பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 4 – Read Holy Bible Book Of Psalms Chapter 4 In Tamil With English Reference
1 - (நெகினோத்தென்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.) என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகையில் எனக்குச் செவிகொடும்; நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; எனக்கு இரங்கி, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்.
English:- Answer Me When I Call To You, O My Righteous God. Give Me Relief From My Distress; Be Merciful To Me And Hear My Prayer.
2 - மனுபுத்திரரே, எதுவரைக்கும் என் மகிமையை அவமானப்படுத்தி, வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள். (சேலா.)
English:- How Long, O Men, Will You Turn My Glory Into Shame ? How Long Will You Love Delusions And Seek False Gods ? Selah
3 - பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்; நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார்.
English:- Know That The Lord Has Set Apart The Godly For Himself; The Lord Will Hear When I Call To Him.
4 - நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா.)
English:- In Your Anger Do Not Sin; When You Are On Your Beds, Search Your Hearts And Be Silent. Selah
5 - நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள்.
English:- Offer Right Sacrifices And Trust In The Lord .
6 - எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்.
English:- Many Are Asking, "Who Can Show Us Any Good?" Let The Light Of Your Face Shine Upon Us, O Lord .
7 - அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிறகாலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்.
English:- You Have Filled My Heart With Greater Joy Than When Their Grain And New Wine Abound.
8 - சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.
English:- I Will Lie Down And Sleep In Peace, For You Alone, O Lord , Make Me Dwell In Safety.