பரிசுத்த வேதாகமம் நெகேமியா அதிகாரம் 7 – Read Holy Bible Book Of Nehemiah Chapter 7 In Tamil With English Reference
1 - அலங்கம் கட்டிமுடிந்து, கதவுகள் போடப்பட்டு, வாசல் காவலாளரையும் பாடகரையும், லேவியரையும் ஏற்படுத்தினபின்பு,
English:- After The Wall Had Been Rebuilt And I Had Set The Doors In Place, The Gatekeepers And The Singers And The Levites Were Appointed.
2 - நான் என் சகோதரனாகிய ஆனானியையும், அநேகரைப்பார்க்கிலும் உண்மையுள்ளவனும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்த அரமனைத்தலைவனாகிய அனனியாவையும், எருசலேமின் காவல்விசாரணைக்கு ஏற்படுத்தினேன்.
English:- I Put In Charge Of Jerusalem My Brother Hanani, Along With Hananiah The Commander Of The Citadel, Because He Was A Man Of Integrity And Feared God More Than Most Men Do.
3 - அவர்களை நோக்கி: வெயில் ஏறுமட்டும் எருசலேமின் வாசல்கள் திறக்கப்படவேண்டாம், நீங்கள் நிற்கும்போதே கதவுகளைச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டு, எருசலேமின் குடிகளில் காவலாளர் அவரவர் தங்கள் காவலிலே, அவரவர் தங்கள் வீடுகளுக்கு எதிராக நிறுத்தப்படவேண்டும் என்றேன்.
English:- I Said To Them, "The Gates Of Jerusalem Are Not To Be Opened Until The Sun Is Hot. While The Gatekeepers Are Still On Duty, Have Them Shut The Doors And Bar Them. Also Appoint Residents Of Jerusalem As Guards, Some At Their Posts And Some Near Their Own Houses."
4 - பட்டணம் விஸ்தாரமும் பெரிதுமாயிருந்தது, அதற்குள்ளே ஜனங்கள் கொஞ்சமாயிருந்தார்கள், வீடுகளும் கட்டப்படவில்லை.
English:- Now The City Was Large And Spacious, But There Were Few People In It, And The Houses Had Not Yet Been Rebuilt.
5 - அப்பொழுது வம்ச அட்டவணைகளைப் பார்க்கிறதற்கு, நான் பிரபுக்களையும் அதிகாரிகளையும் ஜனங்களையும் கூடிவரச்செய்ய, என் தேவன் என் மனதிலே ஒரு எண்ணத்தை உண்டாக்கினார்; முந்தி வந்தவர்களின் வம்ச அட்டவணைப் புஸ்தகம் அப்பொழுது எனக்கு அகப்பட்டது; அதிலே எழுதியிருக்க நான் கண்டது என்னவென்றால்,
English:- So My God Put It Into My Heart To Assemble The Nobles, The Officials And The Common People For Registration By Families. I Found The Genealogical Record Of Those Who Had Been The First To Return. This Is What I Found Written There:
6 - பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போனவர்களும், சிறையிருப்பிலிருந்து செருபாபேலோடும், யெசுவா, நெகேமியா, அசரியா, ராமியா, நகமானி, மொர்தெகாய், பில்சான், மிஸ்பெரேத், பிக்வாயி, நெகூம், பானா என்பவர்களோடுங்கூட வந்து,
English:- These Are The People Of The Province Who Came Up From The Captivity Of The Exiles Whom Nebuchadnezzar King Of Babylon Had Taken Captive (They Returned To Jerusalem And Judah, Each To His Own Town,
7 - எருசலேமுக்கும் யூதாவுக்கும் திரும்பித் தங்கள் தங்கள் பட்டணங்களிலே குடியிறங்கினவர்களுமான இந்தத் தேசத்தின் புத்திரராகிய இஸ்ரவேல் ஜனங்களான மனிதரின் தொகையாவது:
English:- In Company With Zerubbabel, Jeshua, Nehemiah, Azariah, Raamiah, Nahamani, Mordecai, Bilshan, Mispereth, Bigvai, Nehum And Baanah): The List Of The Men Of Israel:
11 - யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததிக்குள்ளிருந்த பாகாத்மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பதினெட்டுப்பேர்.
English:- Of Pahath-moab (Through The Line Of Jeshua And Joab) ,
21 - எசேக்கியாவின் சந்ததியான ஆதேரின் புத்திரர் தொண்ணூற்று எட்டுப்பேர்.
English:- Of Ater (Through Hezekiah)
26 - பெத்லகேம் ஊராரும், நெத்தோபா ஊராரும் நூற்று எண்பத்தெட்டுப்பேர்.
English:- The Men Of Bethlehem And Netophah
29 - கீரியாத்யாரீம், கெபிரா, பேரோத் ஊர்களின் மனிதர் எழுநூற்று நாற்பத்துமூன்றுபேர்.
English:- Of Kiriath Jearim, Kephirah And Beeroth
39 - ஆசாரியரானவர்கள்: யெசுவா குடும்பத்தானாகிய யெதாயாவின் புத்திரர் தொளாயிரத்து எழுபத்துமூன்றுபேர்.
English:- The Priests: The Descendants Of Jedaiah (Through The Family Of Jeshua)
43 - லேவியரானவர்கள்: ஒதியாவின் புத்திரருக்குள்ளே கத்மியேலின் குமாரனாகிய யெசுவாவின் புத்திரர் எழுபத்துநாலுபேர்.
English:- The Levites: The Descendants Of Jeshua (Through Kadmiel Through The Line Of Hodaviah)
44 - பாடகரானவர்கள்: ஆசாபின் புத்திரர் நூற்று நாற்பத்தெட்டுப்பேர்.
English:- The Singers: The Descendants Of Asaph
45 - வாசல் காவலாளரானவர்கள்; சல்லூமின் புத்திரர் அதேரின் புத்திரர், தல்மோனின் புத்திரர், அக்கூபின் புத்திரர், அதிதாவின் புத்திரர், சோபாயின் புத்திரர், ஆக நூற்று முப்பத்தெட்டுப்பேர்.
English:- The Gatekeepers: The Descendants Of Shallum, Ater, Talmon, Akkub, Hatita And Shobai
46 - நிதனீமியரானவர்கள்: சீகாவின்புத்திரர், அசுபாவின் புத்திரர், தபாகோத்தின் புத்திரர்,
English:- The Temple Servants: The Descendants Of Ziha, Hasupha, Tabbaoth,
48 - லெபானாவின் புத்திரர், அகாபாவின் புத்திரர், சல்மாயின் புத்திரர்,
English:- Lebana, Hagaba, Shalmai,
50 - ராயாகின் புத்திரர், ரேத்சீனின் புத்திரர், நெகோதாவின் புத்திரர்,
English:- Reaiah, Rezin, Nekoda,
52 - பேசாயின் புத்திரர், மெயுநீமின் புத்திரர், நெபிஷசீமின் புத்திரர்,
English:- Besai, Meunim, Nephussim,
53 - பக்பூக்கின் புத்திரர், அகுபாவின் புத்திரர், அர்கூரின் புத்திரர்,
English:- Bakbuk, Hakupha, Harhur,
54 - பஸ்லீதின் புத்திரர், மெகிதாவின் புத்திரர், அர்ஷாவின் புத்திரர்,
English:- Bazluth, Mehida, Harsha,
57 - சாலொமோனுடைய வேலைக்காரரின் புத்திரரானவர்கள்: சோதாயின் புத்திரர், சொபெரேத்தின் புத்திரர், பெரிதாவின் புத்திரர்,
English:- The Descendants Of The Servants Of Solomon: The Descendants Of Sotai, Sophereth, Perida,
59 - செபத்தியாவின் புத்திரர், அத்தீலின் புத்திரர், பொகெரேத் செபாயிமிலுள்ள புத்திரர், ஆமோனின் புத்திரர்.
English:- Shephatiah, Hattil, Pokereth-hazzebaim And Amon
60 - நிதனிமியரும் சாலொமோனுடைய வேலையாட்களின் புத்திரரும் ஏகத்துக்கு முந்நூற்றுத் தொண்ணூற்றிரண்டுபேர்.
English:- The Temple Servants And The Descendants Of The Servants Of Solomon
61 - தெல்மெலாகிலும், தெல்அர்சாவிலும், கேருபிலும், ஆதோனிலும், இம்மேரிலும் இருந்துவந்தும், தாங்கள் இஸ்ரவேலர் என்று தங்கள் பிதாக்களின் வம்சத்தையும், தங்கள் பூர்வோத்தரத்தையும் சொல்லமாட்டாமல் இருந்தவர்கள்:
English:- The Following Came Up From The Towns Of Tel Melah, Tel Harsha, Kerub, Addon And Immer, But They Could Not Show That Their Families Were Descended From Israel:
62 - தெலாயாவின் புத்திரர், தொபியாவின் புத்திரர், நெகோதாவின் புத்திரர், ஆக அறுநூற்று நாற்பத்திரண்டுபேர்.
English:- The Descendants Of Delaiah, Tobiah And Nekoda
63 - ஆசாரியர்களில் அபாயாவின் புத்திரர், கோசின் புத்திரர், கிலேயாத்தியனான பர்சில்லாயின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணி, அவர்கள் வம்ச நாமம் தரிக்கப்பட்ட பர்சில்லாயின் புத்திரர்.
English:- And From Among The Priests: The Descendants Of Hobaiah, Hakkoz And Barzillai (A Man Who Had Married A Daughter Of Barzillai The Gileadite And Was Called By That Name).
64 - இவர்கள் தங்கள் வம்ச அட்டவணையைத் தேடி, அதைக் காணாமற்போய் ஆசாரிய ஊழியத்துக்கு விலக்கமானவர்கள் என்று எண்ணப்பட்டார்கள்.
English:- These Searched For Their Family Records, But They Could Not Find Them And So Were Excluded From The Priesthood As Unclean.
65 - ஊரீம் தும்மீம் என்பவைகளுள்ள ஒரு ஆசாரியன் எழும்புமட்டும், அவர்கள் மகா பரிசுத்தமானதிலே புசிக்கத்தகாதென்று திர்ஷாதா அவர்களுக்குச் சொன்னான்.
English:- The Governor, Therefore, Ordered Them Not To Eat Any Of The Most Sacred Food Until There Should Be A Priest Ministering With The Urim And Thummim.
66 - சபையார் எல்லாரும் ஏகத்துக்கு நாற்பத்தீராயிரத்து முந்நூற்று அறுபதுபேராயிருந்தார்கள்.
English:- The Whole Company Numbered ,,
67 - அவர்களைத்தவிர ஏழாயிரத்துமுந்நூற்று முப்பத்தேழுபேரான அவர்களுடைய வேலைக்காரரும், வேலைக்காரிகளும் இருநூற்று நாற்பத்தைந்து பாடகரும் பாடகிகளும் அவர்களுக்கு இருந்தார்கள்.
English:- Besides Their , Menservants And Maidservants; And They Also Had Men And Women Singers.
68 - அவர்களுடைய குதிரைகள் எழுநூற்று முப்பத்தாறு, அவர்கள் கோவேறு கழுதைகள் இருநூற்று நாற்பத்தைந்து.
English:- There Were Horses, Mules,
69 - ஒட்டகங்கள் நானூற்று முப்பத்தைந்து, கழுதைகள் ஆறாயிரத்து எழுநூற்று இருபது.
English:- Camels And , Donkeys.
70 - வம்சத்தலைவரில் சிலர் வேலைக்கென்று கொடுத்ததாவது: திர்ஷாதா ஆயிரம் தங்கக்காசையும், ஐம்பது கலங்களையும், ஐந்நூற்று முப்பது ஆசாரிய வஸ்திரங்களையும் பொக்கிஷத்துக்குக் கொடுத்தான்.
English:- Some Of The Heads Of The Families Contributed To The Work. The Governor Gave To The Treasury , Drachmas Of Gold, Bowls And Garments For Priests.
71 - வம்சத்தலைவரில் சிலர் வேலையின் பொக்கிஷத்துக்கு இருபதினாயிரம் தங்கக்காசையும், இரண்டாயிரத்து இருநூறு ராத்தல் வெள்ளியையும் கொடுத்தார்கள்.
English:- Some Of The Heads Of The Families Gave To The Treasury For The Work , Drachmas Of Gold And , Minas Of Silver.
72 - மற்ற ஜனங்கள் இருபதினாயிரம் தங்கக்காசையும், இரண்டாயிரம் ராத்தல் வெள்ளியையும், அறுபத்தேழு ஆசாரிய வஸ்திரங்களையும் கொடுத்தார்கள்.
English:- The Total Given By The Rest Of The People Was , Drachmas Of Gold, , Minas Of Silver And Garments For Priests.
73 - ஆசாரியரும், லேவியரும், வாசல் காவலாளரும், பாடகரும், ஜனங்களில் சிலரும், நிதனீமியரும், இஸ்ரவேலர் அனைவரும் தங்கள் தங்கள் பட்டணங்களில் குடியேறினார்கள்; ஏழாம் மாதமானபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் பட்டணங்களில் இருந்தார்கள்.
English:- The Priests, The Levites, The Gatekeepers, The Singers And The Temple Servants, Along With Certain Of The People And The Rest Of The Israelites, Settled In Their Own Towns. When The Seventh Month Came And The Israelites Had Settled In Their Towns,