பரிசுத்த வேதாகமம் ரோமர் அதிகாரம் 9 – Read Holy Bible Book Of Romans Chapter 9 In Tamil With English Reference
1 - எனக்கு மிகுந்த துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது;
English:- I Speak The Truth In Christ--i Am Not Lying, My Conscience Confirms It In The Holy Spirit--
2 - நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவுக்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்று பரிசுத்த ஆவிக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாயிருக்கிறது.
English:- I Have Great Sorrow And Unceasing Anguish In My Heart.
3 - மாம்சத்தின்படி என் இனத்தாராகிய என் சகோதரருக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாகவேண்டுமென்று விரும்புவேனே.
English:- For I Could Wish That I Myself Were Cursed And Cut Off From Christ For The Sake Of My Brothers, Those Of My Own Race,
4 - அவர்கள் இஸ்ரவேலரே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே;
English:- The People Of Israel. Theirs Is The Adoption As Sons; Theirs The Divine Glory, The Covenants, The Receiving Of The Law, The Temple Worship And The Promises.
5 - பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும்மேலான தேவன். ஆமென்.
English:- Theirs Are The Patriarchs, And From Them Is Traced The Human Ancestry Of Christ, Who Is God Over All, Forever Praised! Amen.
6 - தேவவசனம் அவமாய்ப் போயிற்றென்று சொல்லக்கூடாது; ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் இஸ்ரவேலரல்லவே.
English:- It Is Not As Though God's Word Had Failed. For Not All Who Are Descended From Israel Are Israel.
7 - அவர்கள் ஆபிரகாமின் சந்ததியாரானாலும் எல்லாரும் பிள்ளைகளல்லவே; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்குமென்று சொல்லியிருக்கிறதே.
English:- Nor Because They Are His Descendants Are They All Abraham's Children. On The Contrary, "It Is Through Isaac That Your Offspring Will Be Reckoned."
8 - அதெப்படியென்றால், மாம்சத்தின்படி பிள்ளைகளானவர்கள் தேவனுடைய பிள்ளைகளல்ல, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகளானவர்களே அந்தச் சந்ததி என்றெண்ணப்படுகிறார்கள்.
English:- In Other Words, It Is Not The Natural Children Who Are God's Children, But It Is The Children Of The Promise Who Are Regarded As Abraham's Offspring.
9 - அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே வருவேன், அப்பொழுது சாராள் ஒரு குமாரனைப் பெறுவாள் என்பதே.
English:- For This Was How The Promise Was Stated: "At The Appointed Time I Will Return, And Sarah Will Have A Son."
10 - இதுவுமல்லாமல், நம்முடைய பிதாவாகிய ஈசாக்கு என்னும் ஒருவனாலே ரெபெக்காள் கர்ப்பவதியானபோது,
English:- Not Only That, But Rebekah's Children Had One And The Same Father, Our Father Isaac.
11 - பிள்ளைகள் இன்னும் பிறவாமலும், நல்வினை தீவினை ஒன்றும் செய்யாமலுமிருக்கையில், தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படியிருக்கிற அவருடைய தீர்மானம் கிரியைகளினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படிக்கு,
English:- Yet, Before The Twins Were Born Or Had Done Anything Good Or Bad--in Order That God's Purpose In Election Might Stand:
12 - மூத்தவன் இளையவனுக்கு ஊழியஞ்செய்வான் என்று அவளுடனே சொல்லப்பட்டது.
English:- Not By Works But By Him Who Calls--she Was Told, "The Older Will Serve The Younger."
13 - அப்படியே, யாக்கோபைச் சிநேகித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது.
English:- Just As It Is Written: "Jacob I Loved, But Esau I Hated."
14 - ஆகையால் நாம் என்ன சொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே.
English:- What Then Shall We Say? Is God Unjust? Not At All!
15 - அவர் மோசேயை நோக்கி: எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன் என்றார்.
English:- For He Says To Moses, "I Will Have Mercy On Whom I Have Mercy, And I Will Have Compassion On Whom I Have Compassion."
16 - ஆகையால் விரும்புகிறவனாலுமல்ல, ஓடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம்.
English:- It Does Not, Therefore, Depend On Man's Desire Or Effort, But On God's Mercy.
17 - மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடத்தில் காண்பிக்கும்படியாகவும், என்னுடைய நாமம் பூமியில் எங்கும் பிரஸ்தாபமாகும்படியாகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனுடனே சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது.
English:- For The Scripture Says To Pharaoh: "I Raised You Up For This Very Purpose, That I Might Display My Power In You And That My Name Might Be Proclaimed In All The Earth."
18 - ஆதலால் எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாயிருக்கிறார், எவனைக் கடினப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார்.
English:- Therefore God Has Mercy On Whom He Wants To Have Mercy, And He Hardens Whom He Wants To Harden.
19 - இப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம்பிடிக்கிறார்? அவர் சித்தத்திற்கு எதிர்த்துநிற்பவன் யார்? என்று என்னுடனே சொல்லுவாய்.
English:- One Of You Will Say To Me: "Then Why Does God Still Blame Us? For Who Resists His Will?"
20 - அப்படியானால், மனுஷனே, தேவனோடு எதிர்த்துத் தர்க்கிக்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட வஸ்து உருவாக்கினவனை நோக்கி: நீ என்னை ஏன் இப்படி உண்டாக்கினாயென்று சொல்லலாமா?
English:- But Who Are You, O Man, To Talk Back To God? "Shall What Is Formed Say To Him Who Formed It, 'Why Did You Make Me Like This?' "
21 - மிதியிட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்துக்கும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்துக்கும் பண்ணுகிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?
English:- Does Not The Potter Have The Right To Make Out Of The Same Lump Of Clay Some Pottery For Noble Purposes And Some For Common Use?
22 - தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும்,
English:- What If God, Choosing To Show His Wrath And Make His Power Known, Bore With Great Patience The Objects Of His Wrath--prepared For Destruction?
23 - தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருந்தாரானால் உனக்கென்ன?
English:- What If He Did This To Make The Riches Of His Glory Known To The Objects Of His Mercy, Whom He Prepared In Advance For Glory--
24 - அவர் யூதரிலிருந்துமாத்திரமல்ல, புறஜாதிகளிலுமிருந்து நம்மை அழைத்திருக்கிறாரே.
English:- Even Us, Whom He Also Called, Not Only From The Jews But Also From The Gentiles?
25 - அந்தப்படி: எனக்கு ஜனங்களல்லாதவர்களை என்னுடைய ஜனங்கள் என்றும், சிநேகிக்கப்படாதிருந்தவளைச் சிநேகிக்கப்பட்டவள் என்றும் சொல்லி அழைப்பேன்.
English:- As He Says In Hosea: "I Will Call Them 'My People' Who Are Not My People; And I Will Call Her 'My Loved One' Who Is Not My Loved One,"
26 - நீங்கள் என்னுடைய ஜனங்களல்லவென்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் என்னப்படுவார்கள் என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது.
English:- And, "It Will Happen That In The Very Place Where It Was Said To Them, 'You Are Not My People,' They Will Be Called 'Sons Of The Living God.' "
27 - அல்லாமலும் இஸ்ரவேல் புத்திரருடைய இலக்கம் சமுத்திரத்தின் மணலத்தனையாயிருந்தாலும், மீதியாயிருப்பவர்கள் மாத்திரம் இரட்சிக்கப்படுவார்களென்றும்;
English:- Isaiah Cries Out Concerning Israel: "Though The Number Of The Israelites Be Like The Sand By The Sea, Only The Remnant Will Be Saved.
28 - அவர் நீதியோடே சீக்கிரமாய்த் தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார்; கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார் என்றும் ஏசாயா இஸ்ரவேலரைக்குறித்துச் சொல்லுகிறான்.
English:- For The Lord Will Carry Out His Sentence On Earth With Speed And Finality."
29 - அல்லாமலும் ஏசாயா முன்னே சொன்னபடி: சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளே ஒரு சந்ததியை மீதியாக வைக்காதிருந்தாரானால் நாம் சோதோமைப்போலாகி கொமோராவுக்கு ஒத்திருப்போம்.
English:- It Is Just As Isaiah Said Previously: "Unless The Lord Almighty Had Left Us Descendants, We Would Have Become Like Sodom, We Would Have Been Like Gomorrah."
30 - இப்படியிருக்க நாம் என்னசொல்லுவோம்? நீதியைத் தேடாத புறஜாதியார் நீதியை அடைந்தார்கள்; அது விசுவாசத்தினாலாகும் நீதியே.
English:- What Then Shall We Say? That The Gentiles, Who Did Not Pursue Righteousness, Have Obtained It, A Righteousness That Is By Faith;
31 - நீதிப்பிரமாணத்தைத் தேடின இஸ்ரவேலரோ நீதிப்பிரமாணத்தை அடையவில்லை.
English:- But Israel, Who Pursued A Law Of Righteousness, Has Not Attained It.
32 - என்னத்தினாலென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேடினபடியால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள்.
English:- Why Not? Because They Pursued It Not By Faith But As If It Were By Works. They Stumbled Over The "Stumbling Stone."
33 - இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடத்தில் விசுவாசமாயிருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.
English:- As It Is Written: "See, I Lay In Zion A Stone That Causes Men To Stumble And A Rock That Makes Them Fall, And The One Who Trusts In Him Will Never Be Put To Shame."