பரிசுத்த வேதாகமம் லேவியராகமம் அதிகாரம் 13 – Read Holy Bible Book Of Leviticus Chapter 13 In Tamil With English Reference
2 - ஒரு மனிதனுடைய சரீரத்தின்மேல் குஷ்டரோகம்போலிருக்கிற ஒரு தடிப்பாவது அசறாவது வெள்ளைப்படராவது உண்டானால், அவன் ஆசாரியனாகிய ஆரோனிடத்திலாகிலும், ஆசாரியராகிய அவன் குமாரரில் ஒருவனிடத்திலாகிலும் கொண்டுவரப்படக்கடவன்.
English:- "When Anyone Has A Swelling Or A Rash Or A Bright Spot On His Skin That May Become An Infectious Skin Disease, He Must Be Brought To Aaron The Priest Or To One Of His Sons Who Is A Priest.
3 - அப்பொழுது ஆசாரியன் அவன் சரீரத்தின்மேல் இருக்கிற ரோகத்தைப் பார்க்கவேண்டும்; ரோகம் இருக்கும் இடத்தில் மயிர் வெளுத்தும், ரோகமுள்ள இடம் அவனுடைய மற்றச் சரீரத்தைப்பார்க்கிலும் அதிகமாய்க் குழிந்தும் இருந்தால் அது குஷ்டரோகம்; ஆசாரியன் அவனைப் பார்த்தபின்பு, அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்.
English:- The Priest Is To Examine The Sore On His Skin, And If The Hair In The Sore Has Turned White And The Sore Appears To Be More Than Skin Deep, It Is An Infectious Skin Disease. When The Priest Examines Him, He Shall Pronounce Him Ceremonially Unclean.
4 - அவன் சரீரத்தின்மேல் வெள்ளைப் படர்ந்திருந்தாலும், அவ்விடம் அவனுடைய மற்றத் தோலைப்பார்க்கிலும் அதிக பள்ளமாயிராமலும், அதின் மயிர் வெள்ளையாக மாறாமலும் இருந்தால், ஆசாரியன் அவனை ஏழுநாள் அடைத்துவைத்து,
English:- If The Spot On His Skin Is White But Does Not Appear To Be More Than Skin Deep And The Hair In It Has Not Turned White, The Priest Is To Put The Infected Person In Isolation For Seven Days.
5 - ஏழாம் நாளில் அவனைப் பார்க்கக்கடவன்; தோலில் ரோகம் அதிகப்படாமல், அவன் பார்வைக்கு ரோகம் நின்றிருந்தால், ஆசாரியன் இரண்டாந்தரம் அவனை ஏழுநாள் அடைத்துவைத்து,
English:- On The Seventh Day The Priest Is To Examine Him, And If He Sees That The Sore Is Unchanged And Has Not Spread In The Skin, He Is To Keep Him In Isolation Another Seven Days.
6 - இரண்டாந்தரம் அவனை ஏழாம்நாளில் பார்க்கக்கடவன்; தோலில் ரோகம் அதிகப்படாமல் சுருங்கியிருந்தால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது அசறு; அவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்துச் சுத்தமாயிருப்பானாக.
English:- On The Seventh Day The Priest Is To Examine Him Again, And If The Sore Has Faded And Has Not Spread In The Skin, The Priest Shall Pronounce Him Clean; It Is Only A Rash. The Man Must Wash His Clothes, And He Will Be Clean.
7 - தன்னைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கிறதற்கு அவன் தன்னை ஆசாரியனுக்குக் காண்பித்தபின்பு, அசறு தோலில் அதிகமாய்ப் படர்ந்திருந்தால், அவன் மறுபடியும் ஆசாரியனுக்குத் தன்னைக் காண்பிக்கக்கடவன்.
English:- But If The Rash Does Spread In His Skin After He Has Shown Himself To The Priest To Be Pronounced Clean, He Must Appear Before The Priest Again.
8 - அப்பொழுது அசறு தோலிலே படர்ந்தது என்று ஆசாரியன் கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது குஷ்டரோகம்.
English:- The Priest Is To Examine Him, And If The Rash Has Spread In The Skin, He Shall Pronounce Him Unclean; It Is An Infectious Disease.
9 - குஷ்டரோகம் ஒரு மனிதனுக்கு இருந்தால், அவனை ஆசாரியனிடத்தில் கொண்டுவரவேண்டும்.
English:- "When Anyone Has An Infectious Skin Disease, He Must Be Brought To The Priest.
10 - அப்பொழுது ஆசாரியன் அவனைப் பார்த்து, தோலிலே வெள்ளையான தடிப்பிருந்து, அது மயிரை வெண்மையாக மாறப்பண்ணிற்றென்றும், அந்தத் தடிப்புள்ள இடத்திலே இரணமாம்சம் உண்டென்றும் கண்டால்,
English:- The Priest Is To Examine Him, And If There Is A White Swelling In The Skin That Has Turned The Hair White And If There Is Raw Flesh In The Swelling,
11 - அது அவன் சரீரத்திலுள்ள நாள்பட்ட குஷ்டம்; அவன் தீட்டுள்ளவன். ஆதலால், ஆசாரியன் அவனை அடைத்து வைக்காமல், தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்.
English:- It Is A Chronic Skin Disease And The Priest Shall Pronounce Him Unclean. He Is Not To Put Him In Isolation, Because He Is Already Unclean.
12 - ஆசாரியன் பார்க்கிற இடங்களெங்கும் தோலிலே குஷ்டம் தோன்றி, அந்த ரோகமுள்ளவனுடைய தலை தொடங்கி அவன் கால்மட்டும் அது தேகமுழுவதையும் மூடியிருக்கக்கண்டால்,
English:- "If The Disease Breaks Out All Over His Skin And, So Far As The Priest Can See, It Covers All The Skin Of The Infected Person From Head To Foot,
13 - அப்பொழுது ஆசாரியன் பார்த்து, குஷ்டம் அவன் சரீரம் முழுவதையும் மூடியிருந்தால், அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் உடம்பெல்லாம் வெண்மையாய்ப்போனபடியால், அவன் சுத்தமுள்ளவன்.
English:- The Priest Is To Examine Him, And If The Disease Has Covered His Whole Body, He Shall Pronounce That Person Clean. Since It Has All Turned White, He Is Clean.
14 - ஆனாலும் இரணமாம்சம் அவனில் காணப்பட்டால், அவன் தீட்டுள்ளவன்.
English:- But Whenever Raw Flesh Appears On Him, He Will Be Unclean.
15 - ஆகையால், இரணமாம்சத்தை ஆசாரியன் காணும்போது, அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; இரணமாம்சம் தீட்டுள்ளது; அது குஷ்டம்.
English:- When The Priest Sees The Raw Flesh, He Shall Pronounce Him Unclean. The Raw Flesh Is Unclean; He Has An Infectious Disease.
16 - அல்லது, இரணமாம்சம் மாறி வெண்மையானால், அவன் ஆசாரியனிடத்துக்கு வரவேண்டும்.
English:- Should The Raw Flesh Change And Turn White, He Must Go To The Priest.
17 - ஆசாரியன் அவனைப் பார்த்து, ரோகமுள்ள இடம் வெண்மையாக மாறினதென்று கண்டால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் சுத்தமுள்ளவன்.
English:- The Priest Is To Examine Him, And If The Sores Have Turned White, The Priest Shall Pronounce The Infected Person Clean; Then He Will Be Clean.
18 - சரீரத்தின்மேல் புண் உண்டாயிருந்து ஆறிப்போய்,
English:- "When Someone Has A Boil On His Skin And It Heals,
19 - அவ்விடத்திலே ஒரு வெள்ளைத்தடிப்பாவது சிவப்பு கலந்த ஒரு வெள்ளைப்படராவது உண்டானால், அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.
English:- And In The Place Where The Boil Was, A White Swelling Or Reddish-white Spot Appears, He Must Present Himself To The Priest.
20 - ஆசாரியன் அதைப் பார்த்து, அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் குழிந்திருக்கவும், அதின் மயிர் வெள்ளையாக மாறியிருக்கவும் கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கவேண்டும்; அது புண்ணில் எழும்பின குஷ்டம்.
English:- The Priest Is To Examine It, And If It Appears To Be More Than Skin Deep And The Hair In It Has Turned White, The Priest Shall Pronounce Him Unclean. It Is An Infectious Skin Disease That Has Broken Out Where The Boil Was.
21 - ஆசாரியன் அதைப் பார்த்து, அதில் வெள்ளைமயிர் இல்லை என்றும், அது மற்றத் தோலைப்பார்க்கிலும் குழிந்திராமல் சுருங்கியிருக்கிறது என்றும் கண்டானாகில், அவனை ஏழுநாள் அடைத்துவைத்து,
English:- But If, When The Priest Examines It, There Is No White Hair In It And It Is Not More Than Skin Deep And Has Faded, Then The Priest Is To Put Him In Isolation For Seven Days.
22 - அது தோலில் அதிகமாய்ப் படர்ந்திருக்கக் கண்டால், அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது குஷ்டந்தான்.
English:- If It Is Spreading In The Skin, The Priest Shall Pronounce Him Unclean; It Is Infectious.
23 - அந்த வெள்ளைப்படர் அதிகப்படாமல், அவ்வளவில் நின்றிருக்குமாகில், அது புண்ணின் தழும்பாயிருக்கும்; ஆகையால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்.
English:- But If The Spot Is Unchanged And Has Not Spread, It Is Only A Scar From The Boil, And The Priest Shall Pronounce Him Clean.
24 - ஒருவனுடைய சரீரத்தின்மேல் நெருப்புப்பட்டதினாலே வெந்து, அந்த வேக்காடு ஆறிப்போன இடத்திலே சிவப்பான படராவது வெண்மையான படராவது உண்டானால்,
English:- "When Someone Has A Burn On His Skin And A Reddish-white Or White Spot Appears In The Raw Flesh Of The Burn,
25 - ஆசாரியன் அதைப்பார்க்கக்கடவன்; அந்தப் படரிலே மயிர் வெண்மையாக மாறி, அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமாயிருந்தால், அது வேக்காட்டினால் எழும்பின குஷ்டம்; ஆகையால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது குஷ்டரோகந்தான்.
English:- The Priest Is To Examine The Spot, And If The Hair In It Has Turned White, And It Appears To Be More Than Skin Deep, It Is An Infectious Disease That Has Broken Out In The Burn. The Priest Shall Pronounce Him Unclean; It Is An Infectious Skin Disease.
26 - ஆசாரியன் அதைப் பார்க்கிறபோது, படரிலே வெள்ளைமயிர் இல்லை என்றும், அது மற்றத் தோலைப்பார்க்கிலும் குழிந்திராமல், சுருங்கியிருக்கிறது என்றும் கண்டானாகில், அவனை ஏழுநாள் அடைத்து வைத்து,
English:- But If The Priest Examines It And There Is No White Hair In The Spot And If It Is Not More Than Skin Deep And Has Faded, Then The Priest Is To Put Him In Isolation For Seven Days.
27 - ஏழாம்நாளில் அவனைப் பார்க்கக்கடவன்; அது தோலில் அதிகமாய்ப் படர்ந்திருந்தால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது குஷ்டரோகம்.
English:- On The Seventh Day The Priest Is To Examine Him, And If It Is Spreading In The Skin, The Priest Shall Pronounce Him Unclean; It Is An Infectious Skin Disease.
28 - படரானது தோலில் பெருகாமல், அவ்வளவில் நின்று சுருங்கியிருந்ததாகில், அது சூட்டினால் உண்டான தழும்பு; ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவனென்று தீர்க்கக்கடவன்; அது சூட்டினால் வந்த வேக்காடு.
English:- If, However, The Spot Is Unchanged And Has Not Spread In The Skin But Has Faded, It Is A Swelling From The Burn, And The Priest Shall Pronounce Him Clean; It Is Only A Scar From The Burn.
29 - புருஷனுக்காகிலும் ஸ்திரீக்காகிலும் தலையிலாவது தாடியிலாவது ஒரு சொறி உண்டானால்,
English:- "If A Man Or Woman Has A Sore On The Head Or On The Chin,
30 - ஆசாரியன் அதைப் பார்த்து, அவ்விடம் மற்றத்தோலைப்பார்க்கிலும் பள்ளமும் அதிலே மயிர் பொன் நிறமும் மிருதுவுமாயிருக்கக்கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவனென்று தீர்க்கக்கடவன்; அது தலையிலும் தாடியிலும் உண்டாகிற சொறிகுஷ்டம்.
English:- The Priest Is To Examine The Sore, And If It Appears To Be More Than Skin Deep And The Hair In It Is Yellow And Thin, The Priest Shall Pronounce That Person Unclean; It Is An Itch, An Infectious Disease Of The Head Or Chin.
31 - ஆசாரியன் அந்தச் சொறிகுஷ்டத்தைப் பார்க்கும்போது, அவ்விடம் மற்றத்தோலைப்பார்க்கிலும் பள்ளமாயிராமலும் அதிலே கறுத்தமயிர் இல்லாமலும் இருக்கக்கண்டால், ஆசாரியன் அவனை ஏழு நாள் அடைத்துவைத்து,
English:- But If, When The Priest Examines This Kind Of Sore, It Does Not Seem To Be More Than Skin Deep And There Is No Black Hair In It, Then The Priest Is To Put The Infected Person In Isolation For Seven Days.
32 - ஏழாம்நாளில் ஆசாரியன் அதைப் பார்க்கக்கடவன்; அந்தச் சொறி இடங்கொள்ளாமலும் அதிலே பொன்நிறமயிர் இல்லாமலும், அவ்விடம் மற்றத்தோலைப் பார்க்கிலும் பள்ளமில்லாமலும் இருந்தால்,
English:- On The Seventh Day The Priest Is To Examine The Sore, And If The Itch Has Not Spread And There Is No Yellow Hair In It And It Does Not Appear To Be More Than Skin Deep,
33 - அந்தச் சொறியுள்ள இடந்தவிர, மற்ற யாவையும் அவன் சிரைத்துக்கொள்ளக்கடவன்; பின்பு, ஆசாரியன் இரண்டாந்தரம் அவனை ஏழு நாள் அடைத்துவைத்து,
English:- He Must Be Shaved Except For The Diseased Area, And The Priest Is To Keep Him In Isolation Another Seven Days.
34 - ஏழாம் நாளில் அதைப் பார்க்கக்கடவன்; சொறி தோலில் இடங்கொள்ளாமலும், அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமில்லாமலும் இருந்தால், ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்தபின் சுத்தமாயிருப்பான்.
English:- On The Seventh Day The Priest Is To Examine The Itch, And If It Has Not Spread In The Skin And Appears To Be No More Than Skin Deep, The Priest Shall Pronounce Him Clean. He Must Wash His Clothes, And He Will Be Clean.
35 - அவன் சுத்தமுள்ளவனென்று தீர்க்கப்பட்டபின், அந்தச் சொறி தோலில் இடங்கொண்டதானால்,
English:- But If The Itch Does Spread In The Skin After He Is Pronounced Clean,
36 - ஆசாரியன் அவனைப் பார்க்கக்கடவன்; சொறி தோலில் இடங்கொண்டிருந்தால், அப்பொழுது மயிர் பொன்நிறமா அல்லவா என்று ஆசாரியன் விசாரிக்கவேண்டியதில்லை; அவன் தீட்டுள்ளவனே.
English:- The Priest Is To Examine Him, And If The Itch Has Spread In The Skin, The Priest Does Not Need To Look For Yellow Hair; The Person Is Unclean.
37 - அவன் பார்வைக்கு அந்தச் சொறி நீங்கி, அதில் கறுத்தமயிர் முளைத்ததேயாகில், சொறி சொஸ்தமாயிற்று; அவன் சுத்தமுள்ளவன்; ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்.
English:- If, However, In His Judgment It Is Unchanged And Black Hair Has Grown In It, The Itch Is Healed. He Is Clean, And The Priest Shall Pronounce Him Clean.
38 - ஒரு புருஷனுக்காகிலும் ஸ்திரீக்காகிலும் அவர்கள் சரீரத்தின்மேல் வெள்ளைப் புள்ளிகள் உண்டாயிருந்தால்,
English:- "When A Man Or Woman Has White Spots On The Skin,
39 - ஆசாரியன் பார்க்கக்கடவன்; அவர்கள் சரீரத்திலே மங்கின வெள்ளைப் புள்ளிகள் இருந்தால், அது தோலில் எழும்புகிற வெள்ளைத் தேமல்; அவர்கள் சுத்தமுள்ளவர்கள்.
English:- The Priest Is To Examine Them, And If The Spots Are Dull White, It Is A Harmless Rash That Has Broken Out On The Skin; That Person Is Clean.
40 - ஒருவனுடைய தலைமயிர் உதிர்ந்து, அவன் மொட்டையனானாலும் அவன் சுத்தமாயிருக்கிறான்.
English:- "When A Man Has Lost His Hair And Is Bald, He Is Clean.
41 - அவனுடைய முன்னந்தலை மயிர் உதிர்ந்தால், அவன் அரை மொட்டையன்; அவனும் சுத்தமாயிருக்கிறான்.
English:- If He Has Lost His Hair From The Front Of His Scalp And Has A Bald Forehead, He Is Clean.
42 - மொட்டைத்தலையிலாவது அரைமொட்டைத்தலையிலாவது சிவப்புக்கலந்த வெண்மையான படர் உண்டானால், அது அதில் எழும்புகிற குஷ்டம்.
English:- But If He Has A Reddish-white Sore On His Bald Head Or Forehead, It Is An Infectious Disease Breaking Out On His Head Or Forehead.
43 - ஆசாரியன் அவனைப் பார்க்கக்கடவன்; அவனுடைய மொட்டைத்தலையிலாவது அரைமொட்டைத்தலையிலாவது, மற்ற அங்கங்களின்மேல் உண்டாக்கும் குஷ்டத்தைப்போல, சிவப்புக்கலந்த வெண்மையான தடிப்பு இருக்கக் கண்டால்,
English:- The Priest Is To Examine Him, And If The Swollen Sore On His Head Or Forehead Is Reddish-white Like An Infectious Skin Disease,
44 - அவன் குஷ்டரோகி, அவன் தீட்டுள்ளவன்; ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அவன் வியாதி அவன் தலையிலே இருக்கிறது.
English:- The Man Is Diseased And Is Unclean. The Priest Shall Pronounce Him Unclean Because Of The Sore On His Head.
45 - அந்த வியாதி உண்டாயிருக்கிற குஷ்டரோகி வஸ்திரம் கிழிந்தவனாயும், தன் தலையை மூடாதவனாயும் இருந்து, அவன் தன் தாடியை மூடிக்கொண்டு, "தீட்டு, தீட்டு" என்று சத்தமிடவேண்டும்.
English:- "The Person With Such An Infectious Disease Must Wear Torn Clothes, Let His Hair Be Unkempt, Cover The Lower Part Of His Face And Cry Out, 'Unclean! Unclean!'
46 - அந்த வியாதி அவனில் இருக்கும் நாள்வரைக்கும் தீட்டுள்ளவனாக எண்ணப்படக்கடவன்; அவன் தீட்டுள்ளவனே; ஆகையால், அவன் தனியே குடியிருக்கவேண்டும்; அவன் குடியிருப்பு பாளயத்துக்குப் புறம்பே இருக்கக்கடவது.
English:- As Long As He Has The Infection He Remains Unclean. He Must Live Alone; He Must Live Outside The Camp.
47 - ஆட்டுமயிர் வஸ்திரத்திலாவது, பஞ்சுநூல் வஸ்திரத்திலாவது,
English:- "If Any Clothing Is Contaminated With Mildew-any Woolen Or Linen Clothing,
48 - பஞ்சுநூல், அல்லது ஆட்டுமயிரான பாவிலாவது, ஊடையிலாவது, ஒரு தோலிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது குஷ்டதோஷம் தோன்றி,
English:- Any Woven Or Knitted Material Of Linen Or Wool, Any Leather Or Anything Made Of Leather-
49 - வஸ்திரத்திலாவது, தோலிலாவது பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது குஷ்டதோஷம் பச்சையாயாவது சிவப்பாயாவது காணப்பட்டால் அது குஷ்டமாயிருக்கும்; அதை ஆசாரியனுக்குக் காண்பிக்கவேண்டும்.
English:- And If The Contamination In The Clothing, Or Leather, Or Woven Or Knitted Material, Or Any Leather Article, Is Greenish Or Reddish, It Is A Spreading Mildew And Must Be Shown To The Priest.
50 - ஆசாரியன் அதைப் பார்த்து, ஏழுநாள் அடைத்துவைத்து,
English:- The Priest Is To Examine The Mildew And Isolate The Affected Article For Seven Days.
51 - ஏழாம் நாளிலே அதைப் பார்க்கக்கடவன்; வஸ்திரத்திலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது அது அதிகப்பட்டிருந்தால், அது அரிக்கிற குஷ்டம்; அது தீட்டாயிருக்கும்.
English:- On The Seventh Day He Is To Examine It, And If The Mildew Has Spread In The Clothing, Or The Woven Or Knitted Material, Or The Leather, Whatever Its Use, It Is A Destructive Mildew; The Article Is Unclean.
52 - அந்தத் தோஷம் இருக்கிற ஆட்டு மயிரினாலும் பஞ்சுநூலினாலும் செய்த வஸ்திரத்தையும் பாவையும், ஊடையையும், தோலினால் செய்த எந்தவித வஸ்துவையும் சுட்டெரிக்கக்கடவன்; அது அரிக்கிற குஷ்டம்; ஆகையால் அக்கினியில் சுட்டெரிக்கப்படவேண்டும்.
English:- He Must Burn Up The Clothing, Or The Woven Or Knitted Material Of Wool Or Linen, Or Any Leather Article That Has The Contamination In It, Because The Mildew Is Destructive; The Article Must Be Burned Up.
53 - வஸ்திரத்தின் பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது, அந்தத் தோஷம் அதிகப்படவில்லை என்று ஆசாரியன் கண்டால்,
English:- "But If, When The Priest Examines It, The Mildew Has Not Spread In The Clothing, Or The Woven Or Knitted Material, Or The Leather Article,
54 - அப்பொழுது ஆசாரியன் அதைக் கழுவச்சொல்லி, இரண்டாந்தரம் ஏழு நாள் அடைத்துவைத்து,
English:- He Shall Order That The Contaminated Article Be Washed. Then He Is To Isolate It For Another Seven Days.
55 - அது கழுவப்பட்டபின்பு அதைப் பார்க்கக்கடவன்; அந்தத் தோஷம் அதிகப்படாதிருந்தாலும் அது நிறம் மாறாததாயிருந்தால் தீட்டாயிருக்கும்; அக்கினியில் அதைச் சுட்டெரிக்கவேண்டும்; அது அவ்வஸ்திரத்தின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் உருவ அரிக்கும்.
English:- After The Affected Article Has Been Washed, The Priest Is To Examine It, And If The Mildew Has Not Changed Its Appearance, Even Though It Has Not Spread, It Is Unclean. Burn It With Fire, Whether The Mildew Has Affected One Side Or The Other.
56 - கழுவப்பட்டபின்பு அது குறுகிற்றென்று ஆசாரியன் கண்டானேயாகில், அதை வஸ்திரத்திலாவது, தோலிலாவது, பாவிலாவது, ஊடையிலாவது இராதபடிக்கு எடுத்துப்போடவேண்டும்.
English:- If, When The Priest Examines It, The Mildew Has Faded After The Article Has Been Washed, He Is To Tear The Contaminated Part Out Of The Clothing, Or The Leather, Or The Woven Or Knitted Material.
57 - அது இன்னும் வஸ்திரத்திலாவது, பாவிலாவது, ஊடையிலாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவிலாவது காணப்பட்டால், அது படருகிற தோஷம்; ஆகையினால் அது உள்ளதை அக்கினியில் சுட்டெரிக்கவேண்டும்.
English:- But If It Reappears In The Clothing, Or In The Woven Or Knitted Material, Or In The Leather Article, It Is Spreading, And Whatever Has The Mildew Must Be Burned With Fire.
58 - வஸ்திரத்தின் பாவாவது, ஊடையாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவாவது கழுவப்பட்டபின்பு, அந்தத் தோஷம் அதைவிட்டுப் போயிற்றேயானால், இரண்டாந்தரம் கழுவப்படவேண்டும்; அப்பொழுது சுத்தமாயிருக்கும்.
English:- The Clothing, Or The Woven Or Knitted Material, Or Any Leather Article That Has Been Washed And Is Rid Of The Mildew, Must Be Washed Again, And It Will Be Clean."
59 - ஆட்டுமயிராலாகிலும் பஞ்சுநூலாகிலும் நெய்த வஸ்திரத்தையாவது, பாவையாவது, ஊடையையாவது, தோலினால் செய்த எந்தவித வஸ்துவையாவது, சுத்தமென்றாவது தீட்டென்றாவது தீர்க்கிறதற்கு, அதினுடைய குஷ்டதோஷத்துக்கடுத்த பிரமாணம் இதுவே என்றார்.
English:- These Are The Regulations Concerning Contamination By Mildew In Woolen Or Linen Clothing, Woven Or Knitted Material, Or Any Leather Article, For Pronouncing Them Clean Or Unclean.