பரிசுத்த வேதாகமம் லேவியராகமம் அதிகாரம் 24 – Read Holy Bible Book Of Leviticus Chapter 24 In Tamil With English Reference
2 - குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி அதற்காக இடித்துப் பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை இஸ்ரவேல் புத்திரர் உன்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களுக்குக் கட்டளையிடு.
English:- "Command The Israelites To Bring You Clear Oil Of Pressed Olives For The Light So That The Lamps May Be Kept Burning Continually.
3 - ஆசரிப்புக் கூடாரத்தில் சாட்சிசந்நிதியின் திரைக்கு வெளிப்புறமாக ஆரோன் அதை எப்பொழுதும் சாயங்காலம் தொடங்கி விடியற்காலம்மட்டும் கர்த்தருடைய சந்நிதியில் எரியும்படி ஏற்றக்கடவன்; இது உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.
English:- Outside The Curtain Of The Testimony In The Tent Of Meeting, Aaron Is To Tend The Lamps Before The Lord From Evening Till Morning, Continually. This Is To Be A Lasting Ordinance For The Generations To Come.
4 - அவன் எப்பொழுதும் கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்தமான குத்துவிளக்கின்மேல் இருக்கிற விளக்குகளை எரிய வைக்கக்கடவன்.
English:- The Lamps On The Pure Gold Lampstand Before The Lord Must Be Tended Continually.
5 - அன்றியும் நீ மெல்லிய மாவை எடுத்து, அதைப் பன்னிரண்டு அப்பங்களாகச் சுடுவாயாக; ஒவ்வொரு அப்பம் மரக்காலிலே பத்தில் இரண்டுபங்கு மாவினால் செய்யப்படவேண்டும்.
English:- "Take Fine Flour And Bake Twelve Loaves Of Bread, Using Two-tenths Of An Ephah For Each Loaf.
6 - அவைகளை நீ கர்த்தருடைய சந்நிதியில் பரிசுத்தமான மேஜையின்மேல் இரண்டு அடுக்காக, ஒவ்வொரு அடுக்கில் அவ்வாறு அப்பம் இருக்கும்படியாக வைத்து,
English:- Set Them In Two Rows, Six In Each Row, On The Table Of Pure Gold Before The Lord .
7 - ஒவ்வொரு அடுக்கினிடத்தில் சுத்தமான தூபவர்க்கம் போடக்கடவாய்; அது அப்பத்தோடிருந்து, ஞாபகக்குறியாகக் கர்த்தருக்கேற்ற தகனபலியாயிருக்கும்.
English:- Along Each Row Put Some Pure Incense As A Memorial Portion To Represent The Bread And To Be An Offering Made To The Lord By Fire.
8 - அப்பத்தை நித்திய உடன்படிக்கையாக இஸ்ரவேல் புத்திரர் கையிலே வாங்கி, ஓய்வுநாள்தோறும் கர்த்தருடைய சந்நிதியில் அடுக்கிவைக்கக்கடவன்.
English:- This Bread Is To Be Set Out Before The Lord Regularly, Sabbath After Sabbath, On Behalf Of The Israelites, As A Lasting Covenant.
9 - அது ஆரோனையும் அவன் குமாரரையும் சேரும்; அதைப் பரிசுத்த இடத்திலே புசிக்கக்கடவர்கள்; நித்திய கட்டளையாகக் கர்த்தருக்கு இடப்படும் தகனபலிகளில் அது அவனுக்கு மகா பரிசுத்தமாயிருக்கும் என்றார்.
English:- It Belongs To Aaron And His Sons, Who Are To Eat It In A Holy Place, Because It Is A Most Holy Part Of Their Regular Share Of The Offerings Made To The Lord By Fire." A Blasphemer Stoned
10 - அக்காலத்திலே இஸ்ரவேல் ஜாதியான ஸ்திரீக்கும் எகிப்திய புருஷனுக்கும் பிறந்த புத்திரனாகிய ஒருவன் இஸ்ரவேல் புத்திரரோடேகூடப் புறப்பட்டு வந்திருந்தான்; இவனும் இஸ்ரவேலனாகிய ஒரு மனிதனும் பாளயத்திலே சண்டைபண்ணினார்கள்.
English:- Now The Son Of An Israelite Mother And An Egyptian Father Went Out Among The Israelites, And A Fight Broke Out In The Camp Between Him And An Israelite.
11 - அப்பொழுது இஸ்ரவேல் ஜாதியான அந்த ஸ்திரீயின் மகன் கர்த்தரின் நாமத்தை நிந்தித்துத் தூஷித்தான். அவனை மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள். அவன் தாயின்பேர் செலோமித்; அவள் தாண் கோத்திரத்தானாகிய திப்ரியின் குமாரத்தி.
English:- The Son Of The Israelite Woman Blasphemed The Name With A Curse; So They Brought Him To Moses. (His Mother's Name Was Shelomith, The Daughter Of Dibri The Danite.)
12 - கர்த்தரின் வாக்கினாலே தங்களுக்கு உத்தரவு வருமட்டும், அவனைக் காவல்படுத்தினார்கள்.
English:- They Put Him In Custody Until The Will Of The Lord Should Be Made Clear To Them.
14 - தூஷித்தவனைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோ; கேட்டவர்கள் எல்லாரும் தங்கள் கைகளை அவன் தலையின்மேல் வைப்பார்களாக; பின்பு சபையார் எல்லாரும் அவனைக் கல்லெறியக்கடவர்கள்.
English:- "Take The Blasphemer Outside The Camp. All Those Who Heard Him Are To Lay Their Hands On His Head, And The Entire Assembly Is To Stone Him.
15 - மேலும் நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: எவனாகிலும் தன் தேவனைத்தூஷித்தால், அவன் தன் பாவத்தைச் சுமப்பான்.
English:- Say To The Israelites: 'If Anyone Curses His God, He Will Be Held Responsible;
16 - கர்த்தருடைய நாமத்தை நிந்திக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைக் கல்லெறியவேண்டும்; பரதேசியானாலும் சுதேசியானாலும் கர்த்தரின் நாமத்தைத் தூஷிக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்.
English:- Anyone Who Blasphemes The Name Of The Lord Must Be Put To Death. The Entire Assembly Must Stone Him. Whether An Alien Or Native-born, When He Blasphemes The Name, He Must Be Put To Death.
17 - ஒரு மனிதனைக் கொல்லுகிறவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும்.
English:- " 'If Anyone Takes The Life Of A Human Being, He Must Be Put To Death.
18 - மிருகத்தைக் கொன்றவன் மிருகத்துக்கு மிருகம் கொடுக்கக்கடவன்.
English:- Anyone Who Takes The Life Of Someone's Animal Must Make Restitution-life For Life.
19 - ஒருவன் பிறனை ஊனப்படுத்தினால், அவன் செய்தபடியே அவனுக்கும் செய்யப்படக்கடவது.
English:- If Anyone Injures His Neighbor, Whatever He Has Done Must Be Done To Him:
20 - நொறுக்குதலுக்கு நொறுக்குதல், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்; அவன் ஒரு மனிதனை ஊனப்படுத்தினதுபோல அவனும் ஊனப்படுத்தப்படவேண்டும்.
English:- Fracture For Fracture, Eye For Eye, Tooth For Tooth. As He Has Injured The Other, So He Is To Be Injured.
21 - மிருகத்தைக் கொன்றவன் பதில் கொடுக்கவேண்டும்; மனிதனைக் கொன்றவனோ கொலைசெய்யப்படக்கடவன்.
English:- Whoever Kills An Animal Must Make Restitution, But Whoever Kills A Man Must Be Put To Death.
22 - உங்களில் பரதேசிக்கும் சுதேசிக்கும் ஒரே நியாயம் இருக்கவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.
English:- You Are To Have The Same Law For The Alien And The Native-born. I Am The Lord Your God.' "
23 - அப்படியே, தூஷித்தவனைப் பாளயத்துக்குப் புறம்பே கொண்டுபோய், அவனைக் கல்லெறியும்படி மோசே இஸ்ரவேல் புத்திரரோடே சொன்னான்; கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.
English:- Then Moses Spoke To The Israelites, And They Took The Blasphemer Outside The Camp And Stoned Him. The Israelites Did As The Lord Commanded Moses.