பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 17 – Read Holy Bible Book Of Psalms Chapter 17 In Tamil With English Reference
1 - கர்த்தாவே, நியாயத்தைக் கேட்டருளும், என் கூப்பிடுதலைக் கவனியும்; கபடமில்லாத உதடுகளினின்று பிறக்கும் என் விண்ணப்பத்திற்குச் செவிகொடும்.
English:- Hear, O Lord , My Righteous Plea; Listen To My Cry. Give Ear To My Prayer- It Does Not Rise From Deceitful Lips.
2 - உம்முடைய சந்நிதியிலிருந்து என் நியாயம் வெளிப்படுவதாக; உம்முடைய கண்கள் நியாயமானவைகளை நோக்குவதாக.
English:- May My Vindication Come From You; May Your Eyes See What Is Right.
3 - நீர் என் இருதயத்தைப் பரிசோதித்து, இராக்காலத்தில் அதை விசாரித்து, என்னைப் புடமிட்டுப்பார்த்தும் ஒன்றும் காணாதிருக்கிறீர்; என் வாய் மீறாதபடிக்குத் தீர்மானம் பண்ணினேன்.
English:- Though You Probe My Heart And Examine Me At Night, Though You Test Me, You Will Find Nothing; I Have Resolved That My Mouth Will Not Sin.
4 - மனுஷரின் செய்கைகளைக்குறித்து, நான் உம்முடைய உதடுகளின் வாக்கினாலே துஷ்டனுடைய பாதைகளுக்கு விலக்கமாய் என்னைக் காத்துக் கொள்ளுகிறேன்.
English:- As For The Deeds Of Men- By The Word Of Your Lips I Have Kept Myself From The Ways Of The Violent.
5 - என் காலடிகள் வழுவாதபடிக்கு, என் நடைகளை உமது வழிகளில் ஸ்திரப்படுத்தும்.
English:- My Steps Have Held To Your Paths; My Feet Have Not Slipped.
6 - தேவனே, நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன், எனக்குச் செவிகொடுக்கிறீர்; என்னிடத்தில் உம்முடைய செவியைச் சாய்த்து, என் வார்த்தையைக் கேட்டருளும்.
English:- I Call On You, O God, For You Will Answer Me; Give Ear To Me And Hear My Prayer.
7 - உம்மை நம்புகிறவர்களை அவர்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களினின்று உமது வலதுகரத்தினால் தப்புவித்து இரட்சிக்கிறவரே! உம்முடைய அதிசயமான கிருபையை விளங்கப்பண்ணும்.
English:- Show The Wonder Of Your Great Love, You Who Save By Your Right Hand Those Who Take Refuge In You From Their Foes.
8 - கண்மணியைப்போல என்னைக் காத்தருளும்.
English:- Keep Me As The Apple Of Your Eye; Hide Me In The Shadow Of Your Wings
9 - என்னை ஒடுக்குகிற துன்மார்க்கருக்கும், என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என் பிராணப்பகைஞருக்கும் மறைவாக, உம்முடைய செட்டைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும்.
English:- From The Wicked Who Assail Me, From My Mortal Enemies Who Surround Me.
10 - அவர்கள் நிணந்துன்னியிருக்கிறார்கள், தங்கள் வாயினால் வீம்பு பேசுகிறார்கள்.
English:- They Close Up Their Callous Hearts, And Their Mouths Speak With Arrogance.
11 - நாங்கள் செல்லும் பாதைகளில் இப்பொழுது எங்களை வளைந்துகொண்டார்கள்; எங்களைத் தரையிலே தள்ளும்படி அவர்கள் கண்கள் எங்களை நோக்கிக்கொண்டிருக்கிறது.
English:- They Have Tracked Me Down, They Now Surround Me, With Eyes Alert, To Throw Me To The Ground.
12 - பீறுகிறதற்கு ஆவலுள்ள சிங்கத்துக்கும், மறைவிடங்களில் பதிவிருக்கிற பால சிங்கத்துக்கும் ஒப்பாயிருக்கிறார்கள்.
English:- They Are Like A Lion Hungry For Prey, Like A Great Lion Crouching In Cover.
13 - கர்த்தாவே, நீர் எழுந்திருந்து, அவனுக்கு எதிரிட்டு, அவனை மடங்கடியும்; கர்த்தாவே, என் ஆத்துமாவைத் துன்மார்க்கனுடைய கைக்கு உம்முடைய பட்டயத்தினால் தப்புவியும்.
English:- Rise Up, O Lord , Confront Them, Bring Them Down; Rescue Me From The Wicked By Your Sword.
14 - மனுஷருடைய கைக்கும், இம்மையில் தங்கள் பங்கைப் பெற்றிருக்கிற உலகமக்களின் கைக்கும் உம்முடைய கரத்தினால் என்னைத் தப்புவியும்; அவர்கள் வயிற்றை உமது திரவியத்தினால் நிரப்புகிறீர்; அவர்கள் புத்திரபாக்கியத்தினால் திருப்தியடைந்து, தங்களுக்கு மீதியான பொருளைத் தங்கள் குழந்தைகளுக்கு வைக்கிறார்கள்.
English:- O Lord , By Your Hand Save Me From Such Men, From Men Of This World Whose Reward Is In This Life. You Still The Hunger Of Those You Cherish; Their Sons Have Plenty, And They Store Up Wealth For Their Children.
15 - நானோ நீதீயில் உம்முடைய முகத்தைத் தரிசிப்பேன்; நான் விழிக்கும்போது உமது சாயலால் திருப்தியாவேன்.
English:- And I-in Righteousness I Will See Your Face; When I Awake, I Will Be Satisfied With Seeing Your Likeness.