பரிசுத்த வேதாகமம் நீதிமொழிகள் அதிகாரம் 19 – Read Holy Bible Book Of Proverbs Chapter 19 In Tamil With English Reference
1 - மாறுபாடான உதடுகளுள்ள மூடனைப்பார்க்கிலும், உத்தமனாய் நடக்கிற தரித்திரனே வாசி.
English:- Better A Poor Man Whose Walk Is Blameless Than A Fool Whose Lips Are Perverse.
2 - ஆத்துமா அறிவில்லாமலிருப்பது நல்லதல்ல; கால் துரிதமானவன் தப்பிநடக்கிறான்.
English:- It Is Not Good To Have Zeal Without Knowledge, Nor To Be Hasty And Miss The Way.
3 - மனுஷனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும்.
English:- A Man's Own Folly Ruins His Life, Yet His Heart Rages Against The Lord .
4 - செல்வம் அநேக சிநேகிதரைச் சேர்க்கும்; தரித்திரனோ தன் சிநேகிதனாலும் நெகிழப்படுவான்.
English:- Wealth Brings Many Friends, But A Poor Man's Friend Deserts Him.
5 - பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை.
English:- A False Witness Will Not Go Unpunished, And He Who Pours Out Lies Will Not Go Free.
6 - பிரபுவின் தயையை அநேகர் வருந்திக் கேட்பார்கள்; கொடை கொடுக்கிறவனுக்கு எவனும் சிநேகிதன்.
English:- Many Curry Favor With A Ruler, And Everyone Is The Friend Of A Man Who Gives Gifts.
7 - தரித்திரனை அவனுடைய சகோதரரெல்லாரும் பகைக்கிறார்களே, எத்தனை அதிகமாய் அவன் சிநேகிதர் அவனுக்குத் தூரமாவார்கள்; அவர்களுடைய வார்த்தைகளை அவன் நாடுகிறான், அவைகளோ வெறும் வார்த்தைகளே.
English:- A Poor Man Is Shunned By All His Relatives- How Much More Do His Friends Avoid Him! Though He Pursues Them With Pleading, They Are Nowhere To Be Found.
8 - ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைச் சிநேகிக்கிறான்; புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான்.
English:- He Who Gets Wisdom Loves His Own Soul; He Who Cherishes Understanding Prospers.
9 - பொய்ச்சாட்சிக்காரன் ஆக்கினைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான்.
English:- A False Witness Will Not Go Unpunished, And He Who Pours Out Lies Will Perish.
10 - மூடனுக்குச் செல்வம் தகாது; பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமைக்கு எவ்வளவும் தகாது.
English:- It Is Not Fitting For A Fool To Live In Luxury- How Much Worse For A Slave To Rule Over Princes!
11 - மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.
English:- A Man's Wisdom Gives Him Patience; It Is To His Glory To Overlook An Offense.
12 - ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயை புல்லின்மேல் பெய்யும் பனிபோலிருக்கும்.
English:- A King's Rage Is Like The Roar Of A Lion, But His Favor Is Like Dew On The Grass.
13 - மூடனாகிய மகன் தன் தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு.
English:- A Foolish Son Is His Father's Ruin, And A Quarrelsome Wife Is Like A Constant Dripping.
14 - வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்தரம்; புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு.
English:- Houses And Wealth Are Inherited From Parents, But A Prudent Wife Is From The Lord .
15 - சோம்பல் தூங்கிவிழப்பண்ணும்; அசதியானவன் பட்டினியாயிருப்பான்.
English:- Laziness Brings On Deep Sleep, And The Shiftless Man Goes Hungry.
16 - கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்; தன் வழிகளை அவமதிக்கிறவன் சாவான்.
English:- He Who Obeys Instructions Guards His Life, But He Who Is Contemptuous Of His Ways Will Die.
17 - ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.
English:- He Who Is Kind To The Poor Lends To The Lord , And He Will Reward Him For What He Has Done.
18 - நம்பிக்கையிருக்குமட்டும் உன் மகனைச் சிட்சைசெய்; ஆனாலும் அவனைக் கொல்ல உன் ஆத்துமாவை எழும்பவொட்டாதே.
English:- Discipline Your Son, For In That There Is Hope; Do Not Be A Willing Party To His Death.
19 - கடுங்கோபி ஆக்கினைக்குள்ளாவான்; நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாய் வரும்.
English:- A Hot-tempered Man Must Pay The Penalty; If You Rescue Him, You Will Have To Do It Again.
20 - உன் அந்தியகாலத்தில் நீ ஞானமுள்ளவனாயிருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.
English:- Listen To Advice And Accept Instruction, And In The End You Will Be Wise.
21 - மனுஷனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் கர்த்தருடைய யோசனையே நிலைநிற்கும்.
English:- Many Are The Plans In A Man's Heart, But It Is The Lord 'S Purpose That Prevails.
22 - நன்மைசெய்ய மனுஷன் கொண்டிருக்கும் ஆசையே தயை; பொய்யனைப் பார்க்கிலும் தரித்திரன் வாசி.
English:- What A Man Desires Is Unfailing Love ; Better To Be Poor Than A Liar.
23 - கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது.
English:- The Fear Of The Lord Leads To Life: Then One Rests Content, Untouched By Trouble.
24 - சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன் வாயண்டைக்கு எடுக்காமலிருக்கிறான்.
English:- The Sluggard Buries His Hand In The Dish; He Will Not Even Bring It Back To His Mouth!
25 - பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான்.
English:- Flog A Mocker, And The Simple Will Learn Prudence; Rebuke A Discerning Man, And He Will Gain Knowledge.
26 - தன் தகப்பனைக் கொள்ளையடித்து, தன் தாயைத் துரத்திவிடுகிறவன், இலச்சையையும் அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்.
English:- He Who Robs His Father And Drives Out His Mother Is A Son Who Brings Shame And Disgrace.
27 - என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளை விட்டு விலகச்செய்யும் போதகங்களை நீ கேளாதே.
English:- Stop Listening To Instruction, My Son, And You Will Stray From The Words Of Knowledge.
28 - பேலியாளின் சாட்சிக்காரன் நியாயத்தை நிந்திக்கிறான்; துன்மார்க்கருடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும்.
English:- A Corrupt Witness Mocks At Justice, And The Mouth Of The Wicked Gulps Down Evil.
29 - பரியாசக்காரருக்குத் தண்டனைகளும், மூடருடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாயிருக்கிறது.
English:- Penalties Are Prepared For Mockers, And Beatings For The Backs Of Fools.