பரிசுத்த வேதாகமம் சகரியா அதிகாரம் 7 – Read Holy Bible Book Of Zechariah Chapter 7 In Tamil With English Reference
1 - தரியு ராஜா அரசாண்ட நாலாம் வருஷம், கிஸ்லே என்னும் ஒன்பதாம் மாதம், நாலாந்தேதியிலே, சகரியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாயிற்று.
English:- In The Fourth Year Of King Darius, The Word Of The Lord Came To Zechariah On The Fourth Day Of The Ninth Month, The Month Of Kislev.
2 - கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும்,
English:- The People Of Bethel Had Sent Sharezer And Regem-melech, Together With Their Men, To Entreat The Lord
3 - நாங்கள் இத்தனை வருஷம்வரையிலே செய்ததுபோல ஐந்தாம் மாதத்திலே அழுது ஒடுக்கத்திலிருக்கவேண்டுமோ என்று சேனைகளுடைய கர்த்தரின் ஆலயத்திலிருக்கும் ஆசாரியரிடத்திலும் தீர்க்கதரிசிகளிடத்திலும் கேட்கவும், சரேத்சேரும் ரெகெம்மெலேகும் அவனுடைய மனுஷரும் தேவனுடைய ஆலயத்துக்கு அனுப்பப்பட்டார்கள்.
English:- By Asking The Priests Of The House Of The Lord Almighty And The Prophets, "Should I Mourn And Fast In The Fifth Month, As I Have Done For So Many Years?"
4 - அப்பொழுது சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
English:- Then The Word Of The Lord Almighty Came To Me:
5 - நீ தேசத்தின் எல்லா ஜனத்தோடும் ஆசாரியர்களோடும் சொல்லவேண்டியது என்னவென்றால், நீங்கள் இந்த எழுபது வருஷமாக ஐந்தாம் மாதத்திலும் ஏழாம் மாதத்திலும் உபவாசம்பண்ணி துக்கங்கொண்டாடினபோது நீங்கள் எனக்கென்றுதானா உபவாசம்பண்ணினீர்கள்.
English:- "Ask All The People Of The Land And The Priests, 'When You Fasted And Mourned In The Fifth And Seventh Months For The Past Seventy Years, Was It Really For Me That You Fasted?
6 - நீங்கள் புசிக்கிறபோதும் குடிக்கிறபோதும் உங்களுக்கென்றல்லவா புசிக்கிறீர்கள்? உங்களுக்கென்றல்லவா குடிக்கிறீர்கள்?
English:- And When You Were Eating And Drinking, Were You Not Just Feasting For Yourselves?
7 - எருசலேமும் அதைச் சுற்றிலுமிருந்த பட்டணங்களும் குடிநிறைந்து சுகமாயிருந்தகாலத்திலும், தெற்குநாடும் சமபூமியும் குடியேறியிருந்த காலத்திலும் முன்னிருந்த தீர்க்கதரிசிகளைக்கொண்டு கர்த்தர் கூறின வார்த்தைகள் இவைகள் அல்லவோ என்று சொல் என்றார்.
English:- Are These Not The Words The Lord Proclaimed Through The Earlier Prophets When Jerusalem And Its Surrounding Towns Were At Rest And Prosperous, And The Negev And The Western Foothills Were Settled?' "
8 - பின்பு கர்த்தருடைய வார்த்தை சகரியாவுக்கு உண்டாகி, அவர்:
English:- And The Word Of The Lord Came Again To Zechariah:
9 - சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், நீங்கள் உண்மையாய் நியாயந்தீர்த்து, அவனவன் தன்தன் சகோதரனுக்குத் தயவும் இரக்கமும் செய்து,
English:- "This Is What The Lord Almighty Says: 'Administer True Justice; Show Mercy And Compassion To One Another.
10 - விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் பரதேசியையும் சிறுமையானவனையும் ஒடுக்காமலும், உங்களில் ஒருவனும் தன் சகோதரனுக்கு விரோதமாய்த் தன் இருதயத்தில் தீங்கு நினையாமலும் இருங்கள் என்றார்.
English:- Do Not Oppress The Widow Or The Fatherless, The Alien Or The Poor. In Your Hearts Do Not Think Evil Of Each Other.'
11 - அவர்களோ கவனிக்க மனதில்லாமல் தங்கள் தோளை முரட்டுத்தனமாய் விலக்கி, கேளாதபடிக்குத் தங்கள்செவிகளை அடைத்துக்கொண்டார்கள்.
English:- "But They Refused To Pay Attention; Stubbornly They Turned Their Backs And Stopped Up Their Ears.
12 - வேதத்தையும் சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஆவியின் மூலமாய் முந்தின தீர்க்கதரிசிகளைக்கொண்டு சொல்லியனுப்பின வார்த்தைகளையும் கேளாதபடிக்குத் தங்கள் இருதயத்தை வைராக்கியமாக்கினார்கள்; ஆகையால் மகா கடுங்கோபம் சேனைகளின் கர்த்தரிடத்திலிருந்து உண்டாயிற்று.
English:- They Made Their Hearts As Hard As Flint And Would Not Listen To The Law Or To The Words That The Lord Almighty Had Sent By His Spirit Through The Earlier Prophets. So The Lord Almighty Was Very Angry.
13 - ஆதலால் நான் கூப்பிட்டபோது, அவர்கள் எப்படி கேளாமற்போனார்களோ அப்படியே அவர்கள் கூப்பிட்டபோது நானும் கேளாமலிருந்தேனென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
English:- " 'When I Called, They Did Not Listen; So When They Called, I Would Not Listen,' Says The Lord Almighty.
14 - அவர்கள் அறியாத புறஜாதிகளுக்குள்ளே அவர்களைப் பறக்கடித்தேன்; அதினால் அவர்கள் பின்வைத்துப்போன தேசம் போக்குவரத்தில்லாமல் பாழாய்ப்போயிற்று; அவர்கள் இன்பமான தேசத்தைப் பாழாய்ப்போகப்பண்ணினார்கள் என்றார்.
English:- 'I Scattered Them With A Whirlwind Among All The Nations, Where They Were Strangers. The Land Was Left So Desolate Behind Them That No One Could Come Or Go. This Is How They Made The Pleasant Land Desolate.' "