பரிசுத்த வேதாகமம் யோசுவா அதிகாரம் 8 – Read Holy Bible Book Of Joshua Chapter 8 In Tamil With English Reference
1 - அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: நீ பயப்படாமலும் கலங்காமலும் இரு; நீ யுத்த ஜனங்கள் யாவரையும் கூட்டிக்கொண்டு எழுந்து, ஆயிபட்டணத்தின்மேல் போ, இதோ ஆயியின் ராஜாவையும் அவன் ஜனத்தையும் அவன் பட்டணத்தையும் அவன் நாட்டையும் உன் கையிலே ஒப்புக்கொடுத்தேன்.
English:- Then The Lord Said To Joshua, "Do Not Be Afraid; Do Not Be Discouraged. Take The Whole Army With You, And Go Up And Attack Ai. For I Have Delivered Into Your Hands The King Of Ai, His People, His City And His Land.
2 - நீ எரிகோவுக்கும் அதின் ராஜாவுக்கும் செய்தபடி, ஆயிக்கும் அதின் ராஜாவுக்கும் செய்யக்கடவாய்; அதில் கொள்ளையிட்ட பொருள்களையும் மிருக ஜீவன்களையும் உங்களுக்குக் கொள்ளையாக எடுத்துக்கொள்ளலாம், பட்டணத்துக்குப் பின்னாலே பதிவிடையை வை என்றார்.
English:- You Shall Do To Ai And Its King As You Did To Jericho And Its King, Except That You May Carry Off Their Plunder And Livestock For Yourselves. Set An Ambush Behind The City."
3 - அப்பொழுது ஆயியின்மேல் போக, யோசுவாவும் சகல யுத்த ஜனங்களும் எழுந்து புறப்பட்டார்கள்; யோசுவா யுத்தவீரரான முப்பதினாயிரம் பேரைத் தெரிந்தெடுத்து இராத்திரியிலே அவர்களை அனுப்பி,
English:- So Joshua And The Whole Army Moved Out To Attack Ai. He Chose Thirty Thousand Of His Best Fighting Men And Sent Them Out At Night
4 - அவர்களுக்குக் கட்டளையிட்டதாவது: நீங்கள் பட்டணத்தின்பின்னாலே பதிவிருக்கவேண்டும்; பட்டணத்துக்கு வெகுதூரமாய்ப் போகாமல், எல்லாரும் ஆயத்தமாயிருங்கள்.
English:- With These Orders: "Listen Carefully. You Are To Set An Ambush Behind The City. Don't Go Very Far From It. All Of You Be On The Alert.
5 - நானும் என்னோடிருக்கிற சகல ஜனங்களும் பட்டணத்தண்டையில் கிட்டிச் சேருவோம்; அவர்கள் முன்போல எங்களுக்கு எதிராகப் புறப்பட்டு வரும்போது, அவர்களுக்கு முன்னாக நாங்கள் ஓடிப்போவோம்.
English:- I And All Those With Me Will Advance On The City, And When The Men Come Out Against Us, As They Did Before, We Will Flee From Them.
6 - அப்பொழுது அவர்கள்: முன்போல நமக்கு முன்னாக முறிந்து ஓடிப்போகிறார்கள் என்று சொல்லி, எங்களைத் துரத்தப் புறப்படுவார்கள்; நாங்களோ அவர்களைப் பட்டணத்தைவிட்டு இப்பாலே வரப்பண்ணுமட்டும், அவர்களுக்கு முன்னாக ஓடுவோம்.
English:- They Will Pursue Us Until We Have Lured Them Away From The City, For They Will Say, 'They Are Running Away From Us As They Did Before.' So When We Flee From Them,
7 - அப்பொழுது நீங்கள் பதிவிலிருந்து எழும்பிவந்து, பட்டணத்தைப் பிடிக்கவேண்டும்; உங்கள் தேவனாகிய கர்த்தர் அதை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுப்பார்.
English:- You Are To Rise Up From Ambush And Take The City. The Lord Your God Will Give It Into Your Hand.
8 - நீங்கள் பட்டணத்தைப் பிடிக்கும்போது அதைத் தீக்கொளுத்திப்போடுங்கள்; கர்த்தருடைய சொற்படி செய்யுங்கள்; இதோ, நான் உங்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறேன் என்று சொல்லி,
English:- When You Have Taken The City, Set It On Fire. Do What The Lord Has Commanded. See To It; You Have My Orders."
9 - அவர்களை அனுப்பினான்; அவர்கள் போய், பெத்தேலுக்கும் ஆயிக்கும் நடுவே, ஆயிக்கு மேற்காகப் பதிவிருந்தார்கள்; யோசுவா அன்று ராத்திரி ஜனங்களுக்குள் தங்கினான்.
English:- Then Joshua Sent Them Off, And They Went To The Place Of Ambush And Lay In Wait Between Bethel And Ai, To The West Of Ai-but Joshua Spent That Night With The People.
10 - அதிகாலமே யோசுவா எழுந்திருந்து, ஜனங்களை இலக்கம்பார்த்து இஸ்ரவேலின் மூப்பரோடுங்கூட ஜனங்களுக்கு முன்னாலே நடந்து, ஆயியின்மேல் போனான்.
English:- Early The Next Morning Joshua Mustered His Men, And He And The Leaders Of Israel Marched Before Them To Ai.
11 - அவனோடிருந்த யுத்த ஜனங்கள் எல்லாரும் நடந்து, பட்டணத்துக்கு எதிரே வந்து சேர்ந்து, ஆயிக்கு வடக்கே பாளயமிறங்கினார்கள்; அவர்களுக்கும் ஆயிக்கும் நடுவே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது.
English:- The Entire Force That Was With Him Marched Up And Approached The City And Arrived In Front Of It. They Set Up Camp North Of Ai, With The Valley Between Them And The City.
12 - அவன் ஏறக்குறைய ஐயாயிரம் பேரைப் பிரித்தெடுத்து, அவர்களைப் பெத்தேலுக்கும் ஆயிக்கும் நடுவே பட்டணத்துக்கு மேலண்டையில் பதிவிடையாக வைத்தான்.
English:- Joshua Had Taken About Five Thousand Men And Set Them In Ambush Between Bethel And Ai, To The West Of The City.
13 - பட்டணத்துக்கு வடக்கே இருந்த சகல சேனையும் பட்டணத்திற்கு மேற்கே பதிவிருக்கிறவர்களையும் திட்டம்பண்ணினபின்பு, யோசுவா அன்று ராத்திரி பள்ளத்தாக்கிலே போயிருந்தான்.
English:- They Had The Soldiers Take Up Their Positions-all Those In The Camp To The North Of The City And The Ambush To The West Of It. That Night Joshua Went Into The Valley.
14 - ஆயியின் ராஜா அதைக்கண்டபோது, அவனும் பட்டணத்தின் மனுஷராகிய அவனுடைய சகல ஜனங்களும் தீவிரித்து, அதிகாலமே குறித்த வேளையில் இஸ்ரவேலருக்கு எதிரே யுத்தம்பண்ணச் சமனான வெளிக்கு நேராகப் புறப்பட்டார்கள்; பட்டணத்துக்குப் பின்னாலே தனக்குப் பதிவிடை வைத்திருக்கிறதை அவன் அறியாதிருந்தான்.
English:- When The King Of Ai Saw This, He And All The Men Of The City Hurried Out Early In The Morning To Meet Israel In Battle At A Certain Place Overlooking The Arabah. But He Did Not Know That An Ambush Had Been Set Against Him Behind The City.
15 - யோசுவாவும் இஸ்ரவேலர் எல்லாரும் அவர்களுக்கு முன்னாக முறிந்து, வனாந்தரத்துக்குப் போகிற வழியே ஓடிப்போனார்கள்.
English:- Joshua And All Israel Let Themselves Be Driven Back Before Them, And They Fled Toward The Desert.
16 - அப்பொழுது பட்டணத்துக்குள் இருந்த ஜனங்கள் எல்லாரும் அவர்களைத் துரத்தும்படி கூப்பிட்டுக்கொண்டு யோசுவாவைப் பின்தொடர்ந்து பட்டணத்தைவிட்டு அப்புறப்பட்டார்கள்.
English:- All The Men Of Ai Were Called To Pursue Them, And They Pursued Joshua And Were Lured Away From The City.
17 - ஆயியிலும் பெத்தேலிலும் இஸ்ரவேலைப் பின்தொடராத மனுஷன் இருந்ததில்லை; பட்டணத்தைத் திறந்துவைத்துவிட்டு, இஸ்ரவேலரைத் துரத்திக்கொண்டுபோனார்கள்.
English:- Not A Man Remained In Ai Or Bethel Who Did Not Go After Israel. They Left The City Open And Went In Pursuit Of Israel.
18 - அப்பொழுது கர்த்தர் யோசுவாவை நோக்கி: உன் கையில் இருக்கிற ஈட்டியை ஆயிக்கு நேராக நீட்டு; அதை உன் கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்; அப்படியே யோசுவா தன் கையில் இருந்த ஈட்டியைப் பட்டணத்துக்கு நேராக நீட்டினான்.
English:- Then The Lord Said To Joshua, "Hold Out Toward Ai The Javelin That Is In Your Hand, For Into Your Hand I Will Deliver The City." So Joshua Held Out His Javelin Toward Ai.
19 - அவன் தன் கையை நீட்டினவுடனே, பதிவிருந்தவர்கள் தீவிரமாய்த் தாங்கள் இருந்த இடத்திலிருந்து எழும்பி ஓடி, பட்டணத்துக்கு வந்து, அதைப்பிடித்து, தீவிரத்தோடே பட்டணத்தைத் தீக்கொளுத்தினார்கள்.
English:- As Soon As He Did This, The Men In The Ambush Rose Quickly From Their Position And Rushed Forward. They Entered The City And Captured It And Quickly Set It On Fire.
20 - ஆயியின் மனுஷர் பின்னிட்டுப் பார்த்தபோது, இதோ பட்டணத்தின் புகை ஆகாசத்தில் எழும்புகிறதைக் கண்டார்கள்; அப்பொழுது அங்கும் இங்கும் ஓடிப்போகிறதற்கு அவர்களுக்கு இடம் இல்லாமற்போயிற்று; வனாந்தரத்துக்கு ஓடின ஜனங்கள் தங்களைத் தொடர்ந்தவர்கள் முகமாய்த்திரும்பினார்கள்.
English:- The Men Of Ai Looked Back And Saw The Smoke Of The City Rising Against The Sky, But They Had No Chance To Escape In Any Direction, For The Israelites Who Had Been Fleeing Toward The Desert Had Turned Back Against Their Pursuers.
21 - பதிவிருந்தவர்கள் பட்டணத்தைப் பிடித்ததையும், பட்டணத்தின் புகை எழும்புகிறதையும், யோசுவாவும் இஸ்ரவேலரும் பார்த்தபோது, திரும்பிக்கொண்டு, ஆயியின் மனுஷரை முறிய அடித்தார்கள்.
English:- For When Joshua And All Israel Saw That The Ambush Had Taken The City And That Smoke Was Going Up From The City, They Turned Around And Attacked The Men Of Ai.
22 - பட்டணத்திலிருந்தவர்களும் அவர்களுக்கு எதிர்ப்பட்டதினால், சிலர் இப்புறத்திலும் சிலர் அப்புறத்திலுமிருந்த இஸ்ரவேலின் நடுவே அகப்பட்டுக்கொண்டார்கள்; ஆகையால் அவர்களில் ஒருவனும் தப்பி மீந்திராதபடிக்கு அவர்களை வெட்டிப்போட்டு,
English:- The Men Of The Ambush Also Came Out Of The City Against Them, So That They Were Caught In The Middle, With Israelites On Both Sides. Israel Cut Them Down, Leaving Them Neither Survivors Nor Fugitives.
23 - ஆயியின் ராஜாவை உயிரோடே பிடித்து, யோசுவாவினிடத்தில் கொண்டுவந்தார்கள்.
English:- But They Took The King Of Ai Alive And Brought Him To Joshua.
24 - இஸ்ரவேலர் வனாந்தரவெளியிலே தங்களைத் துரத்தின ஆயியின் குடிகளையெல்லாம் வெட்டித் தீர்ந்தபோதும், அவர்கள் அனைவரும் நாசமாகுமட்டும் பட்டயக்கருக்கினால் விழுந்து இறந்தபோதும், இஸ்ரவேலர் எல்லாரும் ஆயிக்குத்திரும்பி, அதைப் பட்டயக்கருக்கினால் சங்கரித்தார்கள்.
English:- When Israel Had Finished Killing All The Men Of Ai In The Fields And In The Desert Where They Had Chased Them, And When Every One Of Them Had Been Put To The Sword, All The Israelites Returned To Ai And Killed Those Who Were In It.
25 - அந்நாளிலே ஆணும் பெண்ணுமாக ஆயியின் மனுஷர் எல்லாரும் பன்னீராயிரம்பேர் விழுந்தார்கள்.
English:- Twelve Thousand Men And Women Fell That Day-all The People Of Ai.
26 - ஆயியின் குடிகளையெல்லாம் சங்கரித்துத் தீருமட்டும், யோசுவா ஈட்டியை நீட்டிக்கொண்டிருந்த தன் கையை மடக்கவில்லை.
English:- For Joshua Did Not Draw Back The Hand That Held Out His Javelin Until He Had Destroyed All Who Lived In Ai.
27 - கர்த்தர் யோசுவாவுக்குக் கட்டளையிட்ட வார்த்தையின்படி, மிருகஜீவனையும் அந்தப் பட்டணத்தின் கொள்ளையையும்மாத்திரம் இஸ்ரவேலர் எடுத்துக்கொண்டார்கள்.
English:- But Israel Did Carry Off For Themselves The Livestock And Plunder Of This City, As The Lord Had Instructed Joshua.
28 - யோசுவா ஆயியியைச் சுட்டெரித்து, அதை இந்நாள்வரைக்கும் இருக்கிறபடி என்றைக்கும் பாழாய்க்கிடக்கும் மண்மேடாக்கி,
English:- So Joshua Burned Ai And Made It A Permanent Heap Of Ruins, A Desolate Place To This Day.
29 - ஆயியின் ராஜாவை ஒரு மரத்திலே தூக்கிப்போடுவித்து, சாயங்காலமட்டும் அதிலே தொங்கவிட்டான்; சூரியன் அஸ்தமித்தபின்பு யோசுவா அவன் உடலை மரத்தைவிட்டு இறக்கச் சொன்னான்; அதைப் பட்டணவாசலில் போட்டு, இந்நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலை அதின்மேல் குவித்தார்கள்.
English:- He Hung The King Of Ai On A Tree And Left Him There Until Evening. At Sunset, Joshua Ordered Them To Take His Body From The Tree And Throw It Down At The Entrance Of The City Gate. And They Raised A Large Pile Of Rocks Over It, Which Remains To This Day.
30 - அப்பொழுது யோசுவா: கர்த்தரின் தாசனாகிய மோசே இஸ்ரவேல் புத்திரருக்குக் கட்டளையிட்டபடியும், மோசேயின் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடியும், ஏபால் பர்வதத்தில் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு இருப்பாயுதம்படாத முழுக்கற்களால் ஒரு பலிபீடத்தைக்கட்டினான்.
English:- Then Joshua Built On Mount Ebal An Altar To The Lord , The God Of Israel,
31 - அதின்மேல் கர்த்தருக்குச் சர்வாங்கதகனபலிகளைச் செலுத்தி, சமாதானபலிகளையும் இட்டார்கள்.
English:- As Moses The Servant Of The Lord Had Commanded The Israelites. He Built It According To What Is Written In The Book Of The Law Of Moses-an Altar Of Uncut Stones, On Which No Iron Tool Had Been Used. On It They Offered To The Lord Burnt Offerings And Sacrificed Fellowship Offerings.
32 - இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக மோசே எழுதியிருந்த நியாயப்பிரமாணத்தை அவன் அங்கே கற்களில் பேர்த்தெழுதினான்.
English:- There, In The Presence Of The Israelites, Joshua Copied On Stones The Law Of Moses, Which He Had Written.
33 - இஸ்ரவேல் ஜனங்களை ஆசீர்வதிக்கும்படி கர்த்தரின் தாசனாகிய மோசே முதலில் கட்டளையிட்டிருந்தபடியே; இஸ்ரவேலர் எல்லாரும், அவர்களுடைய மூப்பரும், அதிபதிகளும், நியாயாதிபதிகளும், அந்நியர்களும், இஸ்ரவேலில் பிறந்தவர்களும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற லேவியரான ஆசாரியருக்கு முன்பாக, பெட்டிக்கு இருபுறத்திலும், பாதிபேர் கெரிசீம் மலைக்கு எதிர்புறமாகவும், பாதிபேர் ஏபால் மலைக்கு எதிர்புறமாகவும் நின்றார்கள்.
English:- All Israel, Aliens And Citizens Alike, With Their Elders, Officials And Judges, Were Standing On Both Sides Of The Ark Of The Covenant Of The Lord , Facing Those Who Carried It-the Priests, Who Were Levites. Half Of The People Stood In Front Of Mount Gerizim And Half Of Them In Front Of Mount Ebal, As Moses The Servant Of The Lord Had Formerly Commanded When He Gave Instructions To Bless The People Of Israel.
34 - அதற்குப்பின்பு அவன் நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதியிருக்கிறபடி நியாயப்பிரமாணத்தில்சொல்லிய ஆசீர்வாதமும் சாபமுமாகிய சகல வார்த்தைகளையும் வாசித்தான்.
English:- Afterward, Joshua Read All The Words Of The Law-the Blessings And The Curses-just As It Is Written In The Book Of The Law.
35 - மோசே கட்டளையிட்ட எல்லாவற்றிலும் யோசுவா, இஸ்ரவேலின் முழுச்சபைக்கும், ஸ்திரீகளுக்கும் பிள்ளைகளுக்கும், அவர்களுக்குள் நடமாடி சஞ்சரித்த அந்நியர்களுக்கும் முன்பாக, ஒரு வார்த்தையையும் விடாமல் வாசித்தான்.
English:- There Was Not A Word Of All That Moses Had Commanded That Joshua Did Not Read To The Whole Assembly Of Israel, Including The Women And Children, And The Aliens Who Lived Among Them.