சங்கீதம் 84 – Psalms 84


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 84 – Read Holy Bible Book Of Psalms Chapter 84 In Tamil With English Reference


1 - சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!

English:- How Lovely Is Your Dwelling Place, O Lord Almighty!

சங்கீதம் 84-1 - Psalms 84-1சேனைகளின் கர்த்தாவே, உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!

2 - என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.

English:- My Soul Yearns, Even Faints, For The Courts Of The Lord ; My Heart And My Flesh Cry Out For The Living God.


3 - என் ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் கர்த்தாவே, உம்முடைய பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே.

English:- Even The Sparrow Has Found A Home, And The Swallow A Nest For Herself, Where She May Have Her Young- A Place Near Your Altar, O Lord Almighty, My King And My God.

சங்கீதம் 84-3 - Psalms 84-3என் ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் கர்த்தாவே, உம்முடைய பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கும் கூடும் கிடைத்ததே.

4 - உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள். (சேலா.)

English:- Blessed Are Those Who Dwell In Your House; They Are Ever Praising You. Selah

சங்கீதம் 84-4 - Psalms 84-4உம்முடைய வீட்டில் வாசமாயிருக்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் எப்பொழுதும் உம்மைத் துதித்துக்கொண்டிருப்பார்கள். (சேலா.)

5 - உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும் தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்.

English:- Blessed Are Those Whose Strength Is In You, Who Have Set Their Hearts On Pilgrimage.

சங்கீதம் 84-5 - Psalms 84-5உம்மிலே பெலன்கொள்ளுகிற மனுஷனும் தங்கள் இருதயங்களில் செவ்வையான வழிகளைக் கொண்டிருக்கிறவர்களும் பாக்கியவான்கள்.

6 - அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக்கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும்.

English:- As They Pass Through The Valley Of Baca, They Make It A Place Of Springs; The Autumn Rains Also Cover It With Pools.

சங்கீதம் 84-6 - Psalms 84-6அழுகையின் பள்ளத்தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கிக்கொள்ளுகிறார்கள்; மழையும் குளங்களை நிரப்பும்.

7 - அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்.

English:- They Go From Strength To Strength, Till Each Appears Before God In Zion.

சங்கீதம் 84-7 - Psalms 84-7அவர்கள் பலத்தின்மேல் பலம் அடைந்து, சீயோனிலே தேவசந்நிதியில் வந்து காணப்படுவார்கள்.

8 - சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, என் விண்ணப்பத்தை கேளும்; யாக்கோபின் தேவனே, செவிகொடும். (சேலா.)

English:- Hear My Prayer, O Lord God Almighty; Listen To Me, O God Of Jacob. Selah

சங்கீதம் 84-8 - Psalms 84-8சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, என் விண்ணப்பத்தை கேளும்; யாக்கோபின் தேவனே, செவிகொடும். (சேலா.)

9 - எங்கள் கேடகமாகிய தேவனே, கண்ணோக்கமாயிரும்; நீர் அபிஷேகம்பண்ணினவரின் முகத்தைப் பாரும்.

English:- Look Upon Our Shield, O God; Look With Favor On Your Anointed One.

சங்கீதம் 84-9 - Psalms 84-9எங்கள் கேடகமாகிய தேவனே, கண்ணோக்கமாயிரும்; நீர் அபிஷேகம்பண்ணினவரின் முகத்தைப் பாரும்.

10 - ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப்பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்.

English:- Better Is One Day In Your Courts Than A Thousand Elsewhere; I Would Rather Be A Doorkeeper In The House Of My God Than Dwell In The Tents Of The Wicked.


11 - தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.

English:- For The Lord God Is A Sun And Shield; The Lord Bestows Favor And Honor; No Good Thing Does He Withhold From Those Whose Walk Is Blameless.

சங்கீதம் 84-11 - Psalms 84-11தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.

12 - சேனைகளின் கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிற மனுஷன் பாக்கியவான்.

English:- O Lord Almighty, Blessed Is The Man Who Trusts In You.

சங்கீதம் 84-12 - Psalms 84-12சேனைகளின் கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிற மனுஷன் பாக்கியவான்.


Previous Chapter Next Chapter