நீதிமொழிகள் 27 – Proverbs 27


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் நீதிமொழிகள் அதிகாரம் 27 – Read Holy Bible Book Of Proverbs Chapter 27 In Tamil With English Reference


1 - நாளையத்தினத்தைக் குறித்துப் பெருமைபாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே.

English:- Do Not Boast About Tomorrow, For You Do Not Know What A Day May Bring Forth.

நீதிமொழிகள் 27-1 - Proverbs 27-1நாளையத்தினத்தைக் குறித்துப் பெருமைபாராட்டாதே; ஒருநாள் பிறப்பிப்பதை அறியாயே.

2 - உன் வாய் அல்ல, புறத்தியானே உன்னைப் புகழட்டும்; உன் உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும்.

English:- Let Another Praise You, And Not Your Own Mouth; Someone Else, And Not Your Own Lips.


3 - கல் கனமும், மணல் பாரமுமாயிருக்கும்; மூடனுடைய கோபமோ இவ்விரண்டிலும் பாரமாம்.

English:- Stone Is Heavy And Sand A Burden, But Provocation By A Fool Is Heavier Than Both.

நீதிமொழிகள் 27-3 - Proverbs 27-3கல் கனமும், மணல் பாரமுமாயிருக்கும்; மூடனுடைய கோபமோ இவ்விரண்டிலும் பாரமாம்.

4 - உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்?

English:- Anger Is Cruel And Fury Overwhelming, But Who Can Stand Before Jealousy?

நீதிமொழிகள் 27-4 - Proverbs 27-4உக்கிரம் கொடுமையுள்ளது, கோபம் நிஷ்டூரமுள்ளது; பொறாமையோவென்றால், அதற்கு முன்னிற்கத்தக்கவன் யார்?

5 - மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது.

English:- Better Is Open Rebuke Than Hidden Love.

நீதிமொழிகள் 27-5 - Proverbs 27-5மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது.

6 - சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்.

English:- Wounds From A Friend Can Be Trusted, But An Enemy Multiplies Kisses.

நீதிமொழிகள் 27-6 - Proverbs 27-6சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்.

7 - திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்; பசியுள்ளவனுக்கோ கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும்.

English:- He Who Is Full Loathes Honey, But To The Hungry Even What Is Bitter Tastes Sweet.

நீதிமொழிகள் 27-7 - Proverbs 27-7திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான்; பசியுள்ளவனுக்கோ கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும்.

8 - தன் கூட்டைவிட்டு அலைகிற குருவி எப்படியிருக்கிறதோ, அப்படியே தன் ஸ்தானத்தைவிட்டு அலைகிற மனுஷனும் இருக்கிறான்.

English:- Like A Bird That Strays From Its Nest Is A Man Who Strays From His Home.

நீதிமொழிகள் 27-8 - Proverbs 27-8தன் கூட்டைவிட்டு அலைகிற குருவி எப்படியிருக்கிறதோ, அப்படியே தன் ஸ்தானத்தைவிட்டு அலைகிற மனுஷனும் இருக்கிறான்.

9 - பரிமளதைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல, ஒருவனுடைய சிநேகிதன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும்.

English:- Perfume And Incense Bring Joy To The Heart, And The Pleasantness Of One's Friend Springs From His Earnest Counsel.

நீதிமொழிகள் 27-9 - Proverbs 27-9பரிமளதைலமும் சுகந்ததூபமும் இருதயத்தைக் களிப்பாக்குவதுபோல, ஒருவனுடைய சிநேகிதன் உட்கருத்தான ஆலோசனையினால் பாராட்டும் இன்பமானது களிப்பாக்கும்.

10 - உன் சிநேகிதனையும், உன் தகப்பனுடைய சிநேகிதனையும் விட்டுவிடாதே; உன் ஆபத்துக்காலத்தில் உன் சகோதரனுடைய வீட்டிற்குப் போகாதே; தூரத்திலுள்ள சகோதரனிலும் சமீபத்திலுள்ள அயலானே வாசி.

English:- Do Not Forsake Your Friend And The Friend Of Your Father, And Do Not Go To Your Brother's House When Disaster Strikes You- Better A Neighbor Nearby Than A Brother Far Away.


11 - என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.

English:- Be Wise, My Son, And Bring Joy To My Heart; Then I Can Answer Anyone Who Treats Me With Contempt.

நீதிமொழிகள் 27-11 - Proverbs 27-11என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.

12 - விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகளோ நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.

English:- The Prudent See Danger And Take Refuge, But The Simple Keep Going And Suffer For It.

நீதிமொழிகள் 27-12 - Proverbs 27-12விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகளோ நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.

13 - அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவனுடைய வஸ்திரத்தை எடுத்துக்கொள், அந்நிய ஸ்திரீக்காக ஈடுவாங்கிக்கொள்.

English:- Take The Garment Of One Who Puts Up Security For A Stranger; Hold It In Pledge If He Does It For A Wayward Woman.

நீதிமொழிகள் 27-13 - Proverbs 27-13அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவனுடைய வஸ்திரத்தை எடுத்துக்கொள், அந்நிய ஸ்திரீக்காக ஈடுவாங்கிக்கொள்.

14 - ஒருவன் அதிகாலையிலே எழுந்து உரத்தசத்தத்தோடே தன் சிநேகிதனுக்குச் சொல்லும் ஆசீர்வாதம் சாபமாக எண்ணப்படும்.

English:- If A Man Loudly Blesses His Neighbor Early In The Morning, It Will Be Taken As A Curse.

நீதிமொழிகள் 27-14 - Proverbs 27-14ஒருவன் அதிகாலையிலே எழுந்து உரத்தசத்தத்தோடே தன் சிநேகிதனுக்குச் சொல்லும் ஆசீர்வாதம் சாபமாக எண்ணப்படும்.

15 - அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் சண்டைக்காரியான ஸ்திரீயும் சரி.

English:- A Quarrelsome Wife Is Like A Constant Dripping On A Rainy Day;

நீதிமொழிகள் 27-15 - Proverbs 27-15அடைமழைநாளில் ஓயாத ஒழுக்கும் சண்டைக்காரியான ஸ்திரீயும் சரி.

16 - அவளை அடக்கப்பார்க்கிறவன் காற்றை அடக்கித் தன் வலதுகையினால் எண்ணெயைப் பிடிக்கப்பார்க்கிறான்.

English:- Restraining Her Is Like Restraining The Wind Or Grasping Oil With The Hand.

நீதிமொழிகள் 27-16 - Proverbs 27-16அவளை அடக்கப்பார்க்கிறவன் காற்றை அடக்கித் தன் வலதுகையினால் எண்ணெயைப் பிடிக்கப்பார்க்கிறான்.

17 - இரும்பை இரும்பு கருக்கிடும்; அப்படியே மனுஷனும் தன் சிநேகிதனுடைய முகத்தைக் கருக்கிடுகிறான்.

English:- As Iron Sharpens Iron, So One Man Sharpens Another.

நீதிமொழிகள் 27-17 - Proverbs 27-17இரும்பை இரும்பு கருக்கிடும்; அப்படியே மனுஷனும் தன் சிநேகிதனுடைய முகத்தைக் கருக்கிடுகிறான்.

18 - அத்திமரத்தைக் காக்கிறவன் அதின் கனியைப் புசிப்பான்; தன் எஜமானைக் காக்கிறவன் கனமடைவான்.

English:- He Who Tends A Fig Tree Will Eat Its Fruit, And He Who Looks After His Master Will Be Honored.

நீதிமொழிகள் 27-18 - Proverbs 27-18அத்திமரத்தைக் காக்கிறவன் அதின் கனியைப் புசிப்பான்; தன் எஜமானைக் காக்கிறவன் கனமடைவான்.

19 - தண்ணீரில் முகத்துக்கு முகம் ஒத்திருக்குமாப்போல, மனுஷரில் இருதயத்திற்கு இருதயம் ஒத்திருக்கும்.

English:- As Water Reflects A Face, So A Man's Heart Reflects The Man.

நீதிமொழிகள் 27-19 - Proverbs 27-19தண்ணீரில் முகத்துக்கு முகம் ஒத்திருக்குமாப்போல, மனுஷரில் இருதயத்திற்கு இருதயம் ஒத்திருக்கும்.

20 - பாதாளமும் அழிவும் திருப்தியாகிறதில்லை; அதுபோல மனுஷனுடைய கண்களும் திருப்தியாகிறதில்லை.

English:- Death And Destruction Are Never Satisfied, And Neither Are The Eyes Of Man.


21 - வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை.

English:- The Crucible For Silver And The Furnace For Gold, But Man Is Tested By The Praise He Receives.

நீதிமொழிகள் 27-21 - Proverbs 27-21வெள்ளிக்குக் குகையும், பொன்னுக்குப் புடமும் சோதனை; மனுஷனுக்கு அவனுக்கு உண்டாகும் புகழ்ச்சியே சோதனை.

22 - மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது.

English:- Though You Grind A Fool In A Mortar, Grinding Him Like Grain With A Pestle, You Will Not Remove His Folly From Him.

நீதிமொழிகள் 27-22 - Proverbs 27-22மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது.

23 - உன் ஆடுகளின் நிலைமையை நன்றாய் அறிந்துகொள்; உன் மந்தைகளின்மேல் கவனமாயிரு.

English:- Be Sure You Know The Condition Of Your Flocks, Give Careful Attention To Your Herds;

நீதிமொழிகள் 27-23 - Proverbs 27-23உன் ஆடுகளின் நிலைமையை நன்றாய் அறிந்துகொள்; உன் மந்தைகளின்மேல் கவனமாயிரு.

24 - செல்வம் என்றைக்கும் நிலையாது; கிரீடம் தலைமுறை தலைமுறைதோறும் நிலைநிற்குமோ?

English:- For Riches Do Not Endure Forever, And A Crown Is Not Secure For All Generations.

நீதிமொழிகள் 27-24 - Proverbs 27-24செல்வம் என்றைக்கும் நிலையாது; கிரீடம் தலைமுறை தலைமுறைதோறும் நிலைநிற்குமோ?

25 - புல் முளைக்கும், பச்சிலைகள் தோன்றும், மலைப்பூண்டுகள் சேர்க்கப்படும்.

English:- When The Hay Is Removed And New Growth Appears And The Grass From The Hills Is Gathered In,

நீதிமொழிகள் 27-25 - Proverbs 27-25புல் முளைக்கும், பச்சிலைகள் தோன்றும், மலைப்பூண்டுகள் சேர்க்கப்படும்.

26 - ஆட்டுக்குட்டிகள் உனக்கு வஸ்திரத்தையும், கடாக்கள் வயல் வாங்கத்தக்க கிரயத்தையும் கொடுக்கும்.

English:- The Lambs Will Provide You With Clothing, And The Goats With The Price Of A Field.

நீதிமொழிகள் 27-26 - Proverbs 27-26ஆட்டுக்குட்டிகள் உனக்கு வஸ்திரத்தையும், கடாக்கள் வயல் வாங்கத்தக்க கிரயத்தையும் கொடுக்கும்.

27 - வெள்ளாட்டுப்பால் உன் ஆகாரத்துக்கும், உன் வீட்டாரின் ஆகாரத்துக்கும், உன் வேலைக்காரிகளின் பிழைப்புக்கும் போதுமானபடியிருக்கும்.

English:- You Will Have Plenty Of Goats' Milk To Feed You And Your Family And To Nourish Your Servant Girls.

நீதிமொழிகள் 27-27 - Proverbs 27-27வெள்ளாட்டுப்பால் உன் ஆகாரத்துக்கும், உன் வீட்டாரின் ஆகாரத்துக்கும், உன் வேலைக்காரிகளின் பிழைப்புக்கும் போதுமானபடியிருக்கும்.


Previous Chapter Next Chapter