பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 79 – Read Holy Bible Book Of Psalms Chapter 79 In Tamil With English Reference
1 - தேவனே, புறஜாதியார் உமது சுதந்தரத்தில் வந்து, உமது பரிசுத்த ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, எருசலேமை மண்மேடுகளாக்கினார்கள்.
English:- O God, The Nations Have Invaded Your Inheritance; They Have Defiled Your Holy Temple, They Have Reduced Jerusalem To Rubble.
2 - உமது ஊழியக்காரரின் பிரேதங்களை ஆகாயத்துப் பறவைகளுக்கும், உமது பரிசுத்தவான்களின் மாம்சத்தைப் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகக் கொடுத்தார்கள்.
English:- They Have Given The Dead Bodies Of Your Servants As Food To The Birds Of The Air, The Flesh Of Your Saints To The Beasts Of The Earth.
3 - எருசலேமைச் சுற்றிலும் அவர்களுடைய இரத்தத்தை தண்ணீரைப்போலச் சிந்தினார்கள்; அவர்களை அடக்கம்பண்ணுவாருமில்லை.
English:- They Have Poured Out Blood Like Water All Around Jerusalem, And There Is No One To Bury The Dead.
4 - எங்கள் அயலாருக்கு நிந்தையும், எங்கள் சுற்றுப்புறத்தாருக்குப் பரியாசமும் சக்கந்தமுமானோம்.
English:- We Are Objects Of Reproach To Our Neighbors, Of Scorn And Derision To Those Around Us.
5 - எதுவரைக்கும் கர்த்தாவே! நீர் என்றைக்கும் கோபமாயிருப்பீரோ? உம்முடைய எரிச்சல் அக்கினியைப்போல் எரியுமோ?
English:- How Long, O Lord ? Will You Be Angry Forever? How Long Will Your Jealousy Burn Like Fire?
6 - உம்மை அறியாத ஜாதிகள் உமது நாமத்தைத் தொழுதுகொள்ளாத ராஜ்யங்கள்மேலும், உம்முடைய உக்கிரத்தை ஊற்றிவிடும்.
English:- Pour Out Your Wrath On The Nations That Do Not Acknowledge You, On The Kingdoms That Do Not Call On Your Name;
7 - அவர்கள் யாக்கோபைப் பட்சித்து, அவன் குடியிருப்பைப் பாழாக்கினார்களே.
English:- For They Have Devoured Jacob And Destroyed His Homeland.
8 - பூர்வகாலத்து அக்கிரமங்களை எங்களுக்கு விரோதமாக நினையாதேயும்; உம்முடைய இரக்கங்கள் சீக்கிரமாய் எங்களுக்கு நேரிடுவதாக; நாங்கள் மிகவும் தாழ்த்தப்பட்டுப்போனோம்.
English:- Do Not Hold Against Us The Sins Of The Fathers; May Your Mercy Come Quickly To Meet Us, For We Are In Desperate Need.
9 - எங்களை இரட்சிக்கும் தேவனே, நீர் உமது நாமத்தின் மகிமையினிமித்தம் எங்களுக்கு உதவிசெய்து, உமது நாமத்தினிமித்தம் எங்களை விடுவித்து, எங்கள் பாவங்களை நிவிர்த்தியாக்கும்.
English:- Help Us, O God Our Savior, For The Glory Of Your Name; Deliver Us And Forgive Our Sins For Your Name's Sake.
10 - அவர்களுடைய தேவன் எங்கே என்று புறஜாதிகள் சொல்வானேன்? உமது ஊழியக்காரருடைய சிந்துண்ட இரத்தத்தின் பழிவாங்குதல் ஜாதிகளுக்குள்ளே எங்கள் கண்களுக்கு முன்பாக விளங்கும்படி செய்யும்.
English:- Why Should The Nations Say, "Where Is Their God?" Before Our Eyes, Make Known Among The Nations That You Avenge The Outpoured Blood Of Your Servants.
11 - கட்டுண்டவனுடைய பெருமூச்சு உமக்கு முன்பாக வரட்டும்; கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை உமது புயபலத்தினால் உயிரோடே காத்தருளும்.
English:- May The Groans Of The Prisoners Come Before You; By The Strength Of Your Arm Preserve Those Condemned To Die.
12 - ஆண்டவரே, எங்கள் அயலார் உம்மை நிந்தித்த நிந்தையை, ஏழத்தனையாக அவர்கள் மடியிலே திரும்பப்பண்ணும்.
English:- Pay Back Into The Laps Of Our Neighbors Seven Times The Reproach They Have Hurled At You, O Lord.
13 - அப்பொழுது, உம்முடைய ஜனங்களும் உம்முடைய மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நாங்கள் உம்மை என்றென்றைக்கும் புகழுவோம்; தலைமுறை தலைமுறையாக உமது துதியைச் சொல்லிவருவோம்.
English:- Then We Your People, The Sheep Of Your Pasture, Will Praise You Forever; From Generation To Generation We Will Recount Your Praise.