பரிசுத்த வேதாகமம் சகரியா அதிகாரம் 2 – Read Holy Bible Book Of Zechariah Chapter 2 In Tamil With English Reference
1 - நான் என் கண்களை ஏறெடுத்துப் பார்த்தபோது, இதோ, தன் கையிலே அளவுநூல் பிடித்திருந்த ஒரு புருஷனைக் கண்டேன்.
English:- Then I Looked Up-and There Before Me Was A Man With A Measuring Line In His Hand!
2 - நீர் எவ்விடத்துக்குப் போகிறீர் என்று கேட்டேன்; அதற்கு அவர்: எருசலேமின் அகலம் இவ்வளவு என்றும் அதின் நீளம் இவ்வளவு என்றும் அறியும்படி அதை அளக்கிறதற்குப் போகிறேன் என்றார்.
English:- I Asked, "Where Are You Going?" He Answered Me, "To Measure Jerusalem, To Find Out How Wide And How Long It Is."
3 - இதோ, என்னோடேபேசின தூதன் புறப்பட்டபோது, வேறொரு தூதன் அவரைச் சந்திக்கும்படிப் புறப்பட்டுவந்தான்.
English:- Then The Angel Who Was Speaking To Me Left, And Another Angel Came To Meet Him
4 - இவனை அவர் நோக்கி: நீ ஓடி இந்த வாலிபனிடத்தில் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் தன் நடுவிலே கூடும் மனுஷரின் திரளினாலும் மிருகஜீவன்களின் திரளினாலும் மதிலில்லாத பட்டணங்கள்போல் வாசஸ்தலமாகும்.
English:- And Said To Him: "Run, Tell That Young Man, 'Jerusalem Will Be A City Without Walls Because Of The Great Number Of Men And Livestock In It.
5 - நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
English:- And I Myself Will Be A Wall Of Fire Around It,' Declares The Lord , 'And I Will Be Its Glory Within.'
6 - ஓகோ, நீங்கள் எழும்பி வடதேசத்திலிருந்து ஓடிவாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஆகாயத்து நான்கு திசைகளிலும் உங்களை நான் சிதறப்பண்ணினேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
English:- "Come! Come! Flee From The Land Of The North," Declares The Lord , "For I Have Scattered You To The Four Winds Of Heaven," Declares The Lord .
7 - பாபிலோன் குமாரத்தியினிடத்தில் குடியிருக்கிற சீயோனே, உன்னை விடுவித்துக்கொள்.
English:- "Come, O Zion! Escape, You Who Live In The Daughter Of Babylon!"
8 - பிற்பாடு மகிமையுண்டாகுமென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்களைக் கொள்ளையிட்ட ஜாதிகளிடத்துக்கு என்னை அனுப்பினார்; உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்.
English:- For This Is What The Lord Almighty Says: "After He Has Honored Me And Has Sent Me Against The Nations That Have Plundered You-for Whoever Touches You Touches The Apple Of His Eye-
9 - இதோ, நான் என் கையை அவர்களுக்கு விரோதமாக அசைப்பேன்; அதினால் அவர்கள் தங்கள் அடிமைகளுக்குக் கொள்ளையாவார்கள்; அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை அனுப்பினாரென்று அறிவீர்கள்.
English:- I Will Surely Raise My Hand Against Them So That Their Slaves Will Plunder Them. Then You Will Know That The Lord Almighty Has Sent Me.
10 - சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
English:- "Shout And Be Glad, O Daughter Of Zion. For I Am Coming, And I Will Live Among You," Declares The Lord .
11 - அந்நாளிலே அநேகம் ஜாதிகள் கர்த்தரைச் சேர்ந்து என் ஜனமாவார்கள்; நான் உன் நடுவில் வாசமாயிருப்பேன்; அப்பொழுது சேனைகளின் கர்த்தர் என்னை உன்னிடத்தில் அனுப்பினாரென்று அறிவாய்.
English:- "Many Nations Will Be Joined With The Lord In That Day And Will Become My People. I Will Live Among You And You Will Know That The Lord Almighty Has Sent Me To You.
12 - கர்த்தர் பரிசுத்த தேசத்திலே யூதாவாகிய தமது பங்கைச் சுதந்தரித்து, திரும்பவும் எருசலேமைத் தெரிந்துகொள்வார்.
English:- The Lord Will Inherit Judah As His Portion In The Holy Land And Will Again Choose Jerusalem.
13 - மாம்சமான சகலமான பேர்களே, கர்த்தருக்கு முன்பாக மௌனமாயிருங்கள்; அவர் தமது பரிசுத்த வாசஸ்தலத்திலிருந்து எழுந்தருளினார் என்று சொல் என்றார்.
English:- Be Still Before The Lord , All Mankind, Because He Has Roused Himself From His Holy Dwelling."