சகரியா 3 – Zechariah 3


Previous Chapter Next Chapter

பரிசுத்த வேதாகமம் சகரியா அதிகாரம் 3 – Read Holy Bible Book Of Zechariah Chapter 3 In Tamil With English Reference


1 - அவர் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவை எனக்குக் காண்பித்தார்; அவன் கர்த்தருடைய தூதனுக்கு முன்பாக நின்றான்; சாத்தான் அவனுக்கு விரோதஞ்செய்ய அவன் வலதுபக்கத்திலே நின்றான்.

English:- Then He Showed Me Joshua The High Priest Standing Before The Angel Of The Lord , And Satan Standing At His Right Side To Accuse Him.

சகரியா 3-1 - Zechariah 3-1அவர் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவை எனக்குக் காண்பித்தார்; அவன் கர்த்தருடைய தூதனுக்கு முன்பாக நின்றான்; சாத்தான் அவனுக்கு விரோதஞ்செய்ய அவன் வலதுபக்கத்திலே நின்றான்.

2 - அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; சாத்தானே, எருசலேமைத் தெரிந்துகொண்ட கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; இவன் அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா என்றார்.

English:- The Lord Said To Satan, "The Lord Rebuke You, Satan! The Lord , Who Has Chosen Jerusalem, Rebuke You! Is Not This Man A Burning Stick Snatched From The Fire?"


3 - யோசுவாவோவெனில் அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய்த் தூதனுக்கு முன்பாக நின்றிருந்தான்.

English:- Now Joshua Was Dressed In Filthy Clothes As He Stood Before The Angel.

சகரியா 3-3 - Zechariah 3-3யோசுவாவோவெனில் அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய்த் தூதனுக்கு முன்பாக நின்றிருந்தான்.

4 - அவர் தமக்கு முன்பாக நிற்கிறவர்களை நோக்கி: இவன்மேல் இருக்கிற அழுக்கு வஸ்திரங்களைக் களைந்துபோடுங்கள் என்றார்; பின்பு அவனை நோக்கி: பார் நான் உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச்செய்து, உனக்குச் சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன் என்றார்.

English:- The Angel Said To Those Who Were Standing Before Him, "Take Off His Filthy Clothes." Then He Said To Joshua, "See, I Have Taken Away Your Sin, And I Will Put Rich Garments On You."

சகரியா 3-4 - Zechariah 3-4அவர் தமக்கு முன்பாக நிற்கிறவர்களை நோக்கி: இவன்மேல் இருக்கிற அழுக்கு வஸ்திரங்களைக் களைந்துபோடுங்கள் என்றார்; பின்பு அவனை நோக்கி: பார் நான் உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச்செய்து, உனக்குச் சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன் என்றார்.

5 - அவன் சிரசின்மேல் சுத்தமான பாகையை வைப்பார்களாக என்றார்; அப்பொழுது சுத்தமான பாகையை அவன் சிரசின்மேல் வைத்து, அவனுக்கு வஸ்திரங்களைத் தரிப்பித்தார்கள். கர்த்தருடைய தூதன் அங்கே நின்றார்.

English:- Then I Said, "Put A Clean Turban On His Head." So They Put A Clean Turban On His Head And Clothed Him, While The Angel Of The Lord Stood By.

சகரியா 3-5 - Zechariah 3-5அவன் சிரசின்மேல் சுத்தமான பாகையை வைப்பார்களாக என்றார்; அப்பொழுது சுத்தமான பாகையை அவன் சிரசின்மேல் வைத்து, அவனுக்கு வஸ்திரங்களைத் தரிப்பித்தார்கள். கர்த்தருடைய தூதன் அங்கே நின்றார்.

6 - கர்த்தருடைய தூதன் யோசுவாவுக்குச் சாட்சியாக:

English:- The Angel Of The Lord Gave This Charge To Joshua:

சகரியா 3-6 - Zechariah 3-6கர்த்தருடைய தூதன் யோசுவாவுக்குச் சாட்சியாக:

7 - சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நீ என் வழிகளில் நடந்து என் காவலைக் காத்தால், நீ என் ஆலயத்தில் நியாயம் விசாரிப்பாய்; என் பிராகாரங்களையும் காவல்காப்பாய்; இங்கே நிற்கிறவர்களுக்குள்ளே உலாவுகிறதற்கு இடம் நான் உனக்குக் கட்டளையிடுவேன்.

English:- "This Is What The Lord Almighty Says: 'If You Will Walk In My Ways And Keep My Requirements, Then You Will Govern My House And Have Charge Of My Courts, And I Will Give You A Place Among These Standing Here.

சகரியா 3-7 - Zechariah 3-7சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நீ என் வழிகளில் நடந்து என் காவலைக் காத்தால், நீ என் ஆலயத்தில் நியாயம் விசாரிப்பாய்; என் பிராகாரங்களையும் காவல்காப்பாய்; இங்கே நிற்கிறவர்களுக்குள்ளே உலாவுகிறதற்கு இடம் நான் உனக்குக் கட்டளையிடுவேன்.

8 - இப்போதும், பிரதான ஆசாரியனாகிய யோசுவாவே, நீ கேள்; உனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிற உன் தோழரும் கேட்கக்கடவர்கள்; இவர்கள் அடையாளமாயிருக்கிற புருஷர்; இதோ, கிளை என்னப்பட்டவராகிய என் தாசனை நான் வரப்பண்ணுவேன்.

English:- " 'Listen, O High Priest Joshua And Your Associates Seated Before You, Who Are Men Symbolic Of Things To Come: I Am Going To Bring My Servant, The Branch.

சகரியா 3-8 - Zechariah 3-8இப்போதும், பிரதான ஆசாரியனாகிய யோசுவாவே, நீ கேள்; உனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிற உன் தோழரும் கேட்கக்கடவர்கள்; இவர்கள் அடையாளமாயிருக்கிற புருஷர்; இதோ, கிளை என்னப்பட்டவராகிய என் தாசனை நான் வரப்பண்ணுவேன்.

9 - இதோ, நான் யோசுவாவுக்கு முன்பாக வைத்த கல்; இந்த ஒரே கல்லின்மேல் ஏழு கண்களும் வைக்கப்பட்டிருக்கிறது; இதோ, நான் அதின் சித்திரவேலையை நிறைவேற்றி இந்ததேசத்தில் அக்கிரமத்தை ஒரேநாளிலே நீக்கிப்போடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

English:- See, The Stone I Have Set In Front Of Joshua! There Are Seven Eyes On That One Stone, And I Will Engrave An Inscription On It,' Says The Lord Almighty, 'And I Will Remove The Sin Of This Land In A Single Day.

சகரியா 3-9 - Zechariah 3-9இதோ, நான் யோசுவாவுக்கு முன்பாக வைத்த கல்; இந்த ஒரே கல்லின்மேல் ஏழு கண்களும் வைக்கப்பட்டிருக்கிறது; இதோ, நான் அதின் சித்திரவேலையை நிறைவேற்றி இந்ததேசத்தில் அக்கிரமத்தை ஒரேநாளிலே நீக்கிப்போடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

10 - அந்நாளிலே நீங்கள் ஒருவரையொருவர் திராட்சச்செடியின் கீழும் அத்திமரத்தின்கீழும் வரவழைப்பீர்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

English:- " 'In That Day Each Of You Will Invite His Neighbor To Sit Under His Vine And Fig Tree,' Declares The Lord Almighty."


Previous Chapter Next Chapter