பரிசுத்த வேதாகமம் மத்தேயு அதிகாரம் 21 – Read Holy Bible Book Of Matthew Chapter 21 In Tamil With English Reference
1 - அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது, இயேசுவானவர் சீஷர்களில் இரண்டுபேரை நோக்கி:
English:- As They Approached Jerusalem And Came To Bethphage On The Mount Of Olives, Jesus Sent Two Disciples,
2 - உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடே ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள்.
English:- Saying To Them, "Go To The Village Ahead Of You, And At Once You Will Find A Donkey Tied There, With Her Colt By Her. Untie Them And Bring Them To Me.
3 - ஒருவன் உங்களுக்கு ஏதாகிலும் சொன்னால்: இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவைகளை அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.
English:- If Anyone Says Anything To You, Tell Him That The Lord Needs Them, And He Will Send Them Right Away."
4 - இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின் மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன்குமாரத்திக்குச் சொல்லுங்கள் என்று,
English:- This Took Place To Fulfill What Was Spoken Through The Prophet:
5 - தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
English:- "Say To The Daughter Of Zion, 'See, Your King Comes To You, Gentle And Riding On A Donkey, On A Colt, The Foal Of A Donkey.' "
6 - சீஷர்கள் போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து,
English:- The Disciples Went And Did As Jesus Had Instructed Them.
7 - கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள் மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு, அவரை ஏற்றினார்கள்.
English:- They Brought The Donkey And The Colt, Placed Their Cloaks On Them, And Jesus Sat On Them.
8 - திரளான ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள்.
English:- A Very Large Crowd Spread Their Cloaks On The Road, While Others Cut Branches From The Trees And Spread Them On The Road.
9 - முன்நடப்பாரும், பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
English:- The Crowds That Went Ahead Of Him And Those That Followed Shouted, "Hosanna To The Son Of David!" "Blessed Is He Who Comes In The Name Of The Lord!" "Hosanna In The Highest!"
10 - அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள்.
English:- When Jesus Entered Jerusalem, The Whole City Was Stirred And Asked, "Who Is This?"
11 - அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.
English:- The Crowds Answered, "This Is Jesus, The Prophet From Nazareth In Galilee."
12 - இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்திலே விற்கிறவர்களும் கொள்ளுகிறவர்களுமாகிய யாவரையும் வெளியிலே துரத்தி, காசுக்காரருடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் ஆசனங்களையும் கவிழ்த்து:
English:- Jesus Entered The Temple Area And Drove Out All Who Were Buying And Selling There. He Overturned The Tables Of The Money Changers And The Benches Of Those Selling Doves.
13 - என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்றார்.
English:- "It Is Written," He Said To Them, " 'My House Will Be Called A House Of Prayer,' But You Are Making It A 'Den Of Robbers.' "
14 - அப்பொழுது, குருடரும் சப்பாணிகளும் தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தார்கள், அவர்களைச் சொஸ்தமாக்கினார்.
English:- The Blind And The Lame Came To Him At The Temple, And He Healed Them.
15 - அவர் செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கண்டு, கோபமடைந்து,
English:- But When The Chief Priests And The Teachers Of The Law Saw The Wonderful Things He Did And The Children Shouting In The Temple Area, "Hosanna To The Son Of David," They Were Indignant.
16 - அவரை நோக்கி: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா என்றார்.
English:- "Do You Hear What These Children Are Saying?" They Asked Him. "Yes," Replied Jesus, "Have You Never Read, " 'From The Lips Of Children And Infants You Have Ordained Praise' ?"
17 - அவர்களைவிட்டு நகரத்திலிருந்து புறப்பட்டு, பெத்தானியாவுக்குப் போய், அங்கே இராத்தங்கினார்.
English:- And He Left Them And Went Out Of The City To Bethany, Where He Spent The Night.
18 - காலையிலே அவர் நகரத்துக்கு திரும்பி வருகையில், அவருக்குப் பசி உண்டாயிற்று.
English:- Early In The Morning, As He Was On His Way Back To The City, He Was Hungry.
19 - அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு, அதனிடத்திற் போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையும் காணாமல்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று.
English:- Seeing A Fig Tree By The Road, He Went Up To It But Found Nothing On It Except Leaves. Then He Said To It, "May You Never Bear Fruit Again!" Immediately The Tree Withered.
20 - சீஷர்கள் அதைக்கண்டு: இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாய்ப் பட்டுப் போயிற்று! என்று சொல்லி ஆச்சரியப்பட்டார்கள்.
English:- When The Disciples Saw This, They Were Amazed. "How Did The Fig Tree Wither So Quickly?" They Asked.
21 - இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்கு செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
English:- Jesus Replied, "I Tell You The Truth, If You Have Faith And Do Not Doubt, Not Only Can You Do What Was Done To The Fig Tree, But Also You Can Say To This Mountain, 'Go, Throw Yourself Into The Sea,' And It Will Be Done.
22 - மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.
English:- If You Believe, You Will Receive Whatever You Ask For In Prayer."
23 - அவர் தேவாலயத்தில் வந்து, உபதேசம்பண்ணுகையில், பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும் அவரிடத்தில் வந்து: நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர்? இந்த அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்? என்று கேட்டார்கள்.
English:- Jesus Entered The Temple Courts, And, While He Was Teaching, The Chief Priests And The Elders Of The People Came To Him. "By What Authority Are You Doing These Things?" They Asked. "And Who Gave You This Authority?"
24 - இயேசு அவர்களுக்கு பிரதியுத்தரமாக: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், அதை எனக்குச் சொல்லுவீர்களானால், நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லுவேன்.
English:- Jesus Replied, "I Will Also Ask You One Question. If You Answer Me, I Will Tell You By What Authority I Am Doing These Things.
25 - யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ? மனுஷரால் உண்டாயிற்றோ? யாரால் உண்டாயிற்று? என்று கேட்டார். அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்று என்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லை என்று நம்மைக் கேட்பார்;
English:- John's Baptism--where Did It Come From? Was It From Heaven, Or From Men?"
26 - மனுஷரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், ஜனங்களுக்குப் பயப்படுகிறோம், எல்லாரும் யோவானைத் தீர்க்கத்தரிசி என்று எண்ணுகிறார்களே என்று, தங்களுக்குள்ளே ஆலோசனைபண்ணி,
English:- They Discussed It Among Themselves And Said, "If We Say, 'From Heaven,' He Will Ask, 'Then Why Didn't You Believe Him?' But If We Say, 'From Men'--we Are Afraid Of The People, For They All Hold That John Was A Prophet."
27 - இயேசுவுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது, அவர்: நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லேன் என்றார்.
English:- So They Answered Jesus, "We Don't Know." Then He Said, "Neither Will I Tell You By What Authority I Am Doing These Things.
28 - ஆயினும் உங்களுக்கு எப்படித்தோன்றுகிறது? ஒருமனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள்; மூத்தவனிடத்தில் அவன் வந்து: மகனே, நீ போய் இன்றைக்கு என் திராட்சத்தோட்டத்தில் வேலைசெய் என்றான்.
English:- "What Do You Think? There Was A Man Who Had Two Sons. He Went To The First And Said, 'Son, Go And Work Today In The Vineyard.'
29 - அதற்கு அவன்: மாட்டேன் என்றான்; ஆகிலும், பின்பு அவன் மனஸ்தாபப்பட்டுப் போனான்.
English:- " 'I Will Not,' He Answered, But Later He Changed His Mind And Went.
30 - இளையவனிடத்திலும் அவன் வந்து அப்படியே சொன்னான்; அதற்கு அவன்: போகிறேன் ஐயா, என்று சொல்லியும், போகவில்லை.
English:- "Then The Father Went To The Other Son And Said The Same Thing. He Answered, 'I Will, Sir,' But He Did Not Go.
31 - இவ்விருவரில் எவன் தன் தகப்பனுடைய சித்தத்தின்படி செய்தவன் என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: மூத்தவன் தான் என்றார்கள். அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
English:- "Which Of The Two Did What His Father Wanted?" "The First," They Answered.
32 - ஏனென்றால், யோவான் நீதிமார்க்கமாய் உங்களிடத்தில் வந்திருந்தும், நீங்கள் அவனை விசுவாசிக்கவில்லை; ஆயக்காரரும் வேசிகளுமோ அவனை விசுவாசித்தார்கள்; அதை நீங்கள் கண்டும், அவனை விசுவாசிக்கும்படியாகப் பின்பாகிலும் மனஸ்தாபப்படவில்லை என்றார்.
English:- Jesus Said To Them, "I Tell You The Truth, The Tax Collectors And The Prostitutes Are Entering The Kingdom Of God Ahead Of You. For John Came To You To Show You The Way Of Righteousness, And You Did Not Believe Him, But The Tax Collectors And The Prostitutes Did. And Even After You Saw This, You Did Not Repent And Believe Him.
33 - வேறொரு உவமையைக் கேளுங்கள்: வீட்டெஜமானாகிய ஒரு மனுஷன் இருந்தான், அவன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, அதில் ஒரு ஆலையை நாட்டி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறதேசத்துக்குப் போயிருந்தான்.
English:- "Listen To Another Parable: There Was A Landowner Who Planted A Vineyard. He Put A Wall Around It, Dug A Winepress In It And Built A Watchtower. Then He Rented The Vineyard To Some Farmers And Went Away On A Journey.
34 - கனிகாலம் சமீபித்தபோது, அதின் கனிகளை வாங்கிக்கொண்டுவரும்படி தன் ஊழியக்காரரைத் தோட்டக்காரரிடத்தில் அனுப்பினான்.
English:- When The Harvest Time Approached, He Sent His Servants To The Tenants To Collect His Fruit.
35 - தோட்டக்காரர் அந்த ஊழியக்காரரைப் பிடித்து, ஒருவனை அடித்து, ஒருவனைக் கொலைசெய்து, ஒருவனைக் கல்லெறிந்து கொன்றார்கள்.
English:- "The Tenants Seized His Servants; They Beat One, Killed Another, And Stoned A Third.
36 - பின்னும் அவன் முந்தினவர்களிலும் அதிகமான வேறே ஊழியக்காரரை அனுப்பினான்; அவர்களையும் அப்படியே செய்தார்கள்.
English:- Then He Sent Other Servants To Them, More Than The First Time, And The Tenants Treated Them The Same Way.
37 - கடைசியிலே அவன்: என் குமாரனுக்கு அஞ்சுவார்கள் என்று சொல்லி, தன் குமாரனை அவர்களிடத்தில் அனுப்பினான்.
English:- Last Of All, He Sent His Son To Them. 'They Will Respect My Son,' He Said.
38 - தோட்டக்காரர் குமாரனைக் கண்டபோது: இவன் சுதந்தரவாளி, இவனைக் கொன்று, இவன் சுதந்தரத்தைக் கட்டிக்கொள்ளுவோம் வாருங்கள் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு;
English:- "But When The Tenants Saw The Son, They Said To Each Other, 'This Is The Heir. Come, Let's Kill Him And Take His Inheritance.'
39 - அவனைப் பிடித்துத் திராட்சத்தோட்டத்திற்குப் புறம்பே தள்ளிக்கொலை செய்தார்கள்.
English:- So They Took Him And Threw Him Out Of The Vineyard And Killed Him.
40 - அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்தின் எஜமான் வரும்போது, அந்த தோட்டக்காரரை என்ன செய்வான் என்று கேட்டார்.
English:- "Therefore, When The Owner Of The Vineyard Comes, What Will He Do To Those Tenants?"
41 - அதற்கு அவர்கள்: அந்தக் கொடியவரைக் கொடுமையாய் அழித்து, ஏற்றகாலங்களில் தனக்குக் கனிகளைக் கொடுக்கத்தக்க வேறே தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்தைக் குத்தகையாகக் கொடுப்பான் என்றார்கள்.
English:- "He Will Bring Those Wretches To A Wretched End," They Replied, "And He Will Rent The Vineyard To Other Tenants, Who Will Give Him His Share Of The Crop At Harvest Time."
42 - இயேசு அவர்களை நோக்கி: வீடு கட்டுகிறவர்கள் ஆகாதென்று தள்ளின கல்லே மூலைக்குத் தலைக்கல்லாயிற்று, அது கர்த்தராலே ஆயிற்று, அது நம்முடைய கண்களுக்கு ஆச்சரியமாயிருக்கிறது என்று நீங்கள் வேதத்தில் ஒருக்காலும் வாசிக்கவில்லையா?
English:- Jesus Said To Them, "Have You Never Read In The Scriptures: " 'The Stone The Builders Rejected Has Become The Capstone ; The Lord Has Done This, And It Is Marvelous In Our Eyes' ?
43 - ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.
English:- "Therefore I Tell You That The Kingdom Of God Will Be Taken Away From You And Given To A People Who Will Produce Its Fruit.
44 - இந்தக் கல்லின்மேல் விழுகிறவன் நொறுங்கிப்போவான்; இது எவன் மேல் விழுமோ அவனை நசுக்கிப்போடும் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
English:- He Who Falls On This Stone Will Be Broken To Pieces, But He On Whom It Falls Will Be Crushed."
45 - பிரதான ஆசாரியரும், பரிசேயரும் அவருடைய உவமைகளைக்கேட்டு, தங்களைக்குறித்துச் சொல்லுகிறார் என்று அறிந்து,
English:- When The Chief Priests And The Pharisees Heard Jesus' Parables, They Knew He Was Talking About Them.
46 - அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனங்கள் அவரைத் தீர்க்கதரிசி என்று எண்ணினபடியால் அவர்களுக்குப் பயந்திருந்தார்கள்.
English:- They Looked For A Way To Arrest Him, But They Were Afraid Of The Crowd Because The People Held That He Was A Prophet.