பரிசுத்த வேதாகமம் மாற்கு அதிகாரம் 3 – Read Holy Bible Book Of Mark Chapter 3 In Tamil With English Reference
1 - மறுபடியும் அவர் ஜெபஆலயத்தில் பிரவேசித்தார். அங்கே சூம்பின கையுடைய ஒரு மனுஷன் இருந்தான்.
English:- Another Time He Went Into The Synagogue, And A Man With A Shriveled Hand Was There.
2 - அவர் ஓய்வுநாளில் அவனைச் சொஸ்தமாக்கினால் அவர்பேரில் குற்றஞ்சாட்டலாமென்று அவர்மேல் நோக்கமாயிருந்தார்கள்.
English:- Some Of Them Were Looking For A Reason To Accuse Jesus, So They Watched Him Closely To See If He Would Heal Him On The Sabbath.
3 - அப்பொழுது அவர் சூம்பினகையையுடைய மனுஷனை நோக்கி: எழுந்து நடுவே நில் என்று சொல்லி;
English:- Jesus Said To The Man With The Shriveled Hand, "Stand Up In Front Of Everyone."
4 - அவர்களைப் பார்த்து: ஓய்வுநாட்களில் நன்மைசெய்வதோ, தீமைசெய்வதோ, ஜீவனைக்காப்பதோ அழிப்பதோ, எது நியாயம் என்றார். அதற்கு அவர்கள் பேசாமலிருந்தார்கள்.
English:- Then Jesus Asked Them, "Which Is Lawful On The Sabbath: To Do Good Or To Do Evil, To Save Life Or To Kill?" But They Remained Silent.
5 - அவர்களுடைய இருதயகடினத்தினிமித்தம் அவர் விசனப்பட்டு, கோபத்துடனே சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து, அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார்; அவன் நீட்டினான்; அவன் கை மறுகையைப்போலச் சொஸ்தமாயிற்று.
English:- He Looked Around At Them In Anger And, Deeply Distressed At Their Stubborn Hearts, Said To The Man, "Stretch Out Your Hand." He Stretched It Out, And His Hand Was Completely Restored.
6 - உடனே பரிசேயர் புறப்பட்டுப்போய், அவரைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாய் ஏரோதியரோடேகூட ஆலோசனைபண்ணினார்கள்.
English:- Then The Pharisees Went Out And Began To Plot With The Herodians How They Might Kill Jesus.
7 - இயேசு தம்முடைய சீஷர்களோடே அவ்விடம் விட்டு, கடலோரத்துக்குப் போனார்.
English:- Jesus Withdrew With His Disciples To The Lake, And A Large Crowd From Galilee Followed.
8 - கலிலேயாவிலும், யூதேயாவிலும், எருசலேமிலும், இதுமேயாவிலும், யோர்தானுக்கு அக்கரையிலுமிருந்து திரளான ஜனங்கள் வந்து, அவருக்குப் பின்சென்றார்கள். அல்லாமலும் தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளிலுமிருந்து திரளான ஜனங்கள் அவர் செய்த அற்புதங்களைக்குறித்துக் கேள்விப்பட்டு, அவரிடத்தில் வந்தார்கள்.
English:- When They Heard All He Was Doing, Many People Came To Him From Judea, Jerusalem, Idumea, And The Regions Across The Jordan And Around Tyre And Sidon.
9 - அவர் அநேகரைச் சொஸ்தமாக்கினார். நோயாளிகளெல்லாரும் அதை அறிந்து அவரைத் தொடவேண்டுமென்று அவரிடத்தில் நெருங்கிவந்தார்கள்.
English:- Because Of The Crowd He Told His Disciples To Have A Small Boat Ready For Him, To Keep The People From Crowding Him.
10 - ஜனங்கள் திரளாயிருந்தபடியால் அவர்கள் தம்மை நெருக்காதபடிக்கு, தமக்காக ஒரு படவை ஆயத்தம்பண்ண வேண்டுமென்று, தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார்.
English:- For He Had Healed Many, So That Those With Diseases Were Pushing Forward To Touch Him.
11 - அசுத்த ஆவிகளும் அவரைக் கண்டபோது, அவர் முன்பாக விழுந்து: நீர் தேவனுடைய குமாரன் என்று சத்தமிட்டன.
English:- Whenever The Evil Spirits Saw Him, They Fell Down Before Him And Cried Out, "You Are The Son Of God."
12 - தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி அவைகளுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.
English:- But He Gave Them Strict Orders Not To Tell Who He Was.
13 - பின்பு அவர் ஒரு மலையின்மேல் ஏறி, தமக்குச் சித்தமானவர்களைத் தம்மிடத்தில் வரவழைத்தார்; அவர்கள் அவரிடத்திற்கு வந்தார்கள்.
English:- Jesus Went Up On A Mountainside And Called To Him Those He Wanted, And They Came To Him.
14 - அப்பொழுது அவர் பன்னிரண்டு பேரைத் தெரிந்துகொண்டு, அவர்கள் தம்மோடுகூட இருக்கவும், பிரசங்கம்பண்ணும்படியாகத் தாம் அவர்களை அனுப்பவும்,
English:- He Appointed Twelve--designating Them Apostles --That They Might Be With Him And That He Might Send Them Out To Preach
15 - வியாதிகளைக் குணமாக்கிப் பிசாசுகளைத் துரத்தும்படி அவர்கள் அதிகாரமுடையவர்களாயிருக்கவும், அவர்களை ஏற்படுத்தினார்.
English:- And To Have Authority To Drive Out Demons.
16 - அவர்கள் யாரெனில், சீமோன், இவனுக்குப் பேதுரு என்கிற பெயரிட்டார்.
English:- These Are The Twelve He Appointed: Simon (To Whom He Gave The Name Peter);
17 - செபதேயுவின் குமாரனாகிய யாக்கோபு, யாக்கோபின் சகோதரனாகிய யோவான், இவ்விருவருக்கும் இடிமுழக்க மக்களென்று அர்த்தங்கொள்ளும் பொவனெர்கேஸ் என்கிற பெயரிட்டார்.
English:- James Son Of Zebedee And His Brother John (To Them He Gave The Name Boanerges, Which Means Sons Of Thunder);
18 - அந்திரேயா, பிலிப்பு, பர்த்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு, கானானியனாகிய சீமோன்,
English:- Andrew, Philip, Bartholomew, Matthew, Thomas, James Son Of Alphaeus, Thaddaeus, Simon The Zealot
19 - அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவர்களே.
English:- And Judas Iscariot, Who Betrayed Him.
20 - பின்பு வீட்டுக்குப் போனார்கள்; அங்கே அவர்கள் சாப்பிடுவதற்கும் சமயமில்லாதபடிக்கு அநேக ஜனங்கள் மறுபடியும் கூடிவந்தார்கள்.
English:- Then Jesus Entered A House, And Again A Crowd Gathered, So That He And His Disciples Were Not Even Able To Eat.
21 - அவருடைய இனத்தார் இதைக்கேட்டபோது, அவர் மதிமயங்கியிருக்கிறார் என்று சொல்லி அவரைப் பிடித்துக்கொள்ளும்படி வந்தார்கள்.
English:- When His Family Heard About This, They Went To Take Charge Of Him, For They Said, "He Is Out Of His Mind."
22 - எருசலேமிலிருந்து வந்த வேதபாரகர்: இவன் பெயெல்செபூலைக்கொண்டிருக்கிறான். பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.
English:- And The Teachers Of The Law Who Came Down From Jerusalem Said, "He Is Possessed By Beelzebub ! By The Prince Of Demons He Is Driving Out Demons."
23 - அவர்களை அவர் அழைத்து, உவமைகளாய் அவர்களுக்குச் சொன்னதாவது: சாத்தானைச் சாத்தான் துரத்துவது எப்படி?
English:- So Jesus Called Them And Spoke To Them In Parables: "How Can Satan Drive Out Satan?
24 - ஒரு ராஜ்யம் தனக்குதானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த ராஜ்யம் நிலைநிற்கமாட்டாதே.
English:- If A Kingdom Is Divided Against Itself, That Kingdom Cannot Stand.
25 - ஒரு வீடு தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த வீடு நிலைநிற்கமாட்டாதே.
English:- If A House Is Divided Against Itself, That House Cannot Stand.
26 - சாத்தான் தனக்குத்தானே விரோதமாக எழும்பிப் பிரிந்திருந்தால், அவன் நிலைநிற்கமாட்டாமல், அழிந்துபோவானே.
English:- And If Satan Opposes Himself And Is Divided, He Cannot Stand; His End Has Come.
27 - பலவானை முந்திக் கட்டினாலொழிய, ஒருவனும் பலவானுடைய வீட்டுக்குள் புகுந்து, அவன் உடமைகளைக் கொள்ளையிடக்கூடாது; கட்டினானேயாகில், அவன் வீட்டைக் கொள்ளையிடுவான்.
English:- In Fact, No One Can Enter A Strong Man's House And Carry Off His Possessions Unless He First Ties Up The Strong Man. Then He Can Rob His House.
28 - மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்தத் தூஷணங்களும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்;
English:- I Tell You The Truth, All The Sins And Blasphemies Of Men Will Be Forgiven Them.
29 - ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்வானாகில், அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான் என்றார்.
English:- But Whoever Blasphemes Against The Holy Spirit Will Never Be Forgiven; He Is Guilty Of An Eternal Sin."
30 - அசுத்த ஆவியைக்கொண்டிருக்கிறானென்று அவர்கள் சொன்னபடியினாலே அவர் இப்படிச் சொன்னார்.
English:- He Said This Because They Were Saying, "He Has An Evil Spirit."
31 - அப்பொழுது அவருடைய சகோதரரும், தாயாரும் வந்து, வெளியே நின்று, அவரை அழைக்கும்படி அவரிடத்தில் ஆள் அனுப்பினார்கள்.
English:- Then Jesus' Mother And Brothers Arrived. Standing Outside, They Sent Someone In To Call Him.
32 - அவரைச் சுற்றிலும் உட்கார்ந்திருந்த ஜனங்கள் அவரை நோக்கி: இதோ, உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரரும் வெளியே நின்று உம்மைத் தேடுகிறார்கள் என்றார்கள்.
English:- A Crowd Was Sitting Around Him, And They Told Him, "Your Mother And Brothers Are Outside Looking For You."
33 - அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: என் தாயார் யார்? என் சகோதரர் யார்? என்று சொல்லி,
English:- "Who Are My Mother And My Brothers?" He Asked.
34 - தம்மைச்சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப் பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே!
English:- Then He Looked At Those Seated In A Circle Around Him And Said, "Here Are My Mother And My Brothers!
35 - தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார்.
English:- Whoever Does God's Will Is My Brother And Sister And Mother."