Up To Jerusalem For A Feast Of The Jews.
2 - எபிரெய பாஷையிலே பெதஸ்தா என்னப்பட்ட ஒரு குளம் எருசலேமில் ஆட்டு வாசலினருகே இருக்கிறது, அதற்கு ஐந்து மண்டபங்களுண்டு.
English:- Now There Is In Jerusalem Near The Sheep Gate A Pool, Which In Aramaic Is Called Bethesda And Which Is Surrounded By Five Covered Colonnades.
3 - அவைகளிலே குருடர், சப்பாணிகள், சூம்பின உறுப்புடையவர்கள் முதலான வியாதிக்காரர் அநேகர் படுத்திருந்து, தண்ணீர் எப்பொழுது கலங்கும் என்று காத்துக்கொண்டிருப்பார்கள்.
English:- Here A Great Number Of Disabled People Used To Lie--the Blind, The Lame, The Paralyzed.
4 - ஏனெனில் சில சமயங்களில் தேவதூதன் ஒருவன் அந்தக் குளத்தில் இறங்கி, தண்ணீரைக் கலக்குவான்; தண்ணீர் கலங்கினபின்பு யார் முந்தி அதில் இறங்குவானோ அவன் எப்பேர்ப்பட்ட வியாதிஸ்தனாயிருந்தாலும் சொஸ்தமாவான்.
English:- Wholly Or In Part, Paralyzed—and They Waited For The Moving Of The Waters. 4 From Time To Time An Angel Of The Lord Would Come Down And Stir Up The Waters. The First One Into The Pool After Each Such Disturbance Would Be Cured Of Whatever Disease They Had.
5 - முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான்.
English:- One Who Was There Had Been An Invalid For Thirty-eight Years.
6 - படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார்.
English:- When Jesus Saw Him Lying There And Learned That He Had Been In This Condition For A Long Time, He Asked Him, "Do You Want To Get Well?"
7 - அதற்கு வியாதிஸ்தன் ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான்.
English:- "Sir," The Invalid Replied, "I Have No One To Help Me Into The Pool When The Water Is Stirred. While I Am Trying To Get In, Someone Else Goes Down Ahead Of Me."
8 - இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.
English:- Then Jesus Said To Him, "Get Up! Pick Up Your Mat And Walk."
9 - உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது.
English:- At Once The Man Was Cured; He Picked Up His Mat And Walked. The Day On Which This Took Place Was A Sabbath,
10 - ஆதலால் யூதர்கள் குணமாக்கப்பட்டவனை நோக்கி: இது ஓய்வுநாளாயிருக்கிறதே, படுக்கையை எடுத்துக்கொண்டு போகிறது உனக்கு நியாயமல்ல என்றார்கள்.
English:- And So The Jews Said To The Man Who Had Been Healed, "It Is The Sabbath; The Law Forbids You To Carry Your Mat."
11 - அவன் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக என்னைச் சொஸ்தமாக்கினவர், உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று எனக்குச் சொன்னார் என்றான்.
English:- But He Replied, "The Man Who Made Me Well Said To Me, 'Pick Up Your Mat And Walk.' "
12 - அதற்கு அவர்கள்: உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நடவென்று உன்னுடனே சொன்ன மனுஷன் யார் என்று அவனிடத்தில் கேட்டார்கள்.
English:- So They Asked Him, "Who Is This Fellow Who Told You To Pick It Up And Walk?"
13 - சொஸ்தமாக்கப்பட்டவன் அவர் இன்னாரென்று அறியவில்லை; அவ்விடத்தில் ஜனங்கள் கூட்டமாயிருந்தபடியினால் இயேசு விலகியிருந்தார்.
English:- The Man Who Was Healed Had No Idea Who It Was, For Jesus Had Slipped Away Into The Crowd That Was There.
14 - அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்திலே கண்டு: இதோ, நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
English:- Later Jesus Found Him At The Temple And Said To Him, "See, You Are Well Again. Stop Sinning Or Something Worse May Happen To You."
15 - அந்த மனுஷன் போய், தன்னைச் சொஸ்தமாக்கினவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தான்.
English:- The Man Went Away And Told The Jews That It Was Jesus Who Had Made Him Well.
16 - இயேசு இவைகளை ஓய்வுநாளில் செய்தபடியால், யூதர்கள் அவரைத் துன்பப்படுத்தி, அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள்.
English:- So, Because Jesus Was Doing These Things On The Sabbath, The Jews Persecuted Him.
17 - இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார். நானும் கிரியைசெய்துவருகிறேன் என்றார்.
English:- Jesus Said To Them, "My Father Is Always At His Work To This Very Day, And I, Too, Am Working."
18 - அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித் தம்மை தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.
English:- For This Reason The Jews Tried All The Harder To Kill Him; Not Only Was He Breaking The Sabbath, But He Was Even Calling God His Own Father, Making Himself Equal With God.
19 - அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்; அவர் எவைகளைச் செய்கிறாரோ, அவைகளைக் குமாரனும் அந்தப்படியே செய்கிறார்.
English:- Jesus Gave Them This Answer: "I Tell You The Truth, The Son Can Do Nothing By Himself; He Can Do Only What He Sees His Father Doing, Because Whatever The Father Does The Son Also Does.
20 - பிதாவானவர் குமாரனிடத்தில் அன்பாயிருந்து, தாம் செய்கிறவைகளையெல்லாம் அவருக்குக் காண்பிக்கிறார்; நீங்கள் ஆச்சரியப்படத்தக்கதாக இவைகளைப் பார்க்கிலும் பெரிதான கிரியைகளையும் அவருக்குக் காண்பிப்பார்.
English:- For The Father Loves The Son And Shows Him All He Does. Yes, To Your Amazement He Will Show Him Even Greater Things Than These.
21 - பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார்.
English:- For Just As The Father Raises The Dead And Gives Them Life, Even So The Son Gives Life To Whom He Is Pleased To Give It.
22 - அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
English:- Moreover, The Father Judges No One, But Has Entrusted All Judgment To The Son,
23 - குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான்.
English:- That All May Honor The Son Just As They Honor The Father. He Who Does Not Honor The Son Does Not Honor The Father, Who Sent Him.
24 - என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
English:- "I Tell You The Truth, Whoever Hears My Word And Believes Him Who Sent Me Has Eternal Life And Will Not Be Condemned; He Has Crossed Over From Death To Life.
25 - மரித்தோர் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; அதைக் கேட்கிறவர்கள் பிழைப்பார்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
English:- I Tell You The Truth, A Time Is Coming And Has Now Come When The Dead Will Hear The Voice Of The Son Of God And Those Who Hear Will Live.
26 - ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறதுபோல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள் செய்திருக்கிறார்.
English:- For As The Father Has Life In Himself, So He Has Granted The Son To Have Life In Himself.
27 - அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார்.
English:- And He Has Given Him Authority To Judge Because He Is The Son Of Man.
28 - இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்;
English:- "Do Not Be Amazed At This, For A Time Is Coming When All Who Are In Their Graves Will Hear His Voice
29 - அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.
English:- And Come Out--those Who Have Done Good Will Rise To Live, And Those Who Have Done Evil Will Rise To Be Condemned.
30 - நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.
English:- By Myself I Can Do Nothing; I Judge Only As I Hear, And My Judgment Is Just, For I Seek Not To Please Myself But Him Who Sent Me.
31 - என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தால் என் சாட்சி மெய்யாயிராது.
English:- "If I Testify About Myself, My Testimony Is Not Valid.
32 - என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவர் வேறொருவர் இருக்கிறார், அவர் என்னைக்குறித்துக் கொடுக்கிற சாட்சி மெய்யான சாட்சியென்று அறிந்திருக்கிறேன்.
English:- There Is Another Who Testifies In My Favor, And I Know That His Testimony About Me Is Valid.
33 - நீங்கள் யோவானிடத்தில் ஆளனுப்பி விசாரித்தீர்கள், அவன் சத்தியத்திற்கு சாட்சிகொடுத்தான்.
English:- "You Have Sent To John And He Has Testified To The Truth.
34 - நான் ஏற்றுக்கொள்ளுகிற சாட்சி மனுஷருடைய சாட்சியல்ல, நீங்கள் இரட்சிக்கப்படுவதற்காகவே இவைகளைச் சொல்லுகிறேன்.
English:- Not That I Accept Human Testimony; But I Mention It That You May Be Saved.
35 - அவன் எரிந்து பிரகாசிக்கிற விளக்காயிருந்தான்; நீங்களும் சிலகாலம் அவன் வெளிச்சத்திலே களிகூர மனதாயிருந்தீர்கள்.
English:- John Was A Lamp That Burned And Gave Light, And You Chose For A Time To Enjoy His Light.
36 - யோவானுடைய சாட்சியைப்பார்க்கிலும் மேன்மையான சாட்சி எனக்கு உண்டு; அதென்னவெனில், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான கிரியைகளே பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறது.
English:- "I Have Testimony Weightier Than That Of John. For The Very Work That The Father Has Given Me To Finish, And Which I Am Doing, Testifies That The Father Has Sent Me.
37 - என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை.
English:- And The Father Who Sent Me Has Himself Testified Concerning Me. You Have Never Heard His Voice Nor Seen His Form,
38 - அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசியாதபடியால் அவருடைய வசனம் உங்களில் தரித்திருக்கிறதுமில்லை.
English:- Nor Does His Word Dwell In You, For You Do Not Believe The One He Sent.
39 - வேதவாக்கியங்களை ஆராய்ந்துபாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே.
English:- You Diligently Study The Scriptures Because You Think That By Them You Possess Eternal Life. These Are The Scriptures That Testify About Me,
40 - அப்படியிருந்தும் உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடத்தில் வர உங்களுக்கு மனதில்லை.
English:- Yet You Refuse To Come To Me To Have Life.
42 - உங்களில் தேவ அன்பு இல்லையென்று உங்களை அறிந்திருக்கிறேன்.
English:- But I Know You. I Know That You Do Not Have The Love Of God In Your Hearts.
43 - நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுய நாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள்.
English:- I Have Come In My Father's Name, And You Do Not Accept Me; But If Someone Else Comes In His Own Name, You Will Accept Him.
44 - தேவனாலேமாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்?
English:- How Can You Believe If You Accept Praise From One Another, Yet Make No Effort To Obtain The Praise That Comes From The Only God ?
45 - பிதாவினிடத்தில் நான் உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவேன் என்று நினையாதிருங்கள், நீங்கள் நம்புகிற மோசேயே உங்கள்மேல் குற்றஞ்சாட்டுவான்.
English:- "But Do Not Think I Will Accuse You Before The Father. Your Accuser Is Moses, On Whom Your Hopes Are Set.
46 - நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறானே.
English:- If You Believed Moses, You Would Believe Me, For He Wrote About Me.
47 - அவன் எழுதின வாக்கியங்களை நீங்கள் விசுவாசியாமலிருந்தால் நான் சொல்லுகிற வசனங்களை எப்படி விசுவாசிப்பீர்கள் என்றார்.
English:- But Since You Do Not Believe What He Wrote, How Are You Going To Believe What I Say?"