பரிசுத்த வேதாகமம் நீதிமொழிகள் அதிகாரம் 29 – Read Holy Bible Book Of Proverbs Chapter 29 In Tamil With English Reference
1 - அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.
English:- A Man Who Remains Stiff-necked After Many Rebukes Will Suddenly Be Destroyed-without Remedy.
2 - நீதிமான்கள் பெருகினால் ஜனங்கள் மகிழுவார்கள்; துன்மார்க்கர் ஆளும்போதோ ஜனங்கள் தவிப்பார்கள்.
English:- When The Righteous Thrive, The People Rejoice; When The Wicked Rule, The People Groan.
3 - ஞானத்தில் பிரியப்படுகிறவன் தன்தகப்பனை மகிழப்பண்ணுகிறான்; வேசிகளோடே தொந்திப்பானவனோ ஆஸ்தியை அழிக்கிறான்.
English:- A Man Who Loves Wisdom Brings Joy To His Father, But A Companion Of Prostitutes Squanders His Wealth.
4 - நியாயத்தினால் ராஜா தேசத்தை நிலைநிறுத்துகிறான்; பரிதானப்பிரியனோ அதைக் கவிழ்க்கிறான்.
English:- By Justice A King Gives A Country Stability, But One Who Is Greedy For Bribes Tears It Down.
5 - பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான்.
English:- Whoever Flatters His Neighbor Is Spreading A Net For His Feet.
6 - துஷ்டனுடைய துரோகத்திலே கண்ணியிருக்கிறது; நீதிமானோ பாடி மகிழுகிறான்.
English:- An Evil Man Is Snared By His Own Sin, But A Righteous One Can Sing And Be Glad.
7 - நீதிமான் ஏழைகளின் நியாயத்தைக் கவனித்தறிகிறான்; துன்மார்க்கனோ அதை அறிய விரும்பான்.
English:- The Righteous Care About Justice For The Poor, But The Wicked Have No Such Concern.
8 - பரியாசக்காரர் பட்டணத்தில் தீக்கொளுத்திவிடுகிறார்கள்; ஞானிகளோ குரோதத்தை விலக்குகிறார்கள்.
English:- Mockers Stir Up A City, But Wise Men Turn Away Anger.
9 - ஞானி மூடனுடன் வழக்காடுகையில், சினந்தாலும் சிரித்தாலும் அமைதியில்லை.
English:- If A Wise Man Goes To Court With A Fool, The Fool Rages And Scoffs, And There Is No Peace.
10 - இரத்தப்பிரியர் உத்தமனைப் பகைக்கிறார்கள்; செம்மையானவர்களோ அவனுடைய பிராணனைக் காப்பாற்றுகிறார்கள்.
English:- Bloodthirsty Men Hate A Man Of Integrity And Seek To Kill The Upright.
11 - மூடன் தன் உள்ளத்தையெல்லாம் வெளிப்படுத்துகிறான்; ஞானியோ அதைப் பின்னுக்கு அடக்கிவைக்கிறான்.
English:- A Fool Gives Full Vent To His Anger, But A Wise Man Keeps Himself Under Control.
12 - அதிபதியானவன் பொய்களுக்குச் செவிகொடுத்தால், அவன் ஊழியக்காரர் யாவரும் துன்மார்க்கராவார்கள்.
English:- If A Ruler Listens To Lies, All His Officials Become Wicked.
13 - தரித்திரனும் கொடுமைக்காரனும் ஒருவரையொருவர் சந்திக்கிறார்கள்; அவ்விருவருடைய கண்களுக்கும் கர்த்தர் வெளிச்சங் கொடுக்கிறார்.
English:- The Poor Man And The Oppressor Have This In Common: The Lord Gives Sight To The Eyes Of Both.
14 - ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாய் விசாரிக்கிற ராஜாவின் சிங்காசனம் என்றும் நிலைபெற்றிருக்கும்.
English:- If A King Judges The Poor With Fairness, His Throne Will Always Be Secure.
15 - பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.
English:- The Rod Of Correction Imparts Wisdom, But A Child Left To Himself Disgraces His Mother.
16 - துன்மார்க்கர் பெருகினால் பாவமும் பெருகும்; நீதிமான்களோ அவர்கள் விழுவதைக் காண்பார்கள்.
English:- When The Wicked Thrive, So Does Sin, But The Righteous Will See Their Downfall.
17 - உன் மகனைச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறுதல்செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.
English:- Discipline Your Son, And He Will Give You Peace; He Will Bring Delight To Your Soul.
18 - தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.
English:- Where There Is No Revelation, The People Cast Off Restraint; But Blessed Is He Who Keeps The Law.
19 - அடிமையானவன் வார்த்தைகளினாலே அடங்கான்; அவைகளை அவன் அறிந்தாலும் உத்தரவுகொடான்.
English:- A Servant Cannot Be Corrected By Mere Words; Though He Understands, He Will Not Respond.
20 - தன் வார்த்தைகளில் பதறுகிற மனுஷனைக் கண்டாயானால், அவனை நம்புவதைப்பார்க்கிலும் மூடனை நம்பலாம்.
English:- Do You See A Man Who Speaks In Haste? There Is More Hope For A Fool Than For Him.
21 - ஒருவன் தன் அடிமையைச் சிறுபிராயமுதல் இளக்காரமாக வளர்த்தால், முடிவிலே அவன் தன்னைப் புத்திரனாகப் பாராட்டுவான்.
English:- If A Man Pampers His Servant From Youth, He Will Bring Grief In The End.
22 - கோபக்காரன் வழக்கைக் கொளுவுகிறான்; மூர்க்கன் பெரும்பாதகன்.
English:- An Angry Man Stirs Up Dissension, And A Hot-tempered One Commits Many Sins.
23 - மனுஷனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; மனத்தாழ்மையுள்ளவனோ கனமடைவான்.
English:- A Man's Pride Brings Him Low, But A Man Of Lowly Spirit Gains Honor.
24 - திருடனோடே பங்கிட்டுக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைப் பகைக்கிறான்; சாபத்தை அவன் கேட்டாலும் காரியத்தை வெளிப்படுத்தமாட்டான்.
English:- The Accomplice Of A Thief Is His Own Enemy; He Is Put Under Oath And Dare Not Testify.
25 - மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்.
English:- Fear Of Man Will Prove To Be A Snare, But Whoever Trusts In The Lord Is Kept Safe.
26 - ஆளுகைசெய்கிறவனுடைய முகதரிசனத்தைத் தேடுகிறவர்கள் அநேகர்; ஆனாலும் அவனவனுடைய நியாயம் கர்த்தராலே தீரும்.
English:- Many Seek An Audience With A Ruler, But It Is From The Lord That Man Gets Justice.
27 - நீதிமானுக்கு அநியாயக்காரன் அருவருப்பானவன்; சன்மார்க்கனும் துன்மார்க்கனுக்கு அருவருப்பானவன்.
English:- The Righteous Detest The Dishonest; The Wicked Detest The Upright.