பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 32 – Read Holy Bible Book Of Psalms Chapter 32 In Tamil With English Reference
1 - எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்.
English:- Blessed Is He Whose Transgressions Are Forgiven, Whose Sins Are Covered.
2 - எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்.
English:- Blessed Is The Man Whose Sin The Lord Does Not Count Against Him And In Whose Spirit Is No Deceit.
3 - நான் அடக்கிவைத்தமட்டும், நித்தம் என் கதறுதலினாலே என் எலும்புகள் உலர்ந்துபோயிற்று.
English:- When I Kept Silent, My Bones Wasted Away Through My Groaning All Day Long.
4 - இரவும் பகலும் என்மேல் உம்முடைய கை பாரமாயிருந்ததினால், என் சாரம் உஷ்ணகால வறட்சிபோல வறண்டுபோயிற்று. (சேலா.)
English:- For Day And Night Your Hand Was Heavy Upon Me; My Strength Was Sapped As In The Heat Of Summer. Selah
5 - நான் என் அக்கிரமத்தை மறைக்காமல், என் பாவத்தை உமக்கு அறிவித்தேன்; என் மீறுதல்களைக் கர்த்தருக்கு அறிக்கையிடுவேன் என்றேன்; தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர். (சேலா.)
English:- Then I Acknowledged My Sin To You And Did Not Cover Up My Iniquity. I Said, "I Will Confess My Transgressions To The Lord "- And You Forgave The Guilt Of My Sin. Selah
6 - இதற்காகச் சகாயங்கிடைக்குங் காலத்தில் பக்தியுள்ளவனெவனும் உம்மை நோக்கி விண்ணப்பஞ்செய்வான்; அப்பொழுது மிகுந்த ஜலப்பிரவாகம் வந்தாலும் அது அவனை அணுகாது.
English:- Therefore Let Everyone Who Is Godly Pray To You While You May Be Found; Surely When The Mighty Waters Rise, They Will Not Reach Him.
7 - நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்; என்னை நீர் இக்கட்டுக்கு விலக்கிக்காத்து, இரட்சணியப் பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படி செய்வீர். (சேலா.)
English:- You Are My Hiding Place; You Will Protect Me From Trouble And Surround Me With Songs Of Deliverance. Selah
8 - நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்.
English:- I Will Instruct You And Teach You In The Way You Should Go; I Will Counsel You And Watch Over You.
9 - வாரினாலும் கடிவாளத்தினாலும் வாய் கட்டப்பட்டாலொழிய, உன் கிட்டச் சேராத புத்தியில்லாக் குதிரையைப்போலவும் கோவேறு கழுதையைப்போலவும் இருக்கவேண்டாம்.
English:- Do Not Be Like The Horse Or The Mule, Which Have No Understanding But Must Be Controlled By Bit And Bridle Or They Will Not Come To You.
10 - துன்மார்க்கனுக்கு அநேக வேதனைகளுண்டு; கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்துகொள்ளும்.
English:- Many Are The Woes Of The Wicked, But The Lord 'S Unfailing Love Surrounds The Man Who Trusts In Him.
11 - நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; செம்மையான இருதயமுள்ளவர்களே, நீங்கள் எல்லாரும் ஆனந்த முழக்கமிடுங்கள்.
English:- Rejoice In The Lord And Be Glad, You Righteous; Sing, All You Who Are Upright In Heart!