பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 22 – Read Holy Bible Book Of Psalms Chapter 22 In Tamil With English Reference
1 - என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? எனக்கு உதவி செய்யாமலும், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளைக் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?
English:- My God, My God, Why Have You Forsaken Me? Why Are You So Far From Saving Me, So Far From The Words Of My Groaning?
2 - என் தேவனே, நான் பகலிலே கூப்பிடுகிறேன், உத்தரவுகொடீர்; இரவிலே கூப்பிடுகிறேன், எனக்கு அமைதலில்லை.
English:- O My God, I Cry Out By Day, But You Do Not Answer, By Night, And Am Not Silent.
3 - இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர்.
English:- Yet You Are Enthroned As The Holy One; You Are The Praise Of Israel.
4 - எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கை வைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர்.
English:- In You Our Fathers Put Their Trust; They Trusted And You Delivered Them.
5 - உம்மை நோக்கிக் கூப்பிட்டுத் தப்பினார்கள்; உம்மை நம்பி வெட்கப்பட்டுப்போகாதிருந்தார்கள்.
English:- They Cried To You And Were Saved; In You They Trusted And Were Not Disappointed.
6 - நானோ ஒரு புழு, மனுஷனல்ல; மனுஷரால் நிந்திக்கப்பட்டும், ஜனங்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன்.
English:- But I Am A Worm And Not A Man, Scorned By Men And Despised By The People.
7 - என்னைப் பார்க்கிறவர்களெல்லாரும் என்னைப் பரியாசம்பண்ணி, உதட்டைப் பிதுக்கி, தலையைத் துலுக்கி:
English:- All Who See Me Mock Me; They Hurl Insults, Shaking Their Heads:
8 - கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருந்தானே, அவர் இவனை விடுவிக்கட்டும்; இவன்மேல் பிரியமாயிருக்கிறாரே, இப்பொழுது இவனை மீட்டுவிடட்டும் என்கிறார்கள்.
English:- "He Trusts In The Lord ; Let The Lord Rescue Him. Let Him Deliver Him, Since He Delights In Him."
9 - நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்; என் தாயின் முலைப்பாலை நான் உண்கையில் என்னை உம்முடையபேரில் நம்பிக்கையாயிருக்கப்பண்ணினீர்.
English:- Yet You Brought Me Out Of The Womb; You Made Me Trust In You Even At My Mother's Breast.
10 - கர்ப்பத்திலிருந்து வெளிப்பட்டபோதே உமது சார்பில் விழுந்தேன்; நான் என் தாயின் வயிற்றில் இருந்ததுமுதல் நீர் என் தேவனாயிருக்கிறீர்.
English:- From Birth I Was Cast Upon You; From My Mother's Womb You Have Been My God.
11 - என்னை விட்டுத் தூரமாகாதேயும்; ஆபத்து கிட்டியிருக்கிறது, சகாயரும் இல்லை.
English:- Do Not Be Far From Me, For Trouble Is Near And There Is No One To Help.
12 - அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பாசான் தேசத்துப் பலத்த எருதுகள் என்னை வளைந்துகொண்டது.
English:- Many Bulls Surround Me; Strong Bulls Of Bashan Encircle Me.
13 - பீறி கெர்ச்சிக்கிற சிங்கத்தைப்போல், என்மேல் தங்கள் வாயைத் திறக்கிறார்கள்.
English:- Roaring Lions Tearing Their Prey Open Their Mouths Wide Against Me.
14 - தண்ணீரைப்போல ஊற்றுண்டேன்; என் எலும்புகளெல்லாம் கட்டுவிட்டது, என் இருதயம் மெழுகுபோலாகி, என் குடல்களின் நடுவே உருகிற்று.
English:- I Am Poured Out Like Water, And All My Bones Are Out Of Joint. My Heart Has Turned To Wax; It Has Melted Away Within Me.
15 - என் பெலன் ஓட்டைப்போல் காய்ந்தது; என் நாவு மேல்வாயோடே ஒட்டிக்கொண்டது; என்னை மரணத்தூளிலே போடுகிறீர்.
English:- My Strength Is Dried Up Like A Potsherd, And My Tongue Sticks To The Roof Of My Mouth; You Lay Me In The Dust Of Death.
16 - நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்.
English:- Dogs Have Surrounded Me; A Band Of Evil Men Has Encircled Me, They Have Pierced My Hands And My Feet.
17 - என் எலும்புகளையெல்லாம் நான் எண்ணலாம்; அவர்கள் என்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
English:- I Can Count All My Bones; People Stare And Gloat Over Me.
18 - என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போடுகிறார்கள்.
English:- They Divide My Garments Among Them And Cast Lots For My Clothing.
19 - ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக்கொள்ளும்.
English:- But You, O Lord , Be Not Far Off; O My Strength, Come Quickly To Help Me.
20 - என் ஆத்துமாவைப் பட்டயத்திற்கும், எனக்கு அருமையானதை நாய்களின் துஷ்டத்தனத்திற்கும் தப்புவியும்.
English:- Deliver My Life From The Sword, My Precious Life From The Power Of The Dogs.
21 - என்னைச் சிங்கத்தின் வாயிலிருந்து இரட்சியும்; நான் காண்டாமிருகத்தின் கொம்புகளில் இருக்கும்போது எனக்குச் செவிகொடுத்தருளினீர்.
English:- Rescue Me From The Mouth Of The Lions; Save Me From The Horns Of The Wild Oxen.
22 - உம்முடைய நாமத்தை என் சகோதரருக்கு அறிவித்து, சபைநடுவில் உம்மைத் துதிப்பேன்.
English:- I Will Declare Your Name To My Brothers; In The Congregation I Will Praise You.
23 - கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததியாரே, நீங்கள் எல்லாரும் அவரைக் கனம்பண்ணுங்கள்; இஸ்ரவேலின் வம்சத்தாரே, நீங்கள் எல்லாரும் அவர்பேரில் பயபக்தியாயிருங்கள்.
English:- You Who Fear The Lord , Praise Him! All You Descendants Of Jacob, Honor Him! Revere Him, All You Descendants Of Israel!
24 - உபத்திரவப்பட்டவனுடைய உபத்திரவத்தை அவர் அற்பமாயெண்ணாமலும் அருவருக்காமலும், தம்முடைய முகத்தை அவனுக்கு மறைக்காமலுமிருந்து, தம்மை நோக்கி அவன் கூப்பிடுகையில் அவனைக் கேட்டருளினார்.
English:- For He Has Not Despised Or Disdained The Suffering Of The Afflicted One; He Has Not Hidden His Face From Him But Has Listened To His Cry For Help.
25 - மகா சபையிலே நான் உம்மைத் துதிப்பேன்; அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.
English:- From You Comes The Theme Of My Praise In The Great Assembly; Before Those Who Fear You Will I Fulfill My Vows.
26 - சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள்; உங்கள் இருதயம் என்றென்றைக்கும் வாழும்.
English:- The Poor Will Eat And Be Satisfied; They Who Seek The Lord Will Praise Him- May Your Hearts Live Forever!
27 - பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும்.
English:- All The Ends Of The Earth Will Remember And Turn To The Lord , And All The Families Of The Nations Will Bow Down Before Him,
28 - ராஜ்யம் கர்த்தருடையது; அவர் ஜாதிகளை ஆளுகிறவர்.
English:- For Dominion Belongs To The Lord And He Rules Over The Nations.
29 - பூமியின் செல்வவான்கள் யாவரும் புசித்துப் பணிந்துகொள்வார்கள்; புழுதியில் இறங்குகிறவர்கள் யாவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். ஒருவனும் தன் ஆத்துமா அழியாதபடி அதைக் காக்கக்கூடாதே.
English:- All The Rich Of The Earth Will Feast And Worship; All Who Go Down To The Dust Will Kneel Before Him- Those Who Cannot Keep Themselves Alive.
30 - ஒரு சந்ததி அவரைச் சேவிக்கும்; தலைமுறை தலைமுறையாக அது ஆண்டவருடைய சந்ததி என்னப்படும்.
English:- Posterity Will Serve Him; Future Generations Will Be Told About The Lord.
31 - அவர்கள் வந்து: அவரே இவைகளைச் செய்தார் என்று பிறக்கப்போகிறவர்களுக்கு அவருடைய நீதியை அறிவிப்பார்கள்.
English:- They Will Proclaim His Righteousness To A People Yet Unborn- For He Has Done It.