பரிசுத்த வேதாகமம் சங்கீதம் அதிகாரம் 9 – Read Holy Bible Book Of Psalms Chapter 9 In Tamil With English Reference
1 - கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிப்பேன்; உம்முடைய அதிசயங்களையெல்லாம் விவரிப்பேன்.
English:- I Will Praise You, O Lord , With All My Heart; I Will Tell Of All Your Wonders.
2 - உம்மில் மகிழ்ந்து களிகூருவேன்; உன்னதமானவரே, உமது நாமத்தைக் கீர்த்தனம்பண்ணுவேன்.
English:- I Will Be Glad And Rejoice In You; I Will Sing Praise To Your Name, O Most High.
3 - என் சத்துருக்கள் பின்னாகத் திரும்பும்போது, உமது சமுகத்தில் அவர்கள் இடறுண்டு அழிந்துபோவார்கள்.
English:- My Enemies Turn Back; They Stumble And Perish Before You.
4 - நீர் என் நியாயத்தையும் என் வழக்கையும் தீர்த்து, நீதியுள்ள நியாயாதிபதியாய் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறீர்.
English:- For You Have Upheld My Right And My Cause; You Have Sat On Your Throne, Judging Righteously.
5 - ஜாதிகளைக் கடிந்துகொண்டு, துன்மார்க்கரை அழித்து, அவர்கள் நாமத்தை என்றென்றைக்கும் இல்லாதபடி குலைத்துப்போட்டீர்.
English:- You Have Rebuked The Nations And Destroyed The Wicked; You Have Blotted Out Their Name For Ever And Ever.
6 - சத்துருக்கள் என்றென்றைக்கும் பாழாக்கப்பட்டார்கள்; அவர்கள் பட்டணங்களை நிர்மூலமாக்கினீர்; அவர்கள் பேரும் அவர்களோடேகூட ஒழிந்துபோயிற்று.
English:- Endless Ruin Has Overtaken The Enemy, You Have Uprooted Their Cities; Even The Memory Of Them Has Perished.
7 - கர்த்தரோ என்றென்றைக்கும் இருப்பார்; தம்முடைய சிங்காசனத்தை நியாயத்தீர்ப்புக்கு ஆயத்தம்பண்ணினார்.
English:- The Lord Reigns Forever; He Has Established His Throne For Judgment.
8 - அவர் பூச்சக்கரத்தை நீதியாய் நியாயந்தீர்த்து, சகல ஜனங்களுக்கும் செம்மையாய் நீதிசெய்வார்.
English:- He Will Judge The World In Righteousness; He Will Govern The Peoples With Justice.
9 - சிறுமைப்பட்டவனுக்குக் கர்த்தர் அடைக்கலமானவர்; நெருக்கப்படுகிற காலங்களில் அவரே தஞ்சமானவர்.
English:- The Lord Is A Refuge For The Oppressed, A Stronghold In Times Of Trouble.
10 - கர்த்தாவே, உம்மைத் தேடுகிறவர்களை நீர் கைவிடுகிறதில்லை; ஆதலால், உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்.
English:- Those Who Know Your Name Will Trust In You, For You, Lord , Have Never Forsaken Those Who Seek You.
11 - சீயோனில் வாசமாயிருக்கிற கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணி, அவர் செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்.
English:- Sing Praises To The Lord , Enthroned In Zion; Proclaim Among The Nations What He Has Done.
12 - இரத்தப்பழிகளைக்குறித்து அவர் விசாரணை செய்யும்போது, அவைகளை நினைக்கிறார்; சிறுமைப்பட்டவர்களுடைய கூப்பிடுதலை மறவார்.
English:- For He Who Avenges Blood Remembers; He Does Not Ignore The Cry Of The Afflicted.
13 - மரணவாசல்களிலிருந்து என்னைத் தூக்கிவிடுகிற கர்த்தாவே, நான் உம்முடைய துதிகளையெல்லாம் சீயோன் குமாரத்தியின் வாசல்களில் விவரித்து, உம்முடைய இரட்சிப்பினால் களிகூரும்படிக்கு,
English:- O Lord , See How My Enemies Persecute Me! Have Mercy And Lift Me Up From The Gates Of Death,
14 - தேவரீர் எனக்கு இரங்கி, என்னைப் பகைக்கிறவர்களால் எனக்கு வரும் துன்பத்தை நோக்கிப்பாரும்.
English:- That I May Declare Your Praises In The Gates Of The Daughter Of Zion And There Rejoice In Your Salvation.
15 - ஜாதிகள் தாங்கள் வெட்டின குழியில் தாங்களே விழுந்தார்கள்; அவர்கள் மறைவாய் வைத்த வலையில் அவர்களுடைய காலே அகப்பட்டுக்கொண்டது.
English:- The Nations Have Fallen Into The Pit They Have Dug; Their Feet Are Caught In The Net They Have Hidden.
16 - கர்த்தர் தாம் செய்த நியாயத்தினால் அறியப்படுகிறார்; துன்மார்க்கன் தன் கைகளின் செய்கையிலே சிக்கிக்கொண்டான்.(இகாயோன்,சேலா.)
English:- The Lord Is Known By His Justice; The Wicked Are Ensnared By The Work Of Their Hands. Higgaion. Selah
17 - துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே தள்ளப்படுவார்கள்.
English:- The Wicked Return To The Grave, All The Nations That Forget God.
18 - எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை.
English:- But The Needy Will Not Always Be Forgotten, Nor The Hope Of The Afflicted Ever Perish.
19 - எழுந்தருளும் கர்த்தாவே, மனுஷன் பெலன் கொள்ளாதபடி செய்யும்; ஜாதிகள் உம்முடைய சமுகத்தில் நியாயந்தீர்க்கப்படக்கடவர்கள்.
English:- Arise, O Lord , Let Not Man Triumph; Let The Nations Be Judged In Your Presence.
20 - ஜாதிகள் தங்களை மனுஷரென்று அறியும்படிக்கு, அவர்களுக்குப் பயமுண்டாக்கும், கர்த்தாவே. (சேலா.)
English:- Strike Them With Terror, O Lord ; Let The Nations Know They Are But Men. Selah