பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 10 – Read Holy Bible Book Of Psalms Chapter 10 In Tamil With English Reference
1 - கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? ஆபத்து நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?
English:- Why, O Lord , Do You Stand Far Off? Why Do You Hide Yourself In Times Of Trouble?
2 - துன்மார்க்கன் தன் பெருமையினால் சிறுமைப்பட்டவனைக் கடூரமாய்த் துன்பப்படுத்துகிறான்; அவர்கள் நினைத்த சதிமோசங்களில் அவர்களே அகப்படுவார்கள்.
English:- In His Arrogance The Wicked Man Hunts Down The Weak, Who Are Caught In The Schemes He Devises.
3 - துன்மார்க்கன் தன் உள்ளம் இச்சித்ததைப் பெற்றதினால் பெருமைபாராட்டி, பொருளை அபகரித்துத் தன்னைத்தான் போற்றி, கர்த்தரை அசட்டைபண்ணுகிறான்.
English:- He Boasts Of The Cravings Of His Heart; He Blesses The Greedy And Reviles The Lord .
4 - துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லையென்பதே.
English:- In His Pride The Wicked Does Not Seek Him; In All His Thoughts There Is No Room For God.
5 - அவன் வழிகள் எப்போதும் கேடுள்ளவைகள்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் அவன் பார்வைக்கு எட்டாமல் மிகவும் உயரமாயிருக்கிறது; தன் எதிராளிகளெல்லார்மேலும் சீறுகிறான்.
English:- His Ways Are Always Prosperous; He Is Haughty And Your Laws Are Far From Him; He Sneers At All His Enemies.
6 - நான் அசைக்கப்படுவதில்லை, தலைமுறை தலைமுறைதோறும் தீங்கு என்னை அணுகுவதில்லையென்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்.
English:- He Says To Himself, "Nothing Will Shake Me; I'll Always Be Happy And Never Have Trouble."
7 - அவன் வாய் சபிப்பினாலும் கபடத்தினாலும் கொடுமையினாலும் நிறைந்திருக்கிறது; அவன் நாவின்கீழ் தீவினையும் அக்கிரமமும் உண்டு.
English:- His Mouth Is Full Of Curses And Lies And Threats; Trouble And Evil Are Under His Tongue.
8 - கிராமங்களின் ஒளிப்பிடங்களிலே பதிவிருந்து, மறைவிடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான்; திக்கற்றவர்களைப் பிடிக்க அவன் கண்கள் நோக்கிக்கொண்டிருக்கிறது.
English:- He Lies In Wait Near The Villages; From Ambush He Murders The Innocent, Watching In Secret For His Victims.
9 - தன் கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் பதிவிருக்கிறான்; ஏழையைப் பிடிக்கப் பதிவிருந்து, ஏழையைத் தன் வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான்.
English:- He Lies In Wait Like A Lion In Cover; He Lies In Wait To Catch The Helpless; He Catches The Helpless And Drags Them Off In His Net.
10 - திக்கற்றவர்கள் தன் பலவான்கள் கையில் விழும்படி அவன் பதுங்கிக்கிடக்கிறான்.
English:- His Victims Are Crushed, They Collapse; They Fall Under His Strength.
11 - தேவன் அதை மறந்தார் என்றும், அவர் தம்முடைய முகத்தை மறைத்து, ஒருக்காலும் அதைக் காணமாட்டார் என்றும், தன் இருதயத்திலே சொல்லிக்கொள்ளுகிறான்.
English:- He Says To Himself, "God Has Forgotten; He Covers His Face And Never Sees."
12 - கர்த்தாவே, எழுந்தருளும்; தேவனே, உம்முடைய கையை உயர்த்தும்; ஏழைகளை மறவாதேயும்.
English:- Arise, Lord ! Lift Up Your Hand, O God. Do Not Forget The Helpless.
13 - துன்மார்க்கன் தேவனை அசட்டைபண்ணி: நீர் கேட்டு விசாரிப்பதில்லை என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்வானேன்.
English:- Why Does The Wicked Man Revile God? Why Does He Say To Himself, "He Won't Call Me To Account"?
14 - அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும் குரோதத்தையும் கவனித்திருக்கிறீரே; நீர் பதிலளிப்பீர்; ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே.
English:- But You, O God, Do See Trouble And Grief; You Consider It To Take It In Hand. The Victim Commits Himself To You; You Are The Helper Of The Fatherless.
15 - துன்மார்க்கனும் பொல்லாதவனுமாயிருக்கிறவனுடைய புயத்தை முறித்துவிடும்; அவனுடைய ஆகாமியம் காணாமற்போகுமட்டும் அதைத் தேடி விசாரியும்.
English:- Break The Arm Of The Wicked And Evil Man; Call Him To Account For His Wickedness That Would Not Be Found Out.
16 - கர்த்தர் சதாகாலங்களுக்கும் ராஜாவாயிருக்கிறார்; புறஜாதியார் அவருடைய தேசத்திலிருந்து அழிந்துபோவார்கள்.
English:- The Lord Is King For Ever And Ever; The Nations Will Perish From His Land.
17 - கர்த்தாவே, சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்; அவர்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவீர்.
English:- You Hear, O Lord , The Desire Of The Afflicted; You Encourage Them, And You Listen To Their Cry,
18 - மண்ணான மனுஷன் இனிப் பலவந்தஞ்செய்யத் தொடராதபடிக்கு, தேவரீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதிசெய்ய உம்முடைய செவிகளைச் சாய்த்துக்கேட்டருளுவீர்.
English:- Defending The Fatherless And The Oppressed, In Order That Man, Who Is Of The Earth, May Terrify No More.