பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 103 – Read Holy Bible Book Of Psalms Chapter 103 In Tamil With English Reference
1 - என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி.
English:- Praise The Lord , O My Soul; All My Inmost Being, Praise His Holy Name.
2 - என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.
English:- Praise The Lord , O My Soul, And Forget Not All His Benefits-
3 - அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி,
English:- Who Forgives All Your Sins And Heals All Your Diseases,
4 - உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி,
English:- Who Redeems Your Life From The Pit And Crowns You With Love And Compassion,
5 - நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயது போலாகிறது.
English:- Who Satisfies Your Desires With Good Things So That Your Youth Is Renewed Like The Eagle's.
6 - ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார்.
English:- The Lord Works Righteousness And Justice For All The Oppressed.
7 - அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது கிரியைகளை இஸ்ரவேல் புத்திரருக்கும் தெரியப்பண்ணினார்.
English:- He Made Known His Ways To Moses, His Deeds To The People Of Israel:
8 - கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்.
English:- The Lord Is Compassionate And Gracious, Slow To Anger, Abounding In Love.
9 - அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார்.
English:- He Will Not Always Accuse, Nor Will He Harbor His Anger Forever;
10 - அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்.
English:- He Does Not Treat Us As Our Sins Deserve Or Repay Us According To Our Iniquities.
11 - பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது.
English:- For As High As The Heavens Are Above The Earth, So Great Is His Love For Those Who Fear Him;
12 - மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார்.
English:- As Far As The East Is From The West, So Far Has He Removed Our Transgressions From Us.
13 - தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்.
English:- As A Father Has Compassion On His Children, So The Lord Has Compassion On Those Who Fear Him;
14 - நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.
English:- For He Knows How We Are Formed, He Remembers That We Are Dust.
15 - மனுஷனுடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது; வெளியின் புஷ்பத்தைப்போல் பூக்கிறான்.
English:- As For Man, His Days Are Like Grass, He Flourishes Like A Flower Of The Field;
16 - காற்று அதின்மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று; அது இருந்த இடமும் இனி அதை அறியாது.
English:- The Wind Blows Over It And It Is Gone, And Its Place Remembers It No More.
17 - கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது.
English:- But From Everlasting To Everlasting The Lord 'S Love Is With Those Who Fear Him, And His Righteousness With Their Children's Children-
18 - அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது.
English:- With Those Who Keep His Covenant And Remember To Obey His Precepts.
19 - கர்த்தர் வானங்களில் தமது சிங்காசனத்தை ஸ்தாபித்திருக்கிறார்; அவருடைய ராஜரிகம் சர்வத்தையும் ஆளுகிறது.
English:- The Lord Has Established His Throne In Heaven, And His Kingdom Rules Over All.
20 - கர்த்தருடைய வார்த்தையைக்கேட்டு, அவருடைய வசனத்தின்படி செய்கிற பலத்த சவுரியவான்களாகிய அவருடைய தூதர்களே, அவரை ஸ்தோத்திரியுங்கள்.
English:- Praise The Lord , You His Angels, You Mighty Ones Who Do His Bidding, Who Obey His Word.
21 - கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்து, அவர் பணிவிடைக்காரராயிருக்கிற அவருடைய சர்வசேனைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்.
English:- Praise The Lord , All His Heavenly Hosts, You His Servants Who Do His Will.
22 - கர்த்தர் ஆளுகிற எவ்விடங்களிலுமுள்ள அவருடைய சகல கிரியைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்; என் ஆத்துமாவே கர்த்தரை ஸ்தோத்திரி.
English:- Praise The Lord , All His Works Everywhere In His Dominion. Praise The Lord , O My Soul.