பரிசுத்த வேதாகமம் நீதிமொழிகள் அதிகாரம் 16 – Read Holy Bible Book Of Proverbs Chapter 16 In Tamil With English Reference
1 - மனதின் யோசனைகள் மனுஷனுடையது; நாவின் பிரதியுத்தரம் கர்த்தரால் வரும்.
English:- To Man Belong The Plans Of The Heart, But From The Lord Comes The Reply Of The Tongue.
2 - மனுஷனுடைய வழிகளெல்லாம் அவன் பார்வைக்குச் சுத்தமானவைகள்; கர்த்தரோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார்.
English:- All A Man's Ways Seem Innocent To Him, But Motives Are Weighed By The Lord .
3 - உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்.
English:- Commit To The Lord Whatever You Do, And Your Plans Will Succeed.
4 - கர்த்தர் சகலத்தையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்.
English:- The Lord Works Out Everything For His Own Ends- Even The Wicked For A Day Of Disaster.
5 - மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; கையோடே கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான்.
English:- The Lord Detests All The Proud Of Heart. Be Sure Of This: They Will Not Go Unpunished.
6 - கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.
English:- Through Love And Faithfulness Sin Is Atoned For; Through The Fear Of The Lord A Man Avoids Evil.
7 - ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.
English:- When A Man's Ways Are Pleasing To The Lord , He Makes Even His Enemies Live At Peace With Him.
8 - அநியாயமாய் வந்த அதிக வருமானத்திலும், நியாயமாய் வந்த கொஞ்ச வருமானமே உத்தமம்.
English:- Better A Little With Righteousness Than Much Gain With Injustice.
9 - மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர்.
English:- In His Heart A Man Plans His Course, But The Lord Determines His Steps.
10 - ராஜாவின் உதடுகளில் திவ்வியவாக்கு பிறக்கும்; நியாயத்தில் அவன் வாய் தவறாது.
English:- The Lips Of A King Speak As An Oracle, And His Mouth Should Not Betray Justice.
11 - சுமுத்திரையான நிறைகோலும் தராசும் கர்த்தருடையது; பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல்.
English:- Honest Scales And Balances Are From The Lord ; All The Weights In The Bag Are Of His Making.
12 - அநியாயஞ்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும்.
English:- Kings Detest Wrongdoing, For A Throne Is Established Through Righteousness.
13 - நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாய்ப் பேசுகிறவனில் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.
English:- Kings Take Pleasure In Honest Lips; They Value A Man Who Speaks The Truth.
14 - ராஜாவின் கோபம் மரணதூதருக்குச் சமானம்; ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான்.
English:- A King's Wrath Is A Messenger Of Death, But A Wise Man Will Appease It.
15 - ராஜாவின் முகக்களையில் ஜீவன் உண்டு; அவனுடைய தயை பின்மாரி பெய்யும் மேகத்தைப்போல் இருக்கும்.
English:- When A King's Face Brightens, It Means Life; His Favor Is Like A Rain Cloud In Spring.
16 - பொன்னைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம்! வெள்ளியைச் சம்பாதிப்பதிலும் புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை!
English:- How Much Better To Get Wisdom Than Gold, To Choose Understanding Rather Than Silver!
17 - தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன் நடையைக் கவனித்திருக்கிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்.
English:- The Highway Of The Upright Avoids Evil; He Who Guards His Way Guards His Life.
18 - அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.
English:- Pride Goes Before Destruction, A Haughty Spirit Before A Fall.
19 - அகங்காரிகளோடே கொள்ளைப் பொருளைப் பங்கிடுவதைப்பார்க்கிலும், சிறுமையானவர்களோடே மனத்தாழ்மையாயிருப்பது நலம்.
English:- Better To Be Lowly In Spirit And Among The Oppressed Than To Share Plunder With The Proud.
20 - விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மைபெறுவான்; கர்த்தரை நம்புகிறவன் பாக்கியவான்.
English:- Whoever Gives Heed To Instruction Prospers, And Blessed Is He Who Trusts In The Lord .
21 - இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகியென்னப்படுவான்; உதடுகளின் மதுரம் கல்வியைப் பெருகப்பண்ணும்.
English:- The Wise In Heart Are Called Discerning, And Pleasant Words Promote Instruction.
22 - புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று; மதியீனரின் போதனை மதியீனமே.
English:- Understanding Is A Fountain Of Life To Those Who Have It, But Folly Brings Punishment To Fools.
23 - ஞானியின் இருதயம் அவன் வாய்க்கு அறிவையூட்டும்; அவன் உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்.
English:- A Wise Man's Heart Guides His Mouth, And His Lips Promote Instruction.
24 - இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஒளஷதமுமாகும்.
English:- Pleasant Words Are A Honeycomb, Sweet To The Soul And Healing To The Bones.
25 - மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரணவழிகள்.
English:- There Is A Way That Seems Right To A Man, But In The End It Leads To Death.
26 - பிரயாசப்படுகிறவன் தனக்காகவே பிரயாசப்படுகிறான்; அவன் வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும்.
English:- The Laborer's Appetite Works For Him; His Hunger Drives Him On.
27 - பேலியாளின் மகன் கிண்டிவிடுகிறான்; எரிகிற அக்கினிபோன்றது அவன் உதடுகளில் இருக்கிறது.
English:- A Scoundrel Plots Evil, And His Speech Is Like A Scorching Fire.
28 - மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; கோள் சொல்லுகிறவன் பிராண சிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.
English:- A Perverse Man Stirs Up Dissension, And A Gossip Separates Close Friends.
29 - கொடுமையானவன் தன் அயலானுக்கு நயங்காட்டி, அவனை நலமல்லாத வழியிலே நடக்கப்பண்ணுகிறான்.
English:- A Violent Man Entices His Neighbor And Leads Him Down A Path That Is Not Good.
30 - அவன் மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன் கண்களை மூடி, தீமையைச் செய்யும்படி தன் உதடுகளைக் கடிக்கிறான்.
English:- He Who Winks With His Eye Is Plotting Perversity; He Who Purses His Lips Is Bent On Evil.
31 - நீதியின் வழியில் உண்டாகும் நரைமயிரானது மகிமையான கிரீடம்.
English:- Gray Hair Is A Crown Of Splendor; It Is Attained By A Righteous Life.
32 - பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.
English:- Better A Patient Man Than A Warrior, A Man Who Controls His Temper Than One Who Takes A City.
33 - சீட்டு மடியிலே போடப்படும்; காரியசித்தியோ கர்த்தரால் வரும்.
English:- The Lot Is Cast Into The Lap, But Its Every Decision Is From The Lord .