பரிசுத்த வேதாகமம் எண்ணாகமம் அதிகாரம் 10 – Read Holy Bible Book Of Numbers Chapter 10 In Tamil With English Reference
2 - சபையைக் கூடிவரவழைப்பதற்கும் பாளயங்களைப் பிரயாணப்படுத்துவதற்கும் உபயோகமாக இரண்டு வெள்ளிப்பூரிகைகளைச் செய்துகொள்வாயாக; அவைகள் ஒரே வெள்ளித்தகட்டால் செய்யப்படவேண்டும்.
English:- "Make Two Trumpets Of Hammered Silver, And Use Them For Calling The Community Together And For Having The Camps Set Out.
3 - அவைகளை ஊதும்போது, சபையாரெல்லாரும் ஆசரிப்புக் கூடாரவாசலில் உன்னிடத்தில் கூடிவரவேண்டும்.
English:- When Both Are Sounded, The Whole Community Is To Assemble Before You At The Entrance To The Tent Of Meeting.
4 - ஒன்றைமாத்திரம் ஊதினால் இஸ்ரவேலில் ஆயிரவர்களுக்குத் தலைவராகிய பிரபுக்கள் உன்னிடத்தில் கூடிவரக்கடவர்கள்.
English:- If Only One Is Sounded, The Leaders-the Heads Of The Clans Of Israel-are To Assemble Before You.
5 - நீங்கள் அவைகளைப் பெருந்தொனியாய் முழக்கும்போது, கிழக்கே இறங்கியிருக்கிற பாளயங்கள் பிரயாணப்படக்கடவது.
English:- When A Trumpet Blast Is Sounded, The Tribes Camping On The East Are To Set Out.
6 - அவைகளை நீங்கள் இரண்டாந்தரம் பெருந்தொனியாய் முழக்கும்போது, தெற்கே இறங்கியிருக்கிற பாளயங்கள் பிரயாணப்படக்கடவது; அவர்களைப் பிரயாணப்படுத்துவதற்குப் பெருந்தொனியாய் முழக்கவேண்டும்.
English:- At The Sounding Of A Second Blast, The Camps On The South Are To Set Out. The Blast Will Be The Signal For Setting Out.
7 - சபையைக் கூட்டுகிறதற்கு நீங்கள் ஊதவேண்டியதேயன்றி பெருந்தொனியாய் முழக்கவேண்டாம்.
English:- To Gather The Assembly, Blow The Trumpets, But Not With The Same Signal.
8 - ஆரோனின் குமாரராகிய ஆசாரியர் பூரிகைகளை ஊதக்கடவர்கள்; உங்கள் தலைமுறைதோறும் இது உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக்கடவது.
English:- "The Sons Of Aaron, The Priests, Are To Blow The Trumpets. This Is To Be A Lasting Ordinance For You And The Generations To Come.
9 - உங்கள் தேசத்தில் உங்களைத் துன்பப்படுத்துகிற சத்துருவுக்கு விரோதமாக யுத்தத்துக்குப் போகும்போது, பூரிகைகளைப் பெருந்தொனியாய் முழக்கக்கடவீர்கள்; அப்பொழுது உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சமுகத்திலே நீங்கள் நினைவுகூரப்பட்டு, உங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவீர்கள்.
English:- When You Go Into Battle In Your Own Land Against An Enemy Who Is Oppressing You, Sound A Blast On The Trumpets. Then You Will Be Remembered By The Lord Your God And Rescued From Your Enemies.
10 - உங்கள் மகிழ்ச்சியின் நாளிலும், உங்கள் பண்டிகைகளிலும், மாதப்பிறப்புகளிலும், உங்கள் சர்வாங்க தகனபலிகளும் சமாதானபலிகளும் செலுத்தப்படும்போது பூரிகைகளை ஊதவேண்டும்; அப்பொழுது அவைகள் உங்கள் தேவனுடைய சமுகத்தில் உங்களுக்கு ஞாபகக்குறியாயிக்கும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்றார்.
English:- Also At Your Times Of Rejoicing-your Appointed Feasts And New Moon Festivals-you Are To Sound The Trumpets Over Your Burnt Offerings And Fellowship Offerings, And They Will Be A Memorial For You Before Your God. I Am The Lord Your God."
11 - இரண்டாம் வருஷம் இரண்டாம் மாதம் இருபதாம் தேதியில் மேகம் சாட்சியினுடைய வாசஸ்தலத்தின் மீதிலிருந்து உயர எழும்பிற்று.
English:- On The Twentieth Day Of The Second Month Of The Second Year, The Cloud Lifted From Above The Tabernacle Of The Testimony.
12 - அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சீனாய் வனாந்தரத்திலிருந்து தங்கள் பிரயாண வரிசைகளாய்ப் புறப்பட்டார்கள்; மேகம் பாரான் வனாந்தரத்தில் தங்கிற்று.
English:- Then The Israelites Set Out From The Desert Of Sinai And Traveled From Place To Place Until The Cloud Came To Rest In The Desert Of Paran.
13 - இப்படியே கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளையிட்டபடி முதல் பிரயாணம்பண்ணினார்கள்.
English:- They Set Out, This First Time, At The Lord 'S Command Through Moses.
14 - யூதா சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே முதல் புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மினதாபின் குமாரன் நகசோன் தலைவனாயிருந்தான்.
English:- The Divisions Of The Camp Of Judah Went First, Under Their Standard. Nahshon Son Of Amminadab Was In Command.
15 - இசக்கார் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குச் சூவாரின் குமாரன் நெதனெயேல் தலைவனாயிருந்தான்.
English:- Nethanel Son Of Zuar Was Over The Division Of The Tribe Of Issachar,
16 - செபுலோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஏலோனின் குமாரன் எலியாப் தலைவனாயிருந்தான்.
English:- And Eliab Son Of Helon Was Over The Division Of The Tribe Of Zebulun.
17 - அப்பொழுது வாசஸ்தலம் இறக்கிவைக்கப்பட்டது; அதைக் கெர்சோன் புத்திரரும் மெராரி புத்திரரும் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்.
English:- Then The Tabernacle Was Taken Down, And The Gershonites And Merarites, Who Carried It, Set Out.
18 - அதற்குபின்பு ரூபன் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்குச் சேதேயூரின் குமாரன் எலிசூர் தலைவனாயிருந்தான்.
English:- The Divisions Of The Camp Of Reuben Went Next, Under Their Standard. Elizur Son Of Shedeur Was In Command.
19 - சிமியோன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குச் சூரிஷதாயின் குமாரன் செலூமியேல் தலைவனாயிருந்தான்.
English:- Shelumiel Son Of Zurishaddai Was Over The Division Of The Tribe Of Simeon,
20 - காத் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குத் தேகுவேலின் குமாரன் எலியாசாப் தலைவனாயிருந்தான்.
English:- And Eliasaph Son Of Deuel Was Over The Division Of The Tribe Of Gad.
21 - கோகாத்தியர் பரிசுத்தமானவைகளைச் சுமந்துகொண்டு புறப்பட்டார்கள்; இவர்கள் வந்து சேருமுன் மற்றவர்கள் வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணுவார்கள்.
English:- Then The Kohathites Set Out, Carrying The Holy Things. The Tabernacle Was To Be Set Up Before They Arrived.
22 - அதற்குப்பின்பு, எப்பிராயீம் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மியூதின் குமாரன் எலிஷாமா தலைவனாயிருந்தான்.
English:- The Divisions Of The Camp Of Ephraim Went Next, Under Their Standard. Elishama Son Of Ammihud Was In Command.
23 - மனாசே சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குப் பெதாசூரின் குமாரன் கமாலியேல் தலைவனாயிருந்தான்.
English:- Gamaliel Son Of Pedahzur Was Over The Division Of The Tribe Of Manasseh,
24 - பென்யமீன் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்குக் கீதெயோனின் குமாரன் அபீதான் தலைவனாயிருந்தான்.
English:- And Abidan Son Of Gideoni Was Over The Division Of The Tribe Of Benjamin.
25 - அதற்குப்பின்பு, தாண் சந்ததியாருடைய பாளயத்தின் கொடி சகல பாளயங்களுக்கும் பின்னாக அவர்கள் சேனைகளோடே புறப்பட்டது; அவனுடைய சேனைக்கு அம்மிஷதாயின் குமாரன் அகியேசேர் தலைவனாயிருந்தான்.
English:- Finally, As The Rear Guard For All The Units, The Divisions Of The Camp Of Dan Set Out, Under Their Standard. Ahiezer Son Of Ammishaddai Was In Command.
26 - ஆசேர் சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஓகிரானின் குமாரன் பாகியேல் தலைவனாயிருந்தான்.
English:- Pagiel Son Of Ocran Was Over The Division Of The Tribe Of Asher,
27 - நப்தலி சந்ததியாருடைய கோத்திரத்தின் சேனைக்கு ஏனானின் குமாரன் அகீரா தலைவனாயிருந்தான்.
English:- And Ahira Son Of Enan Was Over The Division Of The Tribe Of Naphtali.
28 - இஸ்ரவேல் புத்திரர் புறப்பட்டபோது, இவ்விதமாய்த் தங்கள் தங்கள் சேனைகளின்படியே பிரயாணம்பண்ணினார்கள்.
English:- This Was The Order Of March For The Israelite Divisions As They Set Out.
29 - அப்பொழுது மோசே தன் மாமனாகிய ரெகுவேல் என்னும் மீதியானனுடைய குமாரனான ஓபாவை நோக்கி: உங்களுக்குத் தருவேன் என்று கர்த்தர் சொன்ன ஸ்தலத்துக்கு நாங்கள் பிரயாணம்போகிறோம்; நீயும் எங்களோடேகூட வா, உனக்கு நன்மைசெய்வோம்; கர்த்தர் இஸ்ரவேலுக்கு நல்ல வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிறார் என்றான்.
English:- Now Moses Said To Hobab Son Of Reuel The Midianite, Moses' Father-in-law, "We Are Setting Out For The Place About Which The Lord Said, 'I Will Give It To You.' Come With Us And We Will Treat You Well, For The Lord Has Promised Good Things To Israel."
30 - அதற்கு அவன்: நான் வரக் கூடாது; என் தேசத்துக்கும் என் இனத்தாரிடத்துக்கும் போகவேண்டும் என்றான்.
English:- He Answered, "No, I Will Not Go; I Am Going Back To My Own Land And My Own People."
31 - அப்பொழுது மோசே: நீ எங்களைவிட்டுப் போகவேண்டாம்; வனாந்தரத்திலே நாங்கள் பாளயமிறங்கும் இடங்களை நீ அறிந்திருக்கிறபடியினால், எங்களுக்குக் கண்களைப்போல இருப்பாய்.
English:- But Moses Said, "Please Do Not Leave Us. You Know Where We Should Camp In The Desert, And You Can Be Our Eyes.
32 - நீ எங்களோடேகூட வந்தால், கர்த்தர் எங்களுக்குச் செய்தருளும் நன்மையின்படியே உனக்கும் நன்மைசெய்வோம் என்றான்.
English:- If You Come With Us, We Will Share With You Whatever Good Things The Lord Gives Us."
33 - அவர்கள் கர்த்தருடைய பர்வதத்தைவிட்டு, மூன்றுநாள் பிரயாணம்போனார்கள்; மூன்றுநாள் பிரயாணத்திலும் கர்த்தருடைய உடன்படிக்கைப்பெட்டி அவர்களுக்கு இளைப்பாறும் ஸ்தலத்தைத் தேடிக் காட்டும்படிக்கு அவர்கள்முன் சென்றது.
English:- So They Set Out From The Mountain Of The Lord And Traveled For Three Days. The Ark Of The Covenant Of The Lord Went Before Them During Those Three Days To Find Them A Place To Rest.
34 - அவர்கள் பாளயத்திலிருந்து பிரயாணம்போகிறபோது, கர்த்தருடைய மேகம் பகலில் அவர்கள்மேல் தங்கியிருந்தது.
English:- The Cloud Of The Lord Was Over Them By Day When They Set Out From The Camp.
35 - பெட்டியானது புறப்படும்போது, மோசே: கர்த்தாவே, எழுந்தருளும், உம்முடைய சத்துருக்கள் சிதறடிக்கப்படுவார்களாக; உம்மைப் பகைக்கிறவர்கள் உமக்கு முன்பாக ஓடிப்போவார்களாக என்பான்.
English:- Whenever The Ark Set Out, Moses Said, "Rise Up, O Lord ! May Your Enemies Be Scattered; May Your Foes Flee Before You."
36 - அது தங்கும்போது: கர்த்தாவே, அநேக ஆயிரவர்களாகிய இஸ்ரவேலரிடத்தில் திரும்புவீராக என்று சொல்லுவான்.
English:- Whenever It Came To Rest, He Said, "Return, O Lord , To The Countless Thousands Of Israel."