பரிசுத்த வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் அதிகாரம் 4 – Read Holy Bible Book Of Revelation Chapter 4 In Tamil With English Reference
1 - இவைகளுக்குப்பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது.
English:- After This I Looked, And There Before Me Was A Door Standing Open In Heaven. And The Voice I Had First Heard Speaking To Me Like A Trumpet Said, "Come Up Here, And I Will Show You What Must Take Place After This."
2 - உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார்.
English:- At Once I Was In The Spirit, And There Before Me Was A Throne In Heaven With Someone Sitting On It.
3 - வீற்றிருந்தவர், பார்வைக்கு வச்சிரக்கல்லுக்கும் பதுமராகத்துக்கும் ஒப்பாயிருந்தார்; அந்தச் சிங்காசனத்தைச்சுற்றி ஒரு வானவில்லிருந்தது; அதுபார்வைக்கு மரகதம்போல தோன்றிற்று.
English:- And The One Who Sat There Had The Appearance Of Jasper And Carnelian. A Rainbow, Resembling An Emerald, Encircled The Throne.
4 - அந்தச் சிங்காசனத்தைச் சூழ இருபத்துநான்கு சிங்காசனங்களிருந்தன; இருபத்துநான்கு மூப்பர்கள் வெண்வஸ்திரந்தரித்து, தங்கள் சிரசுகளில் பொன்முடி சூடி அந்தச் சிங்காசனங்களின்மேல் உட்கார்ந்திருக்கக்கண்டேன்.
English:- Surrounding The Throne Were Twenty-four Other Thrones, And Seated On Them Were Twenty-four Elders. They Were Dressed In White And Had Crowns Of Gold On Their Heads.
5 - அந்தச் சிங்காசனத்திலிருந்து மின்னல்களும் இடிமுழக்கங்களும் சத்தங்களும் புறப்பட்டன; தேவனுடைய ஏழு ஆவிகளாகிய ஏழு அக்கினி தீபங்கள் சிங்காசனத்திற்கு முன்பாக எரிந்துகொண்டிருந்தன.
English:- From The Throne Came Flashes Of Lightning, Rumblings And Peals Of Thunder. Before The Throne, Seven Lamps Were Blazing. These Are The Seven Spirits Of God.
6 - அந்தச் சிங்காசனத்திற்கு முன்பாகப் பளிங்குக்கொப்பான கண்ணாடிக்கடலிருந்தது; அந்தச் சிங்காசனத்தின் மத்தியிலும் அந்தச் சிங்காசனத்தைச் சுற்றிலும் நான்கு ஜீவன்களிருந்தன, அவைகள் முன்புறத்திலும் பின்புறத்திலும் கண்களால் நிறைந்திருந்தன.
English:- Also Before The Throne There Was What Looked Like A Sea Of Glass, Clear As Crystal.
7 - முதலாம் ஜீவன் சிங்கத்திற்கொப்பாகவும், இரண்டாம் ஜீவன் காளைக்கொப்பாகவும், மூன்றாம் ஜீவன் மனுஷமுகம்போன்ற முகமுள்ளதாகவும், நான்காம் ஜீவன் பறக்கிற கழுகுக்கு ஒப்பாகவுமிருந்தன.
English:- In The Center, Around The Throne, Were Four Living Creatures, And They Were Covered With Eyes, In Front And In Back. The First Living Creature Was Like A Lion, The Second Was Like An Ox, The Third Had A Face Like A Man, The Fourth Was Like A Flying Eagle.
8 - அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.
English:- Each Of The Four Living Creatures Had Six Wings And Was Covered With Eyes All Around, Even Under His Wings. Day And Night They Never Stop Saying: "Holy, Holy, Holy Is The Lord God Almighty, Who Was, And Is, And Is To Come."
9 - மேலும், சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவருக்கு அந்த ஜீவன்கள், மகிமையையும் கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்தும்போது,
English:- Whenever The Living Creatures Give Glory, Honor And Thanks To Him Who Sits On The Throne And Who Lives For Ever And Ever,
10 - இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்குமுன்பாக வைத்து:
English:- The Twenty-four Elders Fall Down Before Him Who Sits On The Throne, And Worship Him Who Lives For Ever And Ever. They Lay Their Crowns Before The Throne And Say:
11 - கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர், நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்.
English:- "You Are Worthy, Our Lord And God, To Receive Glory And Honor And Power, For You Created All Things, And By Your Will They Were Created And Have Their Being."