பரிசுத்த வேதாகமம் யோசுவா அதிகாரம் 20 – Read Holy Bible Book Of Joshua Chapter 20 In Tamil With English Reference
2 - நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: அறியாமல் கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் ஓடிப்போயிருக்கும்படி, நான் மோசேயைக்கொண்டு உங்களுக்குக் கற்பித்த அடைக்கலப்பட்டணங்களை உங்களுக்கு ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
English:- "Tell The Israelites To Designate The Cities Of Refuge, As I Instructed You Through Moses,
3 - அவைகள் உங்களுக்கு இரத்தப்பழிவாங்குகிறவனுடைய கைக்குத் தப்பிப்போயிருக்கத்தக்க அடைக்கலமாயிருக்கும்.
English:- So That Anyone Who Kills A Person Accidentally And Unintentionally May Flee There And Find Protection From The Avenger Of Blood.
4 - அந்தப் பட்டணங்களில் ஒன்றிற்கு ஓடிவருகிறவன், பட்டணத்தின் ஒலிமுகவாசலில் நின்றுகொண்டு, அந்தப் பட்டணத்தினுடைய மூப்பரின் செவிகள் கேட்க, தன் காரியத்தைச் சொல்வானாக; அப்பொழுது அவர்கள் அவனைத் தங்களிடத்தில் பட்டணத்துக்குள்ளே சேர்த்துக்கொண்டு, தங்களோடே குடியிருக்க அவனுக்கு இடம் கொடுக்கக்கடவர்கள்.
English:- "When He Flees To One Of These Cities, He Is To Stand In The Entrance Of The City Gate And State His Case Before The Elders Of That City. Then They Are To Admit Him Into Their City And Give Him A Place To Live With Them.
5 - பழிவாங்குகிறவன் அவனைத் தொடர்ந்து வந்தால், அவன் பிறனை முற்பகையின்றி அறியாமல் கொன்றதினால், அவனை இவன் கையில் ஒப்புக்கொடாதிருக்கவேண்டும்.
English:- If The Avenger Of Blood Pursues Him, They Must Not Surrender The One Accused, Because He Killed His Neighbor Unintentionally And Without Malice Aforethought.
6 - நியாயம் விசாரிக்கும் சபைக்கு முன்பாக அவன் நிற்கும்வரைக்கும், அந்நாட்களிலிருக்கிற பிரதான ஆசாரியன் மரணமடையும்வரைக்கும், அவன் அந்தப் பட்டணத்திலே குடியிருக்கக்கடவன்; பின்பு கொலைசெய்தவன் தான் விட்டோடிப்போன தன் பட்டணத்திற்கும் தன் வீட்டிற்கும் திரும்பிப்போகவேண்டும் என்று சொல் என்றார்.
English:- He Is To Stay In That City Until He Has Stood Trial Before The Assembly And Until The Death Of The High Priest Who Is Serving At That Time. Then He May Go Back To His Own Home In The Town From Which He Fled."
7 - அப்படியே அவர்கள் நப்தலியின் மலைத்தேசமான கலிலேயாவிலுள்ள கேதேசையும் எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள சீகேமையும், யூதாவின் மலைத்தேசத்திலுள்ள எபிரோனாகிய கீரியாத் அர்பாவையும் ஏற்படுத்தினார்கள்.
English:- So They Set Apart Kedesh In Galilee In The Hill Country Of Naphtali, Shechem In The Hill Country Of Ephraim, And Kiriath Arba (That Is, Hebron) In The Hill Country Of Judah.
8 - எரிகோவிலிருக்கும் யோர்தானுக்கு அக்கரையான கிழக்கிலே ரூபன் கோத்திரத்திற்கு இருக்கும் சமபூமியின் வனாந்தரத்திலுள்ள பேசேரையும், காத் கோத்திரத்திற்கு இருக்கும் கீலேயாத்திலுள்ள ராமோத்தையும், மனாசே கோத்திரத்திற்கு இருக்கும் பாசானிலுள்ள கோலானையும் குறித்து வைத்தார்கள்.
English:- On The East Side Of The Jordan Of Jericho They Designated Bezer In The Desert On The Plateau In The Tribe Of Reuben, Ramoth In Gilead In The Tribe Of Gad, And Golan In Bashan In The Tribe Of Manasseh.
9 - கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றவன் எவனோ அவன் சபைக்கு முன்பாக நிற்கும் வரைக்கும், பழிவாங்குகிறவன் கையினால் சாகாதபடிக்கு, ஓடிப்போய் ஒதுங்கும்படி, இஸ்ரவேல் புத்திரர் யாவருக்கும், அவர்கள் நடுவே தங்குகிற பரதேசிக்கும், குறிக்கப்பட்ட பட்டணங்கள் இவைகளே.
English:- Any Of The Israelites Or Any Alien Living Among Them Who Killed Someone Accidentally Could Flee To These Designated Cities And Not Be Killed By The Avenger Of Blood Prior To Standing Trial Before The Assembly.