பரிசுத்த வேதாகமம் நீதிமொழிகள் அதிகாரம் 26 – Read Holy Bible Book Of Proverbs Chapter 26 In Tamil With English Reference
1 - உஷ்ணகாலத்திலே உறைந்தபனியும், அறுப்புக்காலத்திலே மழையும் தகாததுபோல, மூடனுக்கு மகிமை தகாது.
English:- Like Snow In Summer Or Rain In Harvest, Honor Is Not Fitting For A Fool.
2 - அடைக்கலான் குருவி அலைந்துபோவதுபோலும், தகைவிலான் குருவி பறந்துபோவதுபோலும், காரணமில்லாமல் இட்ட சாபம் தங்காது.
English:- Like A Fluttering Sparrow Or A Darting Swallow, An Undeserved Curse Does Not Come To Rest.
3 - குதிரைக்குச் சவுக்கும், கழுதைக்குக் கடிவாளமும், மூடனுடைய முதுகுக்குப் பிரம்பும் ஏற்றது.
English:- A Whip For The Horse, A Halter For The Donkey, And A Rod For The Backs Of Fools!
4 - மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே; கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய்.
English:- Do Not Answer A Fool According To His Folly, Or You Will Be Like Him Yourself.
5 - மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான்.
English:- Answer A Fool According To His Folly, Or He Will Be Wise In His Own Eyes.
6 - மூடன் கையிலே செய்தி அனுப்புகிறவன் தன் கால்களையே தறித்துக்கொண்டு நஷ்டத்தை அடைகிறான்.
English:- Like Cutting Off One's Feet Or Drinking Violence Is The Sending Of A Message By The Hand Of A Fool.
7 - நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும், அப்படியே மூடரின் வாயிலுள்ள உவமைச்சொல்லும் குந்தும்.
English:- Like A Lame Man's Legs That Hang Limp Is A Proverb In The Mouth Of A Fool.
8 - மூடனுக்குக் கனத்தைக் கொடுக்கிறவன் கவணிலே கல்லைக்கட்டுகிறவன் போலிருப்பான்.
English:- Like Tying A Stone In A Sling Is The Giving Of Honor To A Fool.
9 - மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி வெறியன் கையில் அகப்பட்ட முள்ளு.
English:- Like A Thornbush In A Drunkard's Hand Is A Proverb In The Mouth Of A Fool.
10 - பெலத்தவன் அனைவரையும் நோகப்பண்ணி, மூடனையும் வேலைகொள்ளுகிறான், மீறி நடக்கிறவர்களையும் வேலைகொள்ளுகிறான்.
English:- Like An Archer Who Wounds At Random Is He Who Hires A Fool Or Any Passer-by.
11 - நாயானது தான் கக்கினதைத் தின்னும்படி திரும்புவதுபோல, மூடனும் தன் மூடத்தனத்துக்குத் திரும்புகிறான்.
English:- As A Dog Returns To Its Vomit, So A Fool Repeats His Folly.
12 - தன் பார்வைக்கு ஞானியாயிருப்பவனைக் கண்டாயானால், அவனைப்பார்க்கிலும் மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாயிருக்கலாம்.
English:- Do You See A Man Wise In His Own Eyes? There Is More Hope For A Fool Than For Him.
13 - வழியிலே சிங்கம் இருக்கும், நடு வீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்.
English:- The Sluggard Says, "There Is A Lion In The Road, A Fierce Lion Roaming The Streets!"
14 - கதவு கீல்மூளையில் ஆடுகிறதுபோல, சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான்.
English:- As A Door Turns On Its Hinges, So A Sluggard Turns On His Bed.
15 - சோம்பேறி தன் கையைக் கலத்திலே வைத்து அதைத் தன் வாய்க்குத் திரும்ப எடுக்க வருத்தப்படுகிறான்.
English:- The Sluggard Buries His Hand In The Dish; He Is Too Lazy To Bring It Back To His Mouth.
16 - புத்தியுள்ள மறுஉத்தரவு சொல்லத்தகும் ஏழுபேரைப்பார்க்கிலும் சோம்பேறி தன் பார்வைக்கு அதிக ஞானமுள்ளவன்.
English:- The Sluggard Is Wiser In His Own Eyes Than Seven Men Who Answer Discreetly.
17 - வழியே போகையில் தனக்கடாத வழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப்போலிருக்கிறான்.
English:- Like One Who Seizes A Dog By The Ears Is A Passer-by Who Meddles In A Quarrel Not His Own.
18 - கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ,
English:- Like A Madman Shooting Firebrands Or Deadly Arrows
19 - அப்படியே, தனக்கடுத்தவனை வஞ்சித்து: நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனுஷனும் இருக்கிறான்.
English:- Is A Man Who Deceives His Neighbor And Says, "I Was Only Joking!"
20 - விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும்.
English:- Without Wood A Fire Goes Out; Without Gossip A Quarrel Dies Down.
21 - கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, வாதுப்பிரியன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன்.
English:- As Charcoal To Embers And As Wood To Fire, So Is A Quarrelsome Man For Kindling Strife.
22 - கோள்காரனுடைய வார்த்தைகள் விளையாட்டுப்போலிருக்கும்; ஆனாலும் அவைகள் உள்ளத்திற்குள் தைக்கும்.
English:- The Words Of A Gossip Are Like Choice Morsels; They Go Down To A Man's Inmost Parts.
23 - நேச அனலைக் காண்பிக்கிற உதடுகளோடு கூடிய தீயநெஞ்சம் வெள்ளிப்பூச்சு பூசிய ஓட்டைப்போலிருக்கும்.
English:- Like A Coating Of Glaze Over Earthenware Are Fervent Lips With An Evil Heart.
24 - பகைஞன் தன் உள்ளத்தில் கபடத்தை மறைத்து, தன் உதடுகளினால் சூதுபேசுகிறான்.
English:- A Malicious Man Disguises Himself With His Lips, But In His Heart He Harbors Deceit.
25 - அவன் இதம்பேசினாலும் அவனை நம்பாதே; அவன் இருதயத்தில் ஏழு அருவருப்புகள் உண்டு.
English:- Though His Speech Is Charming, Do Not Believe Him, For Seven Abominations Fill His Heart.
26 - பகையை வஞ்சகமாய் மறைத்துவைக்கிறவனெவனோ, அவனுடைய பொல்லாங்கு மகா சபையிலே வெளிப்படுத்தப்படும்.
English:- His Malice May Be Concealed By Deception, But His Wickedness Will Be Exposed In The Assembly.
27 - படுகுழியை வெட்டுகிறவன் தானே அதில் விழுவான்; கல்லைப் புரட்டுகிறவன்மேல் அந்தக் கல் திரும்ப விழும்.
English:- If A Man Digs A Pit, He Will Fall Into It; If A Man Rolls A Stone, It Will Roll Back On Him.
28 - கள்ளநாவு தன்னால் கிலேசப்பட்டவர்களைப் பகைக்கும்; இச்சகம்பேசும் வாய் அழிவை உண்டுபண்ணும்.
English:- A Lying Tongue Hates Those It Hurts, And A Flattering Mouth Works Ruin.