பரிசுத்த வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் அதிகாரம் 8 – Read Holy Bible Book Of Revelation Chapter 8 In Tamil With English Reference
1 - அவர் ஏழாம் முத்திரையை உடைத்தபோது, பரலோகத்தில் ஏறக்குறைய அரைமணிநேரமளவும் அமைதல் உண்டாயிற்று.
English:- When He Opened The Seventh Seal, There Was Silence In Heaven For About Half An Hour.
2 - பின்பு, தேவனுக்குமுன்பாக நிற்கிற ஏழு தூதர்களையுங் கண்டேன், அவர்களுக்கு ஏழு எக்காளங்கள் கொடுக்கப்பட்டது.
English:- And I Saw The Seven Angels Who Stand Before God, And To Them Were Given Seven Trumpets.
3 - வேறொரு தூதனும் வந்து, தூபங்காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துப் பலிபீடத்தின் படியிலே நின்றான்; சிங்காசனத்திற்குமுன்பாக இருந்த பொற்பீடத்தின்மேல் சகல பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தும்படி மிகுந்த தூபவர்க்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது.
English:- Another Angel, Who Had A Golden Censer, Came And Stood At The Altar. He Was Given Much Incense To Offer, With The Prayers Of All The Saints, On The Golden Altar Before The Throne.
4 - அப்படியே பரிசுத்தவான்களுடைய ஜெபங்களோடும் செலுத்தப்பட்ட தூபவர்க்கத்தின் புகையானது தூதனுடைய கையிலிருந்து தேவனுக்குமுன்பாக எழும்பிற்று.
English:- The Smoke Of The Incense, Together With The Prayers Of The Saints, Went Up Before God From The Angel's Hand.
5 - பின்பு, அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதைப் பலிபீடத்து நெருப்பினால் நிரப்பி, பூமியிலே கொட்டினான்; உடனே சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமியதிர்ச்சியும் உண்டாயின.
English:- Then The Angel Took The Censer, Filled It With Fire From The Altar, And Hurled It On The Earth; And There Came Peals Of Thunder, Rumblings, Flashes Of Lightning And An Earthquake.
6 - அப்பொழுது, ஏழு எக்காளங்களையுடைய ஏழு தூதர்கள் எக்காளம் ஊதுகிறதற்குத் தங்களை ஆயத்தப்படுத்தினார்கள்.
English:- Then The Seven Angels Who Had The Seven Trumpets Prepared To Sound Them.
7 - முதலாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது இரத்தங்கலந்த கல்மழையும் அக்கினியும் உண்டாகி, பூமியிலே கொட்டப்பட்டது; அதினால் மரங்களில் மூன்றிலொருபங்கு வெந்துபோயிற்று, பசும்புல்லெல்லாம் எரிந்துபோயிற்று.
English:- The First Angel Sounded His Trumpet, And There Came Hail And Fire Mixed With Blood, And It Was Hurled Down Upon The Earth. A Third Of The Earth Was Burned Up, A Third Of The Trees Were Burned Up, And All The Green Grass Was Burned Up.
8 - இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிற பெரிய மலைபோன்றதொன்று சமுத்திரத்திலே போடப்பட்டது. அதினால் சமுத்திரத்தில் மூன்றிலொருபங்கு இரத்தமாயிற்று.
English:- The Second Angel Sounded His Trumpet, And Something Like A Huge Mountain, All Ablaze, Was Thrown Into The Sea. A Third Of The Sea Turned Into Blood,
9 - சமுத்திரத்திலிருந்த ஜீவனுள்ள சிருஷ்டிகளில் மூன்றிலொருபங்கு செத்துப்போயிற்று; கப்பல்களில் மூன்றிலொருபங்கு சேதமாயிற்று.
English:- A Third Of The Living Creatures In The Sea Died, And A Third Of The Ships Were Destroyed.
10 - மூன்றாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது ஒரு பெரிய நட்சத்திரம் தீவட்டியைப்போல எரிந்து, வானத்திலிருந்து விழுந்தது; அது ஆறுகளில் மூன்றிலொருபங்கின்மேலும், நீருற்றுகளின்மேலும் விழுந்தது.
English:- The Third Angel Sounded His Trumpet, And A Great Star, Blazing Like A Torch, Fell From The Sky On A Third Of The Rivers And On The Springs Of Water--
11 - அந்த நட்சத்திரத்திற்கு எட்டியென்று பெயர்; அதினால் தண்ணீரில் மூன்றிலொருபங்கு எட்டியைப்போலக் கசப்பாயிற்று; இப்படிக் கசப்பான தண்ணீரினால் மனுஷரில் அநேகர் செத்தார்கள்.
English:- The Name Of The Star Is Wormwood. A Third Of The Waters Turned Bitter, And Many People Died From The Waters That Had Become Bitter.
12 - நான்காம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது சூரியனில் மூன்றிலொரு பங்கும், சந்திரனில் மூன்றிலொருபங்கும், நட்சத்திரங்களில் மூன்றிலொருபங்கும் சேதப்பட்டது, அவற்றவற்றில் மூன்றிலொருபங்கு இருளடைந்தது; பகலிலும் மூன்றிலொருபங்கு பிரகாசமில்லாமற்போயிற்று, இரவிலும் அப்படியேயாயிற்று.
English:- The Fourth Angel Sounded His Trumpet, And A Third Of The Sun Was Struck, A Third Of The Moon, And A Third Of The Stars, So That A Third Of Them Turned Dark. A Third Of The Day Was Without Light, And Also A Third Of The Night.
13 - பின்பு, ஒரு தூதன் வானத்தின் மத்தியிலே பறந்துவரக்கண்டேன்; அவன் மகா சத்தமிட்டு: இனி எக்காளம் ஊதப்போகிற மற்ற மூன்று தூதருடைய எக்காள சத்தங்களினால் பூமியில் குடியிருக்கிறவர்களுக்கு ஐயோ, ஐயோ, ஐயோ (ஆபத்துவரும்) என்று சொல்லக்கேட்டேன்.
English:- As I Watched, I Heard An Eagle That Was Flying In Midair Call Out In A Loud Voice: "Woe! Woe! Woe To The Inhabitants Of The Earth, Because Of The Trumpet Blasts About To Be Sounded By The Other Three Angels!"